தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு
1 தேவராஜ்ய ஊழியப் பள்ளி ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறதற்கு’ நம்மை படிப்படியாக பயிற்றுவிக்கிறது. (2 தீமோ. 2:15) நீங்கள் அதில் சேர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் தகுதிபெற்று இன்னும் அதில் சேர்ந்துகொள்ளவில்லையென்றால் ஏன் இப்போதே அந்த அருமையான ஏற்பாட்டில் உங்கள் பெயரைக் கொடுத்துச் சேர்ந்துகொள்வதன் மூலம் பயனடையக்கூடாது?
2 அந்தப் பள்ளியில் இருக்கும் முக்கியமான அம்சம், வாராந்தர பைபிள் வாசிப்புப் பகுதியாகும். உங்களுடைய தனிப்பட்ட படிப்பு அட்டவணையில் நியமிக்கப்பட்ட அந்தப் பைபிள் அதிகாரங்களைப் படித்துப்பார்ப்பதும் இடம்பெறவேண்டும். அப்போது காலப்போக்கில் நீங்கள் முழு பைபிளையும் படித்துவிடுவீர்கள்.
3 பேச்சு எண் 2-ல் வாசிக்கப்படும் பைபிள் பகுதி, 1993 பள்ளி அட்டவணை முதற்கொண்டு, இனி நடுவில் எந்தக் குறிப்பும் சொல்லாமல் இடைநிறுத்தமின்றி முழுவதுமாக வாசிக்கப்படும். அப்படியானால் இந்தப் பேச்சைக் கொடுக்கும் மாணாக்கர் தன்னுடைய பேச்சின் அறிமுகத்திலும் முடிவுரையிலும் மட்டுமே விளக்கமான தகவலைப் பேசுவார். பேச்சு எண் 2-ற்கு நியமிக்கப்பட்டிருக்கிற வசனங்களின்பேரில் குறிப்புச் சொல்வதை, பைபிளின் சிறப்புக் குறிப்புகளைச் சொல்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கிற சகோதரர் குறைவாக சொல்லவேண்டும், அவ்வாறு செய்தால், அந்தப் பேச்சையுடைய மாணாக்கர் தன்னுடைய பைபிள் வாசிப்புப் பகுதியிலுள்ள தகவலை முழுமையாக சொல்வார்.
4 பள்ளி கண்காணி, 2, 3, 4 பேச்சு கொடுப்பவர்களுடைய பேச்சு ஆலோசனை சீட்டில் குறியிடுவார். பேச்சு ஆலோசனை சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அதே ஒழுங்கைப் பின்பற்றவேண்டிய அவசியமில்லை. மாறாக, மாணாக்கர் முன்னேறவேண்டிய அவசியம் இருக்கும் அந்தக் குறிப்புகளின்பேரில் அவர் குறிப்பான ஆலோசனை கொடுப்பார். பேச்சு நியமிப்பு எண் 1-ஐ கையாளும் பேச்சாளருடைய ஆலோசனை சீட்டில் குறியிடவேண்டிய அவசியமில்லை, ஆனால் தேவைப்படும்போது, தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
5 தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அளிக்கப்படும் பயிற்சியையும் உட்பட தகுதிபெறக்கூடிய எல்லோரும் யெகோவா செய்திருக்கும் ஆவிக்குரிய ஏற்பாடுகளனைத்தையும் முழுமையாக அனுகூலப்படுத்திக்கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட பயிற்றுவிப்பு மிகவும் அதிகமாக பலன்தரக்கூடிய ஓர் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு வழிநடத்தும்.—1 தீமோ. 4:7.