உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/93 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ஆராய்ச்சி செய்வது எப்படி
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • அருமையான ஆலோசனை வழங்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—தொலைபேசி மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 1/93 பக். 7

கேள்விப் பெட்டி

◼ பைபிள் கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுவதற்கும், தனிப்பட்ட விஷயங்களில் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் சங்கத்திடம் நாம் தொலைபேசியின் மூலம் அணுகவேண்டுமா?

காரியங்களைச் சீக்கிரமாக செய்வதற்கு அநேகர் தொலைபேசியை பயன்படுத்துகின்றனர். ஆனால் வேகத்தைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. தனிப்பட்ட செளகரியத்துக்கு முதலிடம் கொடுப்பது உலகில் சர்வசாதாரணமாக இருக்கிறது; மக்கள் பிரயாசமெடுக்க விரும்புவது கிடையாது.

கடவுள் கூறியிருக்கிற புத்திமதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் என்னே முரணாயிருக்கிறது! அறிவை, புதையலைத் தேடுவதுபோல தேடவேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார், அவ்வாறெனில் நாம்தானே முயற்சித்துப் பார்க்க மனமுவந்தவர்களாக இருக்கவேண்டும். இப்படி செய்வது நீண்டகால திருப்தியைக் கொடுக்கிறது என்று அனுபவம் நிரூபித்துக் காட்டுகிறது.—நீதி. 2:1-4.

கூட்டத்தில் பங்குபெற தயாரிக்கையிலும், ஒரு தனிப்பட்ட பிரச்னையை எதிர்ப்படுகையிலும் ஒரு கேள்வி எழும்பும்போது நாம் இத்தகைய பிரயாசை எடுப்பது பொருத்தமாயிருக்கிறது. வெறுமென சங்கத்திற்குத் தொலைபேசியின் மூலம் பேசி தெரிந்துகொள்வதற்குப் பதிலாக நாம்தானே பைபிளையும் நம்முடைய பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்து பயனடையவேண்டும். விசேஷமாக காவற்கோபுர அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை-யிலுள்ள (ஆங்கிலம்) அருமையான வேதவசனங்களையும் பொருள் அகரவரிசைத் தொகுப்பு அட்டவணைகளையும் எடுத்துப் பார்க்கவேண்டும்.

இப்படி நாம் ‘புதையலைத் தேடுவதுபோல தேடிய’ பின்பு, இன்னும் நமக்கு உதவி தேவைப்பட்டால், உள்ளூர் சபையிலுள்ள மூப்பரை அணுகலாம். வேண்டிய தகவலை ஆராய்ச்சி செய்வதில் மூப்பர்களுக்குப் போதிய பைபிள் அறிவும் அனுபவமும் இருக்கிறது. ஒரு தனிப்பட்ட பிரச்னையின்பேரில் ஆலோசனைகளோ, அதன்பேரில் தீர்மானம் எடுப்பதற்கோ, அப்பிரச்னையின் நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப்பார்த்து அவர்கள் உதவிகொடுப்பது விசேஷமாக பொருத்தமாயிருக்கும், ஏனெனில் நமக்கு அவர்கள் நெருங்கியவர்களாகவும் நம்முடைய சூழ்நிலையை நன்கு அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.—அப். 8:30, 31 ஒத்துப்பாருங்கள்.

ஒருவேளை சங்கத்திலிருந்து நேரடியாக இன்னுமதிகமான தகவலை அறிந்துகொள்வது அவசியமாக இருந்தால், ஒரு கடிதம் எழுதுவது எப்போதும் நல்லது. இதை எழுதுவதற்கு மூப்பர்களுங்கூட உதவிசெய்வார்கள். இவ்வாறு கடிதம் எழுதுவது, போதுமான ஆராய்ச்சியையும் போதுமான விளக்கத்தையும் அடிப்படையாகக்கொண்டு மறுமொழி எழுதுவதற்கு நேரத்தைக் கொடுக்கிறது. இது தொலைபேசியின் மூலம் பேசினால் கூடாத காரியமாயிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்