யெகோவாவின் சாட்சிகளுடைய 1993“தெய்வீக போதனை” மாவட்ட மாநாடு
1 ஓர் இருள்நிறைந்த உலகத்தில் ஒளி கொண்டுச்செல்வோராக சேவிக்கும் சிலாக்கியத்திற்கு, உலகமுழுவதும் நடைபெற்ற 1992 “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராயிருந்த எல்லோருமே தங்கள் போற்றுதலை அதிகரித்தனர். (2 பேதுரு 1:19) உலகமுழுவதிலும் இருக்கும் அன்பார்ந்த ஆட்கள், ஆயிரக்கணக்கானோர், தங்கள் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தி, ஒளி கொண்டுச்செல்வோரின் பேரணியில் சேர்ந்துகொண்டது எவ்வளவு பேரானந்தத்தைத் தந்தது! பலன்தரக்கூடிய ஆட்களாக இருப்பதற்கு, ஒளி கொண்டுச்செல்வோர் மகத்தான போதகரையும் பெரிய போதகரையும் பின்பற்றவேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் “சாரம்” நிறைந்த செய்தியைக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான், இந்த முக்கியமான விஷயத்தைக்கொண்டு மக்களுடைய இதயங்களைச் சென்றெட்டுவதில் மிக திறம்பட்ட ஆட்களாவதற்கு இந்த வருடத்தின் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகள் நமக்கு உதவிசெய்யும். (சங். 119:160; மத். 28:20) பூமி முழுவதும் உள்ள மிஷனரிகள் தங்களுடைய தாய்நாட்டுக்குச் சென்று இந்த மாநாடுகளுக்கு ஆஜராக முன்னரே திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு நீங்களும் உங்களுடைய குடும்பமும் திட்டங்களைக் கொண்டிருக்கிறீர்களா? இந்தப் பலமான ஆவிக்குரிய விருந்திற்கு ஆஜராக ஏன் உங்கள் பைபிள் மாணாக்கரை உற்சாகப்படுத்தக்கூடாது?
2 நீங்கள் மாநாட்டிற்கு உங்கள் ஏற்பாடுகளைச் செய்யும்போது அவற்றைக் கவனமாகவும் ஜெபசிந்தையோடும் செய்வதற்கு நிச்சயமாயிருங்கள். அப்போது ஆரம்ப பாட்டு முதல் முடிவு ஜெபம் வரை நீங்கள் அந்தச் சந்தோஷந்தரும் ஆவிக்குரிய நிகழ்ச்சியை எல்லா நான்கு நாட்களும் அனுபவித்து மகிழலாம். அன்புடையவர்களாக, உதவி தேவைப்படக்கூடிய ஆட்களும், விசேஷமாக புதிதாக அக்கறை காட்டும் ஆட்களும் எல்லா நிகழ்ச்சிக்கும் ஆஜராவதற்கு உங்களுடைய திட்டத்தில் அவர்களைச் சேர்த்துகொள்ளுங்கள். (கலாத். 6:10) வியாழக்கிழமையன்று நிகழ்ச்சி பிற்பகல் 1:30-க்குத் தொடங்கி சுமார் 5:00 மணிக்கு முடிவடைகிறது. வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நிகழ்ச்சி காலை 9:20-க்குத் தொடங்கி, பாட்டு ஜெபத்தோடு பிற்பகல் சுமார் 5:00 மணிக்கு முடிவடைகிறது. ஞாயிற்றுக்கிழமையில் காலை நிகழ்ச்சி 9:20-க்கு தொடங்கி அந்த நாளின் நிகழ்ச்சி பிற்பகல் சுமார் 4:10-க்கு முடிவடைகிறது. பின்வரும் இந்தத் தகவலும் நீங்கள் செய்யும் முன்தயாரிப்புகளோடு உங்களுக்கு உதவி செய்யும்.
3 இந்தியாவில் இந்த ஆண்டு 18 மாநாடுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். முதல் மாநாடு செப்டம்பர் மாத முடிவில் நடக்கும். மாநாடுகள் தொடர்ச்சியாக அக்டோபர் மாதமும் நவம்பர் மாதமும் நடக்கும். டிசம்பர் மாதத்தில் இரண்டு மாநாடுகள் கேரளத்தில் நடக்கும். இதுவரை நாம் கடந்த சில வருடங்கள் சுமார் 30 மாநாடுகளைக் கொண்டிருந்தோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வருடம் ஒவ்வொரு மாநாட்டிற்கும் அநேக சகோதரர்கள் ஒன்றுகூடிவருவதற்குக் குறைந்த மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான மாநாடுகள் மிகப் பெரிய மாநாடுகளாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெரிய கூட்டங்கள் சகோதரர்களுக்குள்ளே அதிக உற்சாகத்தையூட்டி சுற்றியிருக்கும் ஆட்களுக்கு ஒரு நல்ல சாட்சியாக அமையும். மேலும் மாநாட்டுப் பேச்சாளர்களைத் தெரிந்தெடுப்பதில் மிகவும் கவனமாக தெரிந்தெடுக்க இது எங்களை ஊக்குவிக்கும், பெரும்பான்மையான மாநாடுகளின் தரத்தை இது மேம்படுத்தும்.
4 தங்கும்வசதி பெறுவதற்குரிய அறிவுரைகள்: வழக்கம்போல இந்த வருடமும் உங்களுக்கு அறைவசதி விண்ணப்ப படிவங்களை நாங்கள் அனுப்பிவைப்போம். மாநாடு தங்கும்வசதி ஏற்பாட்டின் மூலம் தங்கும்வசதியை விரும்பும் ஆட்கள் எல்லோரும் வேண்டிய அனைத்துத் தகவலையும் அறைவசதி விண்ணப்ப படிவங்களில் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பூர்த்திசெய்யவேண்டும். பின்னர் இதை அவர்களுடைய சபை செயலரிடமோ மாநாட்டு ஒத்திசைவிப்பவரிடமோ கொடுத்து அவர் அதை சரிபார்த்து, கையொப்பமிட்டு, எந்த மாநாட்டுக்கு நீங்கள் ஆஜராவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்களோ அந்த மாநாட்டு நகரிலுள்ள தங்கும்வசதி இலாகாவுக்கு உடனடியாக அனுப்பிவைக்கவேண்டும். தயவுசெய்து இதை உங்களுடைய மாநாடு வருவதற்கு வெகு முன்னமே நீங்கள் அனுப்புங்கள். ஓர் அறைக்கு ஓர் அறைவசதி விண்ணப்ப படிவம் பூர்த்திசெய்யவேண்டும். இந்தப் படிவத்தில் அந்த ஓர் அறையில் தங்கும் நபரின் பெயர்கள் மாத்திரமே இருக்கவேண்டும். ஓர் அறையில் தங்குவது கூடாதென்றால் அறைவசதி இலாகா அந்தத் தொகுதியிலுள்ள சில ஆட்களை வேறொரு அறையில் தங்கவைப்பார்கள்.
5 ஹோட்டல் அறைகளில் தங்கவேண்டுமென்று விருப்பப்பட்டால், அதையும், எவ்வளவு கட்டணம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதையும் உங்கள் படிவத்தின் வலது பக்கபகுதியில் காட்டுங்கள். உங்கள் அறைவசதி விண்ணப்ப படிவத்தோடுகூட, தெரிந்துகொண்ட கட்டணத்துக்கு மொத்த நாளுக்குண்டான பணத்துக்குரிய மனி ஆர்டரை அனுப்ப நீங்கள் தயவுசெய்து நிச்சயமாயிருங்கள். அஞ்சலில் கடிதங்கள் தாமதமாகவும் காணப்படாமலும் போவதால், உங்களுடைய விண்ணப்பத்தை முன்கூட்டியே அனுப்பிவிட நிச்சயமாயிருங்கள். நீங்கள் உங்கள் தபாலை பதிவுசெய்து, கையொப்பமிட்டு திரும்ப பெறவேண்டிய கார்டோடு அனுப்புவது நல்லது.
6 தங்கும்வசதி கிடைத்தவுடனே, உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அறைவசதி கொடுத்த நபரிடமோ ஹோட்டல் நிர்வாகியிடமோ நீங்கள் இன்ன தேதியில் வருவீர்கள் என்பது தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டவுடன் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிற அறையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
7 நீங்கள் மாநாடு நடக்கும் நகரத்துக்குச் சென்று சேர திட்டமிட்டுள்ள தேதியை சரிபார்க்கையில், அந்தத் தேதியில் அங்கு இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அறைவசதி ஒதுக்கீடுகள் நீங்கள் கேட்டபடியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. நீங்கள் சென்று சேர்ந்தவுடன், கூடிய சீக்கிரத்தில் தங்கவேண்டிய அறைக்குச் செல்லுங்கள். ஏதோ தவிர்க்கமுடியாத காரணத்தினிமித்தம் திட்டமிட்டபடி உங்களால் சென்றுசேரமுடியாதபோது, ஹோட்டலில் அல்லது பலர் தங்கும் டார்மெட்டரியில் ஒருவேளை உங்கள் தங்குவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் தயவுசெய்து அந்த ஹோட்டல் நடத்துனரிடம் அதைக் குறித்து தெரிவியுங்கள்.
8 தனிப்பட்ட தேவைகள்: தனிப்பட்ட தேவைகளையுடைய ஆட்களை கவனிக்கும் ஏற்பாடுகள் அவர்கள் ஆஜராகும் சபையினால் செய்யப்படவேண்டும். அந்தத் தனிப்பட்ட நபர்களின் சூழ்நிலையை அறிந்திருக்கும் மூப்பர்களும் மற்ற ஆட்களும் அன்பான விதத்தில் அவர்களுக்கு உதவி செய்யலாம். முழுநேர ஊழியத்தில் இருக்கும் நபர்கள், முதிர்வயதுள்ளவர்கள், நோயாளிகள் போன்ற மற்றவர்களுடைய தேவைகளைப் பிரஸ்தாபிகள் சிந்தித்துப்பார்ப்பது அவசியமாயிருக்கிறது. பிரஸ்தாபிகள் தங்களோடுகூட அழைத்துக்கொண்டு செல்வதன் மூலமோ மற்ற வழிகளில் அவர்களுடைய தேவைகளை கவனித்துக்கொள்வதன் மூலமோ அவர்களுக்கு உதவலாம்.—யாக். 2:15-17; 1 யோவான் 3:17, 18.
9 சபையிலுள்ளவர்கள் ஒருவேளை அவர்களுக்கு உதவ முடியவில்லையென்றால் அறைவசதி இலாகா தனிப்பட்ட தேவைகளையுடைய பிரஸ்தாபிகளுக்கு வேண்டிய பொருத்தமான அறைவசதி ஏற்பாடுகளைச் செய்துதர நிச்சயமாக முயற்சி செய்வார்கள். இப்பேர்ப்பட்ட பிரஸ்தாபிகள் தங்களுடைய சூழ்நிலையை சபையின் செயலரோடு கலந்து பேசலாம். இப்பேர்ப்பட்ட ஆட்களுக்கு அறைவசதி ஏற்பாடுகளைச் செய்துதர சபை உதவக்கூடுமா என்பதைப் பற்றி செயலர் சபை ஊழியக் குழுவோடு பேசவேண்டும். தேவையான உதவியை சபை கொடுக்கமுடியவில்லையென்றால், செயலர் மாநாட்டு அறைவசதி இலாகாவுக்கு ஒரு தனி கடிதத்தை எழுதவேண்டும். செயலர் சூழ்நிலையை விளக்கமாக எழுதவேண்டும். இவை எல்லாமே மாநாடு நடப்பதற்கு வெகு முன்னரே செய்யப்படவேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நபரிடம் அவருடைய தங்கும்வசதியைக் குறித்து நேரடியாக தெரிவிக்கப்படும்.
10 சிலசமயங்களில், தனிப்பட்டவர்களுடைய வீட்டில் தங்குவதற்கு எழுதி கேட்கும்போது அவர்கள் வீட்டில் தங்க இடம் கிடைக்கிறது. இப்படி தங்குவதற்கு எழுதி கேட்பவர்கள் சகோதரர்களுடைய உபசரிப்புத்தன்மையைக் கருதி மாநாட்டுக்கு முன்பும் மாநாடு முடிந்த பிற்பாடும் கூடுதலாக ஒருசில நாட்கள் தங்கிவிட்டுச் செல்ல எதிர்பார்ப்பது நல்லதல்ல. இந்த அறைகள் மாநாடு நடக்கும் அந்த நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு மற்றவர்களுடைய வீட்டில் தங்கியிருக்கும் நபர்கள், அவர்களும் பிள்ளைகளும் தங்கியிருக்கிற வீட்டில் மரியாதையோடு நடந்துகொண்டு, அவர்களுடைய வீட்டில் தங்களுடைய பிள்ளைகள் வீட்டிலுள்ள சாதனங்களை அங்குமிங்கும் சிதறிப்போட்டு, பொருட்களை உடைத்து, வீட்டிலுள்ள தனிப்பட்ட அறைகளுக்குச் செல்லாதபடிக்கு அவர்களை கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டுக்காரர்கள் இப்படி தொந்தரவுகளை அனுபவித்தால், மாநாட்டிலுள்ள அறைவசதி கண்காணியினுடைய கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். அவர் உதவிசெய்ய பிரியப்படுவார்.
11 நியமிக்கப்பட்ட இடத்திலில்லாமல் வெளியே சென்று ஆஜராகும் பிரதிநிதிகள்: பெரும்பாலும் எல்லோருடைய விஷயத்திலும் நீங்கள் ஆஜராகவேண்டிய மாநாடு உங்களுடைய சபைக்கு அருகாமையிலிருக்கும் இடமாகும். அநேக பிரஸ்தாபிகள் தங்களுடைய சபைக்கு நியமிக்கப்பட்ட மாநாட்டிற்கு ஆஜராவார்கள் என்று எண்ணி, போதுமான இருக்கைகள், பிரசுரங்கள், உணவு, தங்கும்வசதி ஏற்பாடுகள் ஆகியவை செய்யப்படுகின்றன. என்றாலும், நல்ல காரணங்களோடு, உங்களுக்கு நியமிக்கப்பட்ட மாநாட்டுக்கு ஆஜராகாமல் வேறொரு மாநாட்டுக்குச் சென்று ஆஜராக தங்கும்வசதிக்கு ஏற்பாடு செய்வது அவசியமாயிருந்தால், நாங்கள் பின்னர் உங்களுக்குக் கொடுக்கும் மாநாடு அலுவலக பட்டியலிலுள்ள முகவரிக்கு எழுதி, உங்களுடைய அறைவசதி விண்ணப்பப் படிவத்தை அனுப்பிவைக்கலாம்.
12 உங்களுடைய ஒத்துழைப்புத் தேவை: அறைவசதி ஏற்பாட்டிலிருந்து பயனடைவது, உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பைச் சார்ந்தே இருக்கிறது. (எபி. 13:17) இவ்வாறு, சில ஹோட்டல்களில் தங்க இடம் கொடுப்பதற்கு அவர்களை ஒத்துக்கொள்ள வைப்பதில் இன்னும் நாங்கள் எதிர்ப்படும் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்குச் சங்கத்தின் அறைவசதி ஏற்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பைத் தருமாறு நாங்கள் யாவரையும் கேட்டுக்கொள்கிறோம். அநேக பிரஸ்தாபிகள் முந்தைய மாநாடு இடைச்சேர்க்கையில் கொடுக்கப்பட்ட தெளிவான வழிநடத்துதலை மனதில் ஏற்று செயல்படுவதால் அநேக நல்ல விளைவுகளை அனுபவித்து வருகிறோம். என்றாலும், ஹோட்டலில் தங்கும் வசதி கிடைப்பதற்கு பின்கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனியுங்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக்கொள்வது இன்னும் அவசியமாயிருக்கிறது:
(எ) தங்க விரும்பாத எந்த ஹோட்டலிலும் தனிப்பட்ட விதத்தில் தயவுசெய்து நீங்கள் அறைவசதி ஏற்பாடு செய்யாதீர்கள். அல்லது ஹோட்டல்களைப் பார்த்து, அதில் சிறந்த ஒன்றைத் தெரிந்தெடுத்து மற்றதை வேண்டாமென்று சொல்வதற்கு, ஒரு ஹோட்டலுக்கும் அதிகமாக அறைவசதி ஏற்பாடு செய்யாதீர்கள். (மத். 5:37) இது நல்லதல்ல, இது ஹோட்டல்களுடைய வியாபாரத்தை பாதிக்கிறது மேலும் மிகவும் தேவையாயிருக்கிற மற்ற பிரஸ்தாபிகள் அந்த அறைகளை உபயோகிக்க முடியாதபடி செய்கிறது.
(பி) பெயரில்லாமல் ஒவ்வொரு அறைக்கும் தேவையான பணத்தை அனுப்பாமல், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அறைவசதி ஏற்பாடு செய்யாதீர்கள்.
(சி) அறையில் சட்டமும் நிர்வாகமும் அனுமதிப்பதற்கு மேற்பட்ட நபர்களை வைத்திராதீர்கள். சாதாரணமாக, பிள்ளைகள் உட்பட நான்கு அல்லது ஐந்து நபர்களே ஓர் அறையில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். எவ்வளவு ஆட்கள் உங்கள் அறையில் தங்குவார்கள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டதைச் சார்ந்தே நீங்கள் அறை கட்டணத்தைச் செலுத்துகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.
13 இந்தக் காரியங்களில் கீழ்ப்படிய தவறுவது கலந்துபேசி கட்டணத்தைக் குறைத்து முடிவுக்கு வருவதைக் கடினமாக்குகிறது. மேலும் யெகோவாவுடைய நாமத்துக்கும் அமைப்புக்கும் அவை அவதூறைக் கொண்டுவருகின்றன. (சங். 119:168) ஆகவே, எந்த ஹோட்டலாவது அப்பேர்ப்பட்ட பிரச்னைகளை எதிர்ப்படுகின்றனவா மேலும் யார் அப்படிச் செய்கின்றனர் என்று அவர்களோடு சோதிக்குமாறு சங்கம் அறைவசதி இலாகாவை கேட்கும். மாநாட்டு நிர்வாகம் நம் சகோதரர்களுக்குத் தங்களால் கூடியவரை பணத்தை மிச்சப்படுத்த கடினமாக உழைக்கின்றனர். நம்முடைய சிறந்த அக்கறைகளைக் கருதியே செய்யப்படுவதன் காரணமாக நாம் அனைவரும் சங்கத்தின் இந்த அறைவசதி ஏற்பாடு தொடர்ந்து செய்யப்படுவதற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கவேண்டும். ஒத்துழைக்கக்கூடிய ஹோட்டல்களில், நல்ல-தரமுள்ள தங்கும்வசதி ஏற்பாட்டை கண்டுபிடிக்க அறைவசதி இலாகா முயற்சி செய்கின்றனர். பிரதிநிதிகள் மாநாட்டில் அளிக்கப்படும் நல்ல ஆவிக்குரிய நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ்வதற்கு அவர்கள் கூடியவரை செளகரியமாகவும் சிக்கனமாகவும் தங்குவதற்கு உதவுவதே எங்களுடைய நோக்கமாகும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஆண்டு 1993 மாவட்ட மாநாடுகளுக்குரிய இடங்கள், தேதிகள், மொழிகள், வட்டார நியமிப்புகள் ஆகியவற்றின் பட்டியல்
Location Dates Language Circuits Covered
Bombay September 23-26 E/HI MA-1
Hyderabad October 7-10 E/TU AP-1, 2A
Mangalore October 14-17 KN KA-2
Madras October 14-17 E/TL TN-1
Bangalore October 21-24 E/TL TN-2
Mysore October 21-24 KA KA-2
Calcutta October 21-24 E/BE WB-1 A, B
Madurai October 28-31 TL TN-3, 4
Jamshedpur October 28-31 E/HI WB-1 A
Gauhati October 28-31 E/AE AS-1
Ahmedabad November 11-14 GU MA-2 B
Port Blair November 18-21 HI AP-2 B
Kathmandu November 18-21 NP AS-1B
Margao November 18-21 E/KT KA-1
New Delhi November 25-28 E/HI UP-1 A, B
Pune November 25-28 MR MA-2 A
Kottayam December 16-19 MY KE-4 - 7
Calicut December 23-26 MY KE-1, 2, 3