புதிய மற்றும் அனுபவம்வாய்ந்தஊழியருக்கான தேவைகள்
1 சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு கேட்டார்: “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?” நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளில் தாவீது இவ்வாறு பதிலளித்தார்: “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.” (சங். 15:1, 2) அந்தத் தேவைகள் மாறிவிடவில்லை. இன்று கிறிஸ்தவ சபையில் தொழுதுகொள்ள வருகிற அனைவரும் ஒழுக்கயீனமான பழக்கங்களையும் குடிவெறியையும் கண்டிப்பாய் கைவிடவேண்டும். யெகோவாவின் மக்கள் மத்தியில் சண்டைசெய்கிற, மூர்க்கக் கோபமுள்ள, அல்லது சூதுவாதுடன் பேசுகிறவர்களாக இருப்போருக்கு எந்த இடமுமில்லை. புதிய ஊழியர்களாக இருந்தாலுஞ்சரி அனுபவம்வாய்ந்தவர்களாக இருந்தாலுஞ்சரி, நாம் கடவுளுடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ள உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்வதில் உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.—கலா. 5:19-21.
2 புதிய ஆட்கள் அநேகர் யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவுகொண்டுவருகிறார்கள். இளைஞரும் முதியோரும் கடவுளுடைய தேவைகளுக்கு இசைவாக தங்களுடைய வாழ்க்கைமுறையை வைத்துக்கொள்வதற்கு ஒரே மாதிரியாகத் தங்களுடைய சிந்தனையை மாற்றியிருக்கிறார்கள். தென் அமெரிக்காவிலுள்ள ஒரு பையன் பெற்றோரளிக்கும் வழிநடத்துதல் இல்லாமல் வளர்ந்துவந்தான்; மேலும் வினைமையான ஆளுமைப் பிரச்னைகளை வளர்த்திருந்தான். அவன் 18 வயதாவதற்குள்ளாக, போதைப் பொருட்களுக்கு அடிமையானான், மேலும் இந்தப் பழக்கத்தைத் தொடர திருடினதற்காக ஏற்கெனவே சிறையில் காலத்தைச் செலவழித்திருந்தான். ஒரு பைபிள் படிப்பின்மூலமாக, அவன் தன்னுடைய முன்னாள் கூட்டாளிகளோடு கூட்டுறவுகொள்வதை நிறுத்திவிட்டு, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் புதிய நண்பர்களைக் கண்டுபிடித்தான்; கடைசியாகத் தன்னுடைய வாழ்க்கையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தான்.
3 அதேபோல், நம்முடைய நடத்தை எல்லாவற்றிலேயும் “உண்மையான நீதியிலும் பற்றுறுதியிலும்” கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு நாம் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (எபே. 4:24, NW) நாம் கடவுளுடைய பர்வதம்போன்ற அமைப்பில் நிலைத்திருக்க வேண்டுமாகில், “பழைய மனுஷனையும் (ஆளுமையையும், NW) அவன் செய்கைகளையும் களைந்துபோ”டுவதற்கும் “பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் [நாம் தாமே] தரித்துக்”கொள்வதற்கும் நமக்குக் கடமையிருக்கிறது.—கொலோ. 3:9, 10.
4 கடவுளுடைய வார்த்தை, ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு: பைபிள் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்பட்ட யெகோவாவின் ஆளுமை, நம்முடைய சிந்தனையையும் நம்முடைய செயல்களையும் ஓர் உடன்பாடான முறையில் சக்திவாய்ந்த விதமாகப் பாதிக்கக்கூடும். (ரோ. 12:2) அவருடைய வார்த்தை, மனங்களை மாற்றி இருதயங்களை ஆராயும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. (எபி. 4:12) ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமம், நாம் ஒழுக்க சம்பந்தமாக நேர்மையான வாழ்க்கையை நடத்தவும், வெளியரங்கமான ஊழியத்தில் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருக்கவும், கிறிஸ்தவக் கூட்டங்களைத் தவறவிடாமலிருக்கவும் யெகோவாவின் சித்தம் தேவைப்படுத்துகிறது என்பதை நமக்குப் போதிக்கிறது.
5 கையாளுவதற்குக் கடினமான இந்தக் காலங்களில், அதிகரித்துவரும் அழுத்தங்கள் கடவுளுடைய சட்டங்களை மீறும்படிக்கு ஒரு கிறிஸ்தவனைச் செல்வாக்குச் செலுத்தக்கூடும். தனிப்பட்ட படிப்பு, குடும்பப் படிப்பு, சபைக் கூட்டங்கள், அல்லது ஊழியத்தை அசட்டை செய்தால், முன்பு பலமாக இருந்த கிறிஸ்தவனுங்கூட விசுவாசத்திலிருந்து படிப்படியாகச் செயலிழந்துபோகக்கூடும், ஒருவேளை தவறான நடத்தைக்குள் விழுந்துவிடக்கூடும். அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்விதமாக எழுதினார்: “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் (எப்பொழுதும், NW) எச்சரிக்கையாயிரு,” மேலும் “நான் சொல்லுகிறவற்றிற்கு எப்பொழுதும் கவனஞ்செலுத்து.”—1 தீ. 4:16; 2 தீ. 2:7, NW.
6 புதிதாகக் கூட்டுறவுகொண்டவர்களாக இருந்தாலுஞ்சரி பல ஆண்டுகள் அனுபவத்தின்மூலம் முதிர்ச்சிவாய்ந்தவர்களாக இருந்தாலுஞ்சரி, நம்முடைய ஜீவன் பாதுகாக்கப்படவேண்டுமாகில், கடவுள் எதிர்பார்க்கும் தகுதிகளைத் தெளிவாக கவனத்தில் வைத்து, ஊழியத்தில் முழுமையான சமநிலையில் இருக்கவேண்டும், மேலும் நம்முடைய நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளவேண்டும். (1 பே. 1:13-16) கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் தகுதிகளை அனுதினமும் கைக்கொள்ளுவது முற்றிலும் இன்றியமையாததாய் இருக்கிறது.
7 இந்த 1993 ஊழிய ஆண்டின் கடைசி மாதத்தின்போது, வெளி ஊழியத்திலிருப்பதை உங்களுடைய இலக்காக ஆக்கிக்கொள்ளுங்கள். மற்றவர்கள் விசுவாசத்தில் வளர உதவிசெய்வதற்கும் வெளி ஊழியத்தில் பலனை அதிகரிக்கச்செய்வதற்கும் தீர்மானமுள்ளவர்களாயிருங்கள். (ரோ. 1:12) தனிப்பட்ட படிப்பு, குடும்பப் படிப்பு, கூட்டங்களில் ஆஜராயிருத்தல் போன்றவற்றில் ஒழுங்காக இருப்பதன்மூலம் உங்களுடைய சிந்தனைகளைச் சரியான காரியங்களின்மீது வைத்துக்கொள்ளுங்கள். (பிலி. 4:8) கடவுள் எதிர்பார்க்கும் தகுதிகளுக்கு இசைவாக வாழ்வதன்மூலம் அவரைப் பிரியப்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி கவனிக்கப்படாமற்போகாது.—கொலோ. 3:23, 24.