அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரிய அளவு 40.00 ரூபாய்க்கும் சிறிய அளவு 20.00 ரூபாய் நன்கொடைக்கும். அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு-வருட சந்தா 60.00 ரூபாய். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் 30.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா மறுக்கப்படுகிற இடங்களில், பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகளை 3.00 ரூபாய்க்கு அளிக்கலாம். பொருத்தமாக இருக்கும்போது கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் (Mankind’s Search for God) புத்தகத்தையும் 30.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.நவம்பர்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்புடன் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (The Bible—God’s word or Man’s) புத்தகத்தைச் சேர்த்து 72.00 ரூபாய்க்கு அல்லது தனித்தனியாக முறையே 60.00 ரூபாய், 12.00 ரூபாய் நன்கொடைக்கு. இது ஏற்றுக்கொள்ளப்படாத இடங்களில், அல்லது அந்த மொழிகளில் இவை கிடைக்கவில்லையென்றால், 192-பக்கமுள்ள பழைய புத்தகங்களை விசேஷ அளிப்பாக ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச்சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்: ஆங்கிலம்: மனிதன் வந்தது பரிணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா? மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” கன்னடம்: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? பெங்காலி அல்லது நேப்பாளி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டையும் பஞ்சாபி தெரிந்த ஆட்களுக்கு “இதோ!” சிற்றேட்டையும் அளிக்கலாம். மலையாளத்தில், உன் இளமை—அதை மிக நன்றாய் பயன்படுத்துதல்! புத்தகத்தை 12.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், என்னுடைய பைபிள் கதைப் புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். (என்றும் வாழலாம் சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்.) குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனா (S-14)-ல் ஆர்டர் செய்யவேண்டும்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் சபை கணக்குகளை செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு முடிந்தவரை விரைவிலேயே தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்ட பிறகு சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.
◼ அக்டோபரில் துணைப்பயனியர் செய்ய திட்டமிடும் பிரஸ்தாபிகள் தங்களுடைய விண்ணப்பத்தை முன்னதாக சமர்ப்பிக்கவேண்டும். பிரசுரங்கள் மற்றும் பிராந்தியத்திற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இது மூப்பர்களை அனுமதிக்கும்.
◼ மறுபடியும் நிலைநாட்டப்பட மனவிருப்பமுடைய சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது கூட்டுறவிலிருந்து விலகிக்கொண்ட நபர்கள் சம்பந்தமாக, ஏப்ரல் 15, 1991 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளின்பேரில் செயல்படும்படி மூப்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
◼ சங்கம் இப்பொழுது 1970 முதல் 1979 வரையான ஆண்டுகளுக்கான ஆங்கில காவற்கோபுரம் தொகுப்புகளை நிரந்தர இருப்புப் புத்தகங்களாக தயாரித்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்புகளைப் பெற விருப்பமுள்ள எவரும் சபையின்மூலம் அவற்றை கேட்கலாம். தொகுப்புகள் விசேஷ விண்ணப்ப புத்தகங்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
◼ பூனாவில் நடக்கும் 1993 மாவட்ட மாநாட்டிற்கான நிகழ்ச்சிநிரல், வியாழக்கிழமை பிற்பகல் 12:20 மணிக்கு ஆரம்பமாகும்.
◼ சென்னையில் நடக்கும் 1993 மாவட்ட மாநாட்டிற்கான நான்கு நாட்கள் நிகழ்ச்சிநிரலும் பிற்பகல் 1:00 மணிக்கு ஆரம்பமாகும்.