தெய்வீக போதனை சக்திவாய்ந்த செல்வாக்குச் செலுத்துகிறது
1 ஆண்டவரான நம்முடைய சிருஷ்டிகர் யெகோவா தேவனிடமிருந்து போதனையைப் பெறுவதற்கு நாம் எவ்வளவு சிலாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம்! (சங். 50:1, NW; ஏசா. 30:20ஆ, NW) இன்று எல்லா தேசங்களிலுமிருந்து, திரளான கூட்டத்தினர் அவரால் போதிக்கப்படுவதற்கு அவருடைய தூய வணக்கத்தின் பர்வதத்திற்குத் திரண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். (மீகா 4:2) மனித யோசனையையும் உலக ஞானத்தையும் புகழ்ந்துபேசுகிற பள்ளிகளில் ஏனைய லட்சக்கணக்கானோர் சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால் யெகோவாவையும் அவருடைய எழுதப்பட்ட வார்த்தையையும் அசட்டைசெய்கிற ஞானம், கடவுளுடைய பார்வையில் மதிகெட்டதாக இருக்கிறது, அதால் வழிநடத்தப்படுகிறவர்கள் மூடர்களாக ஆகிறார்கள்.—சங். 14:1; 1 கொ. 1:25.
2 கடந்த வருட முடிவிற்குச் சற்றுமுன்பு நடந்த நம்முடைய மாவட்ட மாநாட்டில், நாம் தெய்வீக போதனையின் வல்லமையை ஓர் ஒப்பற்ற முறையில் அனுபவித்துமகிழ்ந்தோம். “தெய்வீக போதனை” என்ற இந்தத் தலைப்பு, முழு நிகழ்ச்சிநிரலிலும் வியாபித்திருந்தது. கடவுளுடைய ஆவியோடு சேர்ந்து அவருடைய வார்த்தை ஓர் உலகளாவிய சகோதரத்துவமாக நம்மை ஐக்கியப்படுத்துகிறது, நம்முடைய ஆளுமைகளை உருவமைக்கிறது, பேய்களின் போதகங்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது, மேலும் மேம்பட்ட ஊழியர்களாக இருக்கும்படி நம்மை பயிற்றுவிக்கிறது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். தெய்வீக போதனையிலிருந்து நீங்கள் தனிப்பட்ட விதமாக எவ்வாறு நன்மையடைந்திருக்கிறீர்கள்?
3 கிறிஸ்தவ வாழ்க்கையின்மீது பாதிப்பு: தெய்வீக போதனை நம்முடைய மனச்சாட்சிகளை உருவமைக்க உதவுகிறது. எல்லாரும் மனச்சாட்சியுடன் பிறந்திருக்கிறோம், ஆனால் நீதியின் வழியிலும் யெகோவாவைப் பிரியப்படுத்துகிற சேவையிலும் அது நம்மை வழிநடத்தும்படிக்கு, அது பயிற்றுவிக்கப்பட வேண்டும். (சங். 19:7, 8; ரோ. 2:15) உலகிலுள்ள மக்கள் கடவுளுடைய வார்த்தைக்கேற்றபடி தங்களுடைய சிந்தையை உருவமைக்கவில்லை, அதன் காரணமாக எது சரி, எது தவறு என்பதைக் குறித்து குழப்பமடைந்தவர்களாயும் நிச்சயமற்றவர்களாயும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய கண்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதைச் செய்வதன்பேரில் வற்புறுத்துவதன் காரணமாக, ஒழுக்கநெறி மற்றும் நன்னெறி சார்ந்த விவாதங்களின்பேரில் கருத்துவேறுபாடுகள் எழும்புகின்றன. பெரும்பான்மையர் தங்களுடைய சொந்த வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிப்பதற்கு முழு அளவான சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அவர்கள் உண்மையான ஞானத்தின் ஒரே ஊற்றுமூலத்திற்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள். (சங். 111:10; எரே. 8:9; தானி. 2:21) ஆனால் தெய்வீக போதனை நமக்கு இப்படிப்பட்ட விவாதங்களைத் தீர்த்திருக்கிறது, நாம் கடவுளால் போதிக்கப்படுவதன் காரணமாக அவருடைய வீட்டாராக ஐக்கியப்பட்டவர்களாய் நிலைத்திருக்கிறோம். நம்முடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாய் இருந்துகொண்டு, நாம் நல்மனச்சாட்சியுடன் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்ப்படுகிறோம்.
4 ‘போதகமாகிய பலவிதக் காற்றை’ எதிர்த்து நிற்பதற்கு தெய்வீக போதனை நமக்கு உதவிசெய்கிறது. (எபே. 4:14) தத்துவப் படிப்பால் நாம் கவர்ந்திழுக்கப்படுகிறதில்லை, அது மக்களை குறைகாண்பவர்களாகவும் ஐயுறவாதிகளாகவும் செய்கிறது; மேலும் சுய-தீர்மானத்தை உற்சாகப்படுத்தி, ஒழுக்கச் சீர்குலைவுக்கு வழிநடத்துகிறது. நாம் யெகோவாவால் போதிக்கப்படுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம், இதனால் அநேகர் அனுபவிக்கிற துன்பத்தையும் மனவேதனையையும் நாம் தவிர்க்கிறோம். யெகோவாவின் சட்டங்களும் நினைப்பூட்டுதல்களும், “வழி இதுவே, இதிலே நடவுங்கள்,” என்று ‘நமக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை’போல் இருக்கின்றன.—ஏசா. 30:21.
5 நம்முடைய கூட்டங்களும் ஊழியமும்: எபிரெயர் 10:23-25-ஐ கடவுளிடமிருந்து வருகிற கட்டளையாக நாம் கருதுகிறோம். சபை கூட்டங்களில் நாம் யெகோவாவால் போதிக்கப்படுகிறோம். கூட்டங்களில் எப்பொழுதும் ஆஜராயிருப்பது நம்முடைய வழக்கமாக இருக்கிறதா, அல்லது கூட்டத்திற்கு ஆஜராவதைக் குறைந்த முக்கியத்துவமுடையதாகக் கருதுகிறோமா? நினைவிற்கொள்ளுங்கள், ஒன்றாகக் கூடிவருவது நம்முடைய வணக்கத்தின் பாகமாக இருக்கிறது. அதைத் தெரிவுசெய்வதற்குரியதாகக் கருதக்கூடாது. நமக்காக யெகோவா ஆயத்தம்செய்திருக்கிற ஆவிக்குரிய போஷாக்குத் திட்டத்தின் எந்தப் பாகத்தையும் நாம் தவறவிட முடியாது.
6 மோசே இவ்வாறு கடவுளிடம் ஜெபித்தார்: “நாங்கள் ஞான இருதயத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு முறையில் எங்களுடைய நாட்களை எப்படித்தான் எண்ணுவது என்பதை எங்களுக்குக் காண்பியும்.” (சங். 90:12, NW) இதுவே நம்முடைய ஜெபமாகவும் இருக்கிறதா? ஒவ்வொரு அருமையான நாளையும் நாம் மதித்துணருகிறோமா? நாம் அவ்வாறு செய்தால், நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா தேவனுக்கு மகிமையுண்டாக, ஒவ்வொரு நாளையும் பயனுள்ள முறையில் செலவழிப்பதன்மூலம் ‘ஞான இருயத்தைக் கொண்டுவருவோம்.’ அதைச் செய்வதற்கு தெய்வீக போதனை நமக்கு உதவிசெய்யும்.