வருடாந்தரப் புத்தகம் —உற்சாகத்தின் ஒரு கருவூலம்
1 யெகோவாவின் வியக்கத்தக்க கிரியைகள் பற்றிய அறிக்கைகளும் அனுபவங்களும் கடவுளுடைய ஊழியர்களுக்கு எப்பொழுதும் புத்துணர்ச்சியளித்து வந்திருக்கின்றன. (யோபு 38:4, 7; நீதி. 25:25; லூக். 7:22; அப். 15:31) அதனால்தான் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் உற்சாகத்தின் ஒரு கருவூலமாக இருக்கிறது.
2 வருடாந்தரப் புத்தகம் ஒவ்வொன்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளின்பேரில் உலகத்தைச் சுற்றிலுமிருந்து வரும் கட்டியெழுப்பும் அறிக்கைகளைக் கொடுக்கிறது. விசுவாசத்தைப் பலப்படுத்தும் அனுபவங்கள் யெகோவாவின் வழிநடத்துதல், பாதுகாப்பு, அவருடைய மக்களின் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. எல்லா கண்டங்களிலுள்ள மக்களுக்கும் பேரளவான கடற்தீவுகளுக்கும் பைபிள் சத்தியங்களைக் கொண்டுசெல்வதற்கு, குடும்பத்தையும் நண்பர்களையும் சொந்த ஊரையும் விட்டுவந்த தைரியமிக்க ஆடவரையும் பெண்டிரையும் பற்றி வருடாந்தரப் புத்தகம் சொல்லுகிறது.
3 வருடாந்தரப் புத்தகம், வாசகர்கள் அநேகர் கடவுளுக்கான தங்களுடைய சேவையை அதிகரிப்பதற்கு உந்துவித்திருக்கிறது. ஒரு வாசகர் இவ்வாறு எழுதினார்: “எனக்கு வேகமாக அதை வாசிக்க முடியாது. நான் இதுவரை என்ன வாசித்தேனோ அது அதிக உற்சாகமூட்டுவதாய் இருந்திருக்கிறது. மற்றவர்கள் அழுத்தத்தின்கீழ் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறியும்போது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நான் அதிகத்தைச் செய்யமுடியும் என்பதை உணரும்படி அது செய்கிறது.”
4 1927 முதற்கொண்டு ஒவ்வொரு வருடமும், யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் உந்துவிக்கிற அறிக்கைகளையும் அனுபவங்களையும்கொண்ட ஓர் உண்மையான கருவூலமாக இருந்துவருகிறது. உற்சாகத்தின் இந்த ஒப்பற்ற ஊற்றுமூலத்திலிருந்து நீங்கள் முழுமையாகப் பயனடைந்துவருகிறீர்களா? அவ்விதமாகச் செய்வதற்கு, நீங்கள் வருடாந்தரப் புத்தகத்தை முதலில் வாங்குகையில் அதை வாசிப்பதைக்குறித்து நிச்சயமாயிருங்கள். பின்பு வருடம் முழுவதும் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் தேவையான உற்சாகத்திற்காக அதிலுள்ள திட்டவட்டமான பகுதிகளை மறுபார்வை செய்யுங்கள்.