உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/93 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 12/93 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (என்றும் வாழலாம் சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்). ஜனவரி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்: ஆங்கிலம்: மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” கன்னடம்: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” மற்றும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல். பெங்காலி அல்லது நேப்பாளி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டையும் பஞ்சாபி தெரிந்த ஆட்களுக்கு “இதோ!” சிற்றேட்டையும் அளிக்கலாம். மலையாளத்தில், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்! புத்தகத்தை 12.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரிய அளவு 40.00 ரூபாய், சிறிய அளவு 20.00 ரூபாய் நன்கொடைக்கு. மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகம் (இது ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழில் கிடைக்கும்) 20.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (சிறிய அளவு 20.00 ரூபாய்). கூடுதலாக விசேஷ அளிப்பு 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய்க்கு அளிக்கலாம். குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் சபை கணக்குகளை டிசம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு முடிந்தவரை விரைவிலேயே தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்ட பிறகு சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

◼ 1995-க்கான நினைவு ஆசரிப்பு வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இருக்கும். சகோதரர்கள் தங்களுக்கு மன்ற வசதிகள் தேவைப்படுமானால், கிடைக்கக்கூடிய மன்றங்களுக்குத் தேவையான பதிவுகளைச் செய்யும்படிக்கு, 1995 நினைவு ஆசரிப்பைக் கொண்டாடுவதற்காக தேதி பற்றிய இந்த முன்கூட்டிய அறிவிப்புக் கொடுக்கப்படுகிறது.

◼ அனைத்து பண அனுப்பீடுகளும் (remittances) லோனாவ்லாவில் செலுத்தக்கூடிய கணக்கில் பணம்பெறுபவர் கேட்புக் காசோலைமூலம் (A/c Payee Demand Draft) அனுப்பவேண்டும். இத்தகைய கேட்புக் காசோலைகளை அளிக்கக்கூடிய வங்கிகள் பின்வருமாறு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா, சின்டிகேட் பாங்க், கனரா பாங்க், பாங்க் ஆஃப் பரோடா, விஜயா பாங்க் மற்றும் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இண்டியா, கண்டாலா கிளையின்பேரில் கொடுக்கப்படுகிற கேட்புக் காசோலையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

◼ எங்களோடு கடிதத் தொடர்புகொள்கையில், நான்மடி தாள் (quarto paper) (8 1/2” x 11”) அல்லது A4 அளவு தாளை (8 1/4” x 11 1/2”) பயன்படுத்தினால் நாங்கள் அதைப் போற்றுவோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், உவாட்ச் டவர் சங்கத்தின் கடித அளவு (letter-head) போன்ற அல்லது ஏறக்குறைய அதேபோல் அளவுள்ள தாளைப் பயன்படுத்தும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அதிகமாக பலதரப்பட்ட தாள் அளவுகளில் பெற்றுக்கொள்கிற கடிதங்களைக் கோப்பிலேற்றுகையில் நாங்கள் எதிர்ப்படுகிற பிரச்னையை இது நீக்கும்.

◼ மேலுமாக, சங்கத்திற்கு கடிதம் அனுப்புகையில், தயவுசெய்து உறுதியான கடித உறைகளைப் பயன்படுத்துங்கள். சபைகள் கடிதத்தை, கேட்புக் காசோலைகள் உட்பட, அடிக்கடி மிகவும் மெல்லிய தாளிலிருந்து செய்யப்பட்ட கடித உறைகளில் அனுப்புகின்றன. லோனாவ்லாவை சென்றடைவதற்குள்ளாக அவை வருந்தத்தக்க நிலையில் இருக்கின்றன. சிலசமயங்களில் தபால் அலுவலகம் கடித உறைகளை எங்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு முன்பாக உறையிலுள்ள எல்லாவற்றையும் ஒரு கயிற்றில் கட்டி அனுப்புவதன்மூலம் தயவு காண்பித்திருக்கிறது.

◼ கடைசியாக, போதுமான தபால்தலைகளை நீங்கள் ஒட்டியிருக்கிறீர்களா என்று பாருங்கள். போதுமான தபால்தலைகள் இல்லாத அல்லது தபால்தலைகளே இல்லாத கடித உறைகளை நாங்கள் பெறுவதினால், இருமடங்கான தபால்செலவை நாங்கள் அடிக்கடி கொடுக்க வேண்டியதாகிறது.

◼ 1992 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! ஆங்கில பத்திரிகைகளின் பவுண்ட் தொகுதிகள் இப்பொழுது கிடைக்கின்றன, இவை எங்களிடம் ஆர்டர் செய்யப்படலாம். இத்தகைய தொகுதிகளுக்காக சபைகள் ‘நிலையான ஆர்டர்’செய்ய (standing order) விரும்பினால், அவ்வாறு செய்யலாம். தாங்கள் மறுபடியும் ஆர்டர் செய்யாமலே ஒவ்வொரு வருட தொகுதிகளையும் பெற்றுக்கொள்வார்கள் என்பதை இது உறுதிப்படுத்தும்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

ஆங்கிலம்: இந்த இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள்; ஹிந்தி: வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

கொங்கனி மற்றும் நேப்பாளி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?

◼ தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் - 1994 என்ற சிறுபுத்தகத்தை ஹிந்தி, மராத்தி, மற்றும் நேப்பாளியில் அச்சிடுவதற்கு நிர்வாகக் குழு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது என்பதை நாங்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சபைகள் தங்களுடைய ஆர்டர்களை ஏற்கெனவே அனுப்பாமலிருந்தால், அனைத்து சபைகளும் உடனடியாக அனுப்புமாறு விரும்புகிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்