நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்
1 அநேக தேசங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வியக்கத்தக்க அதிகரிப்புகளைப் பற்றி வாசிப்பதற்கு நாம் எவ்வளவு உணர்ச்சியார்வமுள்ளவர்களாய் இருக்கிறோம்! எனினும், சில இடங்களில் ராஜ்ய பிரஸ்தாபிகள் நம்முடைய பிரசங்க வேலைக்கு அசட்டை மனப்பான்மையை, அக்கறையின்மையை, அல்லது நேரடியான எதிர்ப்பையுங்கூட அடிக்கடி எதிர்ப்படுகின்றனர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இதுவே நம்முடைய பிராந்தியத்தின் நிலையாக இருந்தால் நாம் எவ்வாறு நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருக்கலாம்? நம்முடைய சந்தோஷத்தை எடுத்துப்போடக்கூடிய அல்லது சீஷர்களை உண்டுபண்ணும் வேலைக்கான நம்முடைய வைராக்கியத்தை ஊக்கங்கெடுக்கக்கூடிய ஒரு நம்பிக்கையற்ற மனநிலையை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
2 நம்முடைய சமநிலையைக் காத்துக்கொள்ள ஒரு நம்பிக்கையான மனநிலை நமக்கு உதவும். கடினமான சூழ்நிலைமைகளிலுங்கூட நம்முடைய நோக்குநிலையை நம்பிக்கையற்ற எண்ணங்கள் செல்வாக்கு செலுத்த நாம் அனுமதிக்கக்கூடாது. இயேசு நமக்கு பரிபூரணமான முன்மாதிரியை வைத்தார். ஒப்பிடுகையில் வெகு சில ஆட்களே அவர் போதித்தவற்றை ஏற்றுக்கொண்டனர். அநேகர் அவருடைய போதகத்தால் இடறலடைந்தனர். தம்முடைய சகிப்புத்தன்மை கடுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்ட சூழ்நிலைமைகளை அவர் எதிர்ப்பட்டார். மதத் தலைவர்கள் அவருடைய வேலையில் குற்றங்கண்டுபிடித்து அவரைக் கொலைசெய்ய சதித்திட்டமிட்டனர். அவர்மேல் துப்பினர், அறைந்தனர், கேலிசெய்தனர், அடித்தனர், இறுதியில் மரணத்திற்குட்படுத்தினர். எனினும், தாம் செய்துகொண்டிருந்த வேலையில் அவர் சந்தோஷத்தைக் கண்டடைந்தார். ஏன்? கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார், அவர் அதைச் செய்வதை நிறுத்திவிடவில்லை.—யோவா. 4:34; 13:17; எபி. 12:1, 2.
3 நம்முடைய ஊழியத்தைப் பற்றிய சரியான நோக்கை காத்துக்கொள்ளுங்கள்: இதைச் செய்வதற்கு, நாம் அநேக அம்சங்களை நம்முடைய மனதில் வைக்கவேண்டியது அவசியம். பெரும்பாலான ஆட்கள் புறக்கணிக்கவோ எதிர்க்கவோ கூடிய ஒரு செய்தியை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். (மத். 13:14, 15) அப்போஸ்தலர், இயேசுவின் நாமத்தில் போதிக்கக்கூடாதென சட்ட முறைப்படி ஆணையிடப்பட்டிருந்தபோதும் அவர்கள் பிரசங்கிக்கவேண்டும் என்ற தங்களுடைய பொறுப்பில் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தனர். அதன் விளைவாக விசுவாசிகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தனர். (அப். 5:28, 29; 6:7) சில பிராந்தியங்களில், ஒப்பிடுகையில் சில ஆட்கள் செவிகொடுப்பார்கள் என்பதை நாம் முன்னதாகவே அறிந்திருக்கிறோம். (மத். 7:14) எனவே, நம்முடைய பிராந்தியத்தில் ஒரேவொரு நபர் மட்டுமே செய்திக்கு செவிகொடுத்தாலும் நாம் சந்தோஷப்படுவதற்கு காரணம் இருக்கிறது. செவிகொடுப்பதற்கு எதிர்ப்பவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். (எசே. 33:8) எதிர்ப்பவர்கள் சிலரும் இறுதியில் மாறி யெகோவாவின் வணக்கத்தார்களாகிறார்கள். எனவே, சரியாக நோக்குகையில், சிலரே செவிகொடுத்தபோதிலும் நம்முடைய ஊழியம் நமக்கு நிறைவேற்றத்தின் உணர்வை கொண்டுவருகிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தியை தாங்கியவர்களாக கதவுகளண்டையிலே நாம் செல்வதுதானே அதற்கு அத்தாட்சியளிக்கிறது.—எசே. 2:4, 5.
4 நம்முடைய நோக்குநிலையில் நம்பிக்கையோடு உணர்வதற்கு நமக்கு நல்ல காரணமிருக்கிறது. உலகளாவிய வேலையின் செழுமையும் மிகுந்த உபத்திரவம் நெருங்கி வருவதற்கான அதிகரித்துவரும் அத்தாட்சியும் தேவ பக்தியோடு சேவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நம்மனைவரையும் தூண்டவேண்டும். (2 பே. 3:11, 14) நாம் கற்றுக்கொண்டவைகளுக்கு நம்முடைய போற்றுதலைக் காட்ட ஆகஸ்ட் மாதத்தில் வைராக்கியமாக நடவடிக்கையில் ஈடுபடுவதே மிகச் சிறந்த வழியாயிருக்கும். புதிதாக கூட்டுறவுகொள்ளும் ஆட்களும் தங்களுக்கு கற்பிக்கப்பட்டவற்றை உபயோகிப்பதில் நம்பிக்கையான மனநிலையைக் காட்டும்படி விரும்புகிறோம். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக தயாராகுமளவிற்கு நம்முடைய பைபிள் மாணாக்கர்களில் சிலர் முன்னேற்றமடைந்திருந்தால் அவர்கள் ஊழியத்தைத் துவங்கச் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறந்த சமயமாக இருக்கலாம்.
5 பிரஸ்தாபிகளாக சேவித்தாலுஞ்சரி அல்லது பயனியர்களாக சேவித்தாலுஞ்சரி யெகோவா நம்மிடம் கேட்பது பாரமானவையல்ல என்பதை மனதில் வைக்கையில் நாம் எல்லாரும் உதவிசெய்யப்படுகிறோம். (1 யோ. 5:3) அவர் நம்மைக் காப்பதாக வாக்குக்கொடுக்கிறார். (எபி. 13:5ஆ, 6) பொதுமக்களின் அக்கறையின்மை, அசட்டை மனப்பான்மை, அல்லது எதிர்ப்பின் மத்தியிலும் நாம் நம்பிக்கையான மனநிலையுடன் பிரசங்கித்துக்கொண்டே இருக்கவேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யவேண்டுமென்பது கடவுளுடைய சித்தமாக இருக்கிறது.—1 தீ. 2:3, 4.