அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் பிரசுரம் உங்களுடைய கையிருப்பில் இல்லையென்றால் அல்லது வித்தியாசமான அளிப்புக்கு சூழ்நிலைமை பொருத்தமாக இருந்தால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அதே நன்கொடைக்கு அளிக்கலாம் (சிறிய அளவு என்றும் வாழலாம் புத்தகம் 25.00 ரூபாய்). ஜனவரி: விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு. இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் உள்ளன: ஆங்கிலம்: மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? கன்னடம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்;” குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” நேப்பாளி, பஞ்சாபி அல்லது பெங்காலி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் அல்லது மற்றொரு சிற்றேட்டை அளிக்கலாம். மலையாளத்தில் உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்! புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதை கவனியுங்கள். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 45.00 ரூபாய் (சிறிய அளவு 25.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தை அளித்த பிறகு மறுசந்திப்புகள் செய்யப்படவேண்டும்; பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கவேண்டும். மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (இப்புத்தகம் ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது). மற்ற மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கம்போல் 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்காக பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் சபை கணக்குகளை டிசம்பர் 1-ம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு முடிந்தவரை விரைவிலேயே தணிக்கை செய்யவேண்டும். இதைச் செய்த பிறகு சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.
◼ 1995-ம் ஆண்டிற்கான வருடாந்தர வசனம்: “அன்பிலே ஒத்திசைவாக ஒன்றுபட்டிருங்கள்.”—கொலோ. 2:2. சபைகள் தங்களுடைய புதிய வருடாந்தர வசனத்துடன்கூடிய போர்டை ஜனவரி 1, 1995, அல்லது அதற்குப் பின்பாக முடிந்தவரை சீக்கிரத்திலேயே பார்வைக்காகப் போடுவதற்குத் தயார்செய்யக் கூடுமானால் நல்லது.
◼ 1995-ம் ஆண்டின்போது பயன்படுத்துவதற்கான ஊழிய நமூனாக்களின் சப்ளை இந்த மாதத்தில் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. “வருடாந்தர ஊழிய நமூனா”க்களுக்கான தொகை உங்களுடைய டிசம்பர் மாத கணக்கறிக்கையில் பற்று வைக்கப்படும். இந்த நமூனாக்களை வீணாக்கக்கூடாது. அவற்றை அவற்றிற்கான உத்தேசிக்கப்பட்ட நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும். பாக்கெட்டை பெற்றவுடனேயே நமூனாக்களை தயவுசெய்து எண்ணுங்கள். அந்த நமூனாக்களோடு இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலில் (செக்லிஸ்ட்டில்) காண்பிக்கப்பட்டுள்ளபடி, அவற்றைப் பயன்படுத்துகிற சகோதரரிடமோ அல்லது சபையிலுள்ள இலாகாவிடமோ பிரித்துக் கொடுத்துவிடுங்கள். எந்தவொரு நமூனாவோ அல்லது நமூனாக்களோ 1995-க்கு உங்களுக்கு போதுமானதாக இல்லையென்றால், கூடுதலான உங்களுடைய தேவைகளை தயவுசெய்து உடனடியாக, அல்லது ஜனவரி 1995-ல் ஆர்டர் செய்யுங்கள். டிசம்பர் 1995 முடிவுவரைக்கும் போதுமானவற்றை மாத்திரமே ஆர்டர் செய்யுங்கள், அதற்குள்ளாக உங்களுடைய அடுத்த சப்ளையைப் பெற்றுக்கொள்வீர்கள்.
◼ ஊழிய நமூனாக்களோடு அறை வசதி விண்ணப்பத்திற்கான நமூனாக்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை 1995 மாவட்ட மாநாடுகளின்போது பயன்படுத்துவதற்காகும், ஆகவே தயவுசெய்து அதுவரையாக அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதுமுதல் அறைவசதி விண்ணப்பத்திற்கான நமூனாக்கள் வருடாந்தர நமூனாக்களின் சப்ளையோடு இணைத்து அனுப்பப்படும்.
◼ புதிய உவாட்ச்டவர் பிரசுரங்கள் விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது, வருடாந்தர ஊழிய நமூனாக்களுக்கான பெட்டியில் ஒவ்வொரு சபைக்கும் நான்கு பிரதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. காரியதரிசிக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள், மற்றும் கணக்கைக் கவனிக்கிற சகோதரர்களுக்கும் அவற்றை கொடுக்கவேண்டும்.
◼ ஜனவரி 1, 1995 முதற்கொண்டு குஜராத்தி, நேப்பாளி, பெங்காலி, ஹிந்தி ஆகியவற்றிற்கான காவற்கோபுர பதிப்புகள், மாதாந்தர வெளியீடுகளிலிருந்து மாதம் இருமுறைவரும் வெளியீடுகளாக மாறும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
ஆங்கிலம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்—பெரிய அளவுள்ள திருத்தப்பட்ட பதிப்பு (அ.ஐ.மா.-வில் அச்சிடப்பட்டது); 1993-க்கான காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வுக்கான பவுண்ட் தொகுப்புகள். பயனியர்கள், பிரஸ்தாபிகள் ஆகிய இருவருக்கும் ஒவ்வொன்றின் விலை ரூபாய் 90.00. தெலுங்கு: நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல்.
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
ஆங்கிலம்: யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் குஜராத்தி மற்றும் மராத்தி: மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? பெங்காலி: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
◼ கையிருப்பிலில்லா பிரசுரங்கள்:
மலையாளம்: வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?