உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/95 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 2/95 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் (பெரிய அளவு 45.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தை அளித்த பிறகு மறுசந்திப்புகள் செய்யப்படவேண்டும்; பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (இப்புத்தகம் ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது). மற்ற மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கம்போல் 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தாக்கள். மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 70.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளின் ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளின் ஆறுமாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. கவனிக்கவும்: மேற்குறிப்பிட்ட அளிப்புத் திட்டப் பிரசுரங்களை இதுவரை தருவிக்காத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யவேண்டும்.

◼ காரியதரிசியும் ஊழிய கண்காணியும் சேர்ந்து ஒழுங்கான பயனியர் அனைவரின் ஊழிய நடவடிக்கையை மறுபார்வை செய்யவேண்டும். தேவையான மணிநேரம் பெறுவதைக் கடினமாகக் காண்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவி அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். ஆலோசனைகளுக்கு, அக்டோபர் 1, 1993, அக்டோபர் 1, 1992 தேதியிட்ட சங்கத்தின் கடிதங்களை (S-201) மறுபார்வை செய்யுங்கள். மேலும், அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் 12-20 பாராக்களையும் காண்க.

◼ நினைவு ஆசரிப்பு 1995, ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படும். பேச்சு ஒருவேளை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு அப்பம் மற்றும் திராட்சரசத்தை சுற்றில் விடுவது சூரிய அஸ்தமனத்திற்குமுன் தொடங்கக்கூடாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உங்களுடைய பகுதியில் எப்பொழுது சூரியன் அஸ்தமிக்கும் என்பதை உங்கள் உள்ளூர் மூலங்களில் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அந்தத் தினத்தில் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களைத் தவிர மற்ற எந்தக் கூட்டங்களையும் நடத்தக்கூடாது. உங்களுடைய சபைக் கூட்டங்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமைதான் இருக்கின்றன என்றால், அவற்றை அந்த வாரத்தில் வேறெதாவது ஒரு நாளைக்கு ராஜ்ய மன்றம் கிடைப்பதைப் பொருத்து மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

◼ 1995, ஏப்ரல் 23 அன்று, சபைக் கூட்டங்கள், வட்டார மாநாடு, விசேஷ மாநாட்டு தினம், ஆகியவற்றின் முடிவில் ஒரு அறிவிப்பு செய்யப்படும். இது காலத்திற்கேற்ற செய்தியைத் தாங்கிவரும் ஒரு நான்கு பக்க துண்டுப் பிரதியைப் பரவலாக அளிக்கும் ஒரு விசேஷித்த வேலையைப் பற்றிய அறிவிப்பாகும். தாங்கள் எதிர்ப்படக்கூடிய கலக்கமடையச் செய்யும் பிரச்சினைகளை மனதார சொல்லி, நம்பகரமான வழிநடத்துதலுக்காகத் தேடிக்கொண்டிருக்கும் உண்மைமனதுள்ள ஆட்களுக்கு விசேஷித்த கவனம் செலுத்தும்படி பிரஸ்தாபிகள் உற்சாகப்படுத்தப்படுவர். புதிய பிரஸ்தாபிகள் உட்பட, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளி ஊழியத்திற்குப் போகவிருக்கும் பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் முழுவதும் பங்கெடுத்து இந்த விசேஷ அளிப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க விரும்புவர்.

◼ மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துணைப் பயனியர்களாக சேவை செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்பொழுதே திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை முன்னதாகவே சமர்ப்பிக்கவேண்டும். தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்யவும் போதுமான அளவு பிரசுரங்கள் கைவசம் வைத்திருக்க ஏற்பாடு செய்யவும் மூப்பர்களுக்கு இது உதவும். ஏப்ரலில் எத்தனையதிகம் பேர் இச்சேவையில் பங்குகொள்ள முடியுமோ அத்தனைபேரும் பங்குகொள்ளும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்