மழைக்காலம் மறுபடியும் வந்துவிட்டது!
1 மழைக்காலம் கோடைகாலத்தின் வெப்பத்திலிருந்து தணிவைக் கொண்டுவந்த போதிலும், பிரயாணம், ஊழியத்தில் பங்கெடுப்பது போன்றவற்றின் சம்பந்தமாக பிரச்சினைகளையும் கொண்டுவருகிறது. ஆயினும், நம் வாழ்க்கையில் முன்னுரிமைப் பட்டியலில் தேவராஜ்ய வேலைகள் உயர்ந்த இடத்தில் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதை நமக்குநாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து வெளி ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொண்டு அது நேரத்தில் சபைக்கு அறிக்கை செய்யப்படும்படி பார்த்துக்கொள்ள விரும்புகிறோம். மழைக்கால ஊழியத்திற்காக நாம் நன்கு தயாரான நிலையில் இருப்பதை—ஒரு நல்ல குடை அல்லது மழைக்கோட்டு, தண்ணீர் புகாத ஒரு சாட்சிப் பை ஆகியவற்றை வைத்திருப்பதை—இது அவசியப்படுத்துகிறது. தகுந்த பிரசுரங்களை எப்போதும் எடுத்துச் சென்றால், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது அளிப்பதற்கு ஏதாவது நம்மிடம் இருக்கும்.
2 பள்ளிக்குத் திரும்ப செல்லும் இளைஞர் தொடர்ந்து ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்ள கவனமாயிருக்க வேண்டும். பைபிள் வாசிப்பு மற்றும் ஒவ்வொரு வாரமும் கூட்டங்களில் சிந்திக்கப்படுபவற்றை படிப்பது ஆகியவை உட்பட்ட நம் தனிப்பட்ட படிப்பின் அட்டவணையை கடைப்பிடிக்க நாம் அனைவரும் முயல வேண்டும். மழைக்காலம் நம் அன்றாட வழக்கமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தாலும், ‘அதி முக்கியமான ஆவிக்குரிய காரியங்களுக்கு’ நாம் தொடர்ந்து முன்னுரிமைக் கொடுக்க விரும்புகிறோம்.—பிலி. 1:10, NW.