எப்போதும் யெகோவாவைத் துதியுங்கள்
1 சில செயல்கள் அவ்வளவு முக்கியமானவையாய் இருப்பதால் எப்போதும் நம் கவனத்திற்கு தகுதியுடையவையாய் இருக்கின்றன. அவற்றில் சாப்பிடுதல், சுவாசித்தல், உறங்குதல் ஆகியவற்றை நாம் உட்படுத்துகிறோம். சரீரப்பிரகாரமாக நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டுமென்றால் இவை அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. “ஸ்தோத்திரபலியை [“துதியின் பலியை,” NW] . . . எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்,” எனத் தூண்டுகையில் அப்போஸ்தலனாகிய பவுல் அதே விதமாக நற்செய்தியைப் பிரசங்கித்தலையும் வகைப்படுத்தினார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (எபி. 13:15) எனவே யெகோவாவைத் துதித்தலும் நம் இடைவிடா கவனத்திற்குத் தகுதியுடையதாய் இருக்கிறது. எப்போதும் நம் பரலோகத் தகப்பனைத் துதிப்பது, ஒவ்வொரு நாளும் நாம் முயற்சித்து செய்யவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
2 இயேசுவின் கவனத்தை வேறெங்கேயோ திருப்ப மற்றவர்கள் முயற்சி செய்கையில் அவர் இவ்வாறு பதிலளித்தார்: “நான் . . . தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும்.” (லூக். 4:43) அவருடைய மூன்றரை ஆண்டுகால ஊழியத்தின்போது, ஒவ்வொரு நாளும் அவர் செய்த எல்லா காரியங்களும் ஏதேனும் ஒருவிதத்தில் கடவுளை மகிமைப்படுத்துவதுடன் நேரடியாக தொடர்புடையதாய் இருந்தன. 1 கொரிந்தியர் 9:16-ல் பவுல் வெளிப்படுத்திய கருத்தை நோக்குகையில், அவர் இவ்விதமாக உணர்ந்தார் என நாம் அறிகிறோம்: “சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.” தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து விசாரிக்கிற மற்றவர்களிடத்தில் உத்தரவுசொல்ல எப்போதும் ஆயத்தமாயிருக்கும்படி விசுவாசமுள்ள மற்ற கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். (1 பே. 3:15) இன்று நூறாயிரக்கணக்கான பயனியர்களும் லட்சக்கணக்கான சபை பிரஸ்தாபிகளும் இத்தகைய சிறந்த முன்மாதிரிகளைப் பின்பற்ற கடினமாய் முயற்சி செய்கின்றனர்.
3 நம்முடைய முன்மாதிரியானவராகிய இயேசு கிறிஸ்து வெளிக்காட்டிய முழு இருதயத்தோடுகூடிய வைராக்கியத்தைக் குறித்து சிந்திக்கையில் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்தொடர நாம் தூண்டப்படுகிறோம். (1 பே. 2:21) அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட வேண்டியிருக்கையில் சிலசமயங்களில் சோர்வடைந்தவர்களாகலாம். உலகப்பிரகாரமான முழுநேர வேலையை நாம் செய்கையில் தினமும் யெகோவாவைத் துதிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்புக்களை எவ்வாறு அனுகூலப்படுத்திக்கொள்ளலாம்? அதிக நேரத்தைத் தேவைப்படுத்தும் நம்முடைய குடும்பப் பொறுப்புகளையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அநேக இளைஞர்கள் தேவையான படிப்புக்காக தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் வெளிப்படையாக யெகோவாவைத் துதிப்பது முடியாத காரியம் என்பதாக சிலர் நினைக்கக்கூடும். சிலசமயங்களில், ஏதேனும் ஒருவிதத்தில் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளாமல் சிலர் ஒரு மாதம் முழுவதையும் கடத்திவிடக்கூடும்.
4 எரேமியாவால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. குறுகிய சமயம் யெகோவாவின் நாமத்தில் பேசத் தவறுகையில் அவருக்குள் தாங்கமுடியாத அக்கினி அடைபட்டு எரிகிறதைப்போல் உணர்ந்தார். (எரே. 20:9) தாங்கமுடியாத துன்பமாக தோன்றியதன் மத்தியிலும் எரேமியா மற்றவர்களிடம் யெகோவாவின் செய்தியைக் குறித்துப் பேச எப்போதும் ஏதேனும் வழியைக் கண்டுபிடித்தார். நாம் அவருடைய தைரியமான முன்மாதிரியைப் பின்பற்றி ஒவ்வொரு நாளும் நம்முடைய சிருஷ்டிகரைத் துதிப்பதற்கு சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து தேடுவோமா?
5 நாம் யெகோவாவைக் குறித்துப் பேசுவது, முறைப்படி, மற்ற பிரஸ்தாபிகளுடன் சபை பிராந்தியத்தில் சாட்சிகொடுக்க முன்னேற்பாடு செய்யப்பட்ட சமயத்திற்கே மட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. நமக்குத் தேவைப்பட்டதெல்லாம் செவிசாய்க்கும் நபரே. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஆட்களை நாம் எதிர்ப்படுகிறோம்—நம்முடைய வீட்டுக்கு அவர்கள் வருகிறார்கள், அவர்களோடு நாம் வேலை செய்கிறோம், கடைகளில் நாம் அவர்களுக்கருகில் நிற்கிறோம், அல்லது அவர்களோடு நாம் பேருந்துகளில் பிரயாணம் செய்கிறோம். செய்யவேண்டியதெல்லாம் சிநேகப்பான்மையான வணக்கவுரையும் சிந்தனையைத் தூண்டும் கேள்வி அல்லது சம்பாஷணையை ஆரம்பிக்கத் தேவையான குறிப்புமே ஆகும். அநேகர் இதை அதிக பலன்தரக்கூடிய சாட்சிகொடுக்கும் முறையாக கண்டுணர்ந்திருக்கின்றனர். மற்றவர்களிடம் நற்செய்தியைக் குறித்துப் பேச நமக்கு அநேக வாய்ப்புகள் இருக்கையில் ராஜ்ய சாட்சி கொடுக்காமல் ஒரு மாதம் முழுவதையும் கடத்துவது நமக்கு கற்பனைசெய்ய முடியாததாக இருக்கிறது.
6 யெகோவாவைத் துதிக்கும் சிலாக்கியம் ஒருபோதும் ஒழிந்துபோகாது. சங்கீதக்காரன் குறிப்பிட்டவிதமாக, சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிக்கவேண்டும், நிச்சயமாகவே நாமும் அதில் உட்பட்டிருக்க விரும்புவோம். (சங். 150:6) நம்முடைய இருதயம் அவ்வாறு செய்ய எப்போதும் தூண்டினால், யெகோவாவைப் பற்றியும் அவருடைய வார்த்தையைப் பற்றியும் பேசுவதற்கான வாய்ப்புகளை நாம் தினமும் அனுகூலப்படுத்திக் கொள்வோம்.