அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
ஜனவரி: விசேஷ அளிப்பாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க புத்தகங்கள் எவற்றையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கின்றன: ஆங்கிலம்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, மனிதன் வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? கன்னடம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” “கடவுளால் பொய்ச் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” குஜராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; ஹிந்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு. நம்முடைய பிரச்னைகள், அல்லது “இதோ!” சிற்றேட்டை பெங்காலி மற்றும் பஞ்சாபி தெரிந்தோருக்கு கொடுக்கலாம். வாழ்க்கையை அனுபவியுங்கள் சிற்றேட்டை நேப்பாளி தெரிந்த ஆட்களிடம் அளிக்கலாம். உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை மலையாளம் விருப்பப்படும் ஆட்களுக்கு 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தை விசேஷ விலைக்கு அளிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.
பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 40.00 ரூபாய்.) மறுபட்சத்தில், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், என்ற புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். விசேஷ விலையாக, இப்புத்தகத்தின் தெலுங்குப் பதிப்பை 8.00 ரூபாய்க்கு அளிக்கலாம் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, என்ற புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இது சபையில் இல்லையென்றால், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் (பெரிய அளவு 40.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம்.
ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறைவரும் பதிப்புகளின் ஆண்டு சந்தா ரூ. 70.00. மாதம் ஒருமுறைவரும் பதிப்புகளின் ஆண்டு சந்தாவும், மாதம் இருமுறைவரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்களுக்கும் ரூ. 35.00. மாதப் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது.
குறிப்பு: பிப்ரவரியில் குறிப்பிட்டுள்ள அளிப்புக்கு ஒரு மாற்றம் உள்ளது. என்றும் வாழலாம் மற்றும் குடும்பம் புத்தகங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தவும், எல்லா சபைகளும் தங்களுக்குத் தேவையான சப்ளையைப் பெறவும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். வருடம் முழுவதுமாக இந்தப் புத்தகங்களின் பிரதிகளை தங்களுடன் பிரஸ்தாபிகள் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தகுந்த சந்தர்ப்பத்திலும் அவற்றை அளிக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிக்கும் ஏற்பாடுக்கான பிரசுர அயிட்டங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யலாம்.
◼ இந்த வருடம் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 2, சூரிய அஸ்தமனத்திற்கு பின் நினைவு நாளை ஆசரிக்க சபைகள் தக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். ஒவ்வொரு சபையும் சொந்தமாக, நினைவு நாளை ஆசரிக்க விரும்பினாலும், இது எப்போதும் சாத்தியமாயிருக்க முடியாது. பொதுவாக, ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகிறபோது, ஒன்று அல்லது அதற்கும் மேலான சபைகள், அந்த மாலைக்கு மற்றொரு இடத்தை ஒருவேளை உபயோகப்படுத்தலாம். புதிதான ஆர்வமுள்ள ஜனங்கள் வருவதற்கு வசதியாயிராமல், நினைவு ஆசரிப்பு மிகவும் காலதாமதமாக ஆரம்பிக்கக்கூடாது. உற்சாகத்தைப் பொதுவாகப் பரிமாறிக்கொள்ளவும், சிலருக்குத் தொடர்ந்து ஆவிக்குரிய ஆதரவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், வருகிறவர்களை வரவேற்கவும், ஆசரிப்புக்கு முன்பும், அதற்குப் பின்பும் போதுமான நேரம் இருப்பதுபோல கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். எல்லா காரணங்களையும் முழுமையாக கருதிவிட்டு, நினைவு ஆசரிப்புக்கு வருகிறவர்கள் அந்த நிகழ்ச்சியிலிருந்து முழு பயனையும் பெறுவதற்கு என்ன ஏற்பாடுகள் அவர்களுக்கு மிகவும் உதவியாயிருக்கும் என்று மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும்.
◼ 1996 நினைவு ஆசரிப்பு காலத்திற்கான விசேஷ பொதுப் பேச்சு, ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21-ல் கொடுக்கப்படும். “கோணலான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களாயிருத்தல்,” என்ற பொருளில் பேச்சு இருக்கும். ஒரு சுருக்கமான குறிப்புத்தாள் கொடுக்கப்படும். ஒரு விசேஷ மாநாட்டு தினம், வட்டார மாநாடு அல்லது வட்டாரக் கண்காணியின் வருகை ஆகியவற்றை அந்த வாரத்தின் முடிவிலே கொண்டிருக்கும் சபைகளுக்கு, அதற்குப் பின்வரும் வாரத்தில் விசேஷப் பேச்சு இருக்கும். ஏப்ரல் 21-ம் தேதிக்கு முன்னால் எந்தச் சபையும் விசேஷப் பேச்சைக் கொண்டிருக்கக்கூடாது.