உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/96 பக். 1
  • விசுவாசித்து நடத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விசுவாசித்து நடத்தல்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • விசுவாசம்​—பலப்படுத்துகிற ஒரு குணம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • “விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 9/96 பக். 1

விசுவாசித்து நடத்தல்

1 கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பொருள்சம்பந்தமான உடைமைகளைச் சுற்றியே அமைத்து, செல்வத்தின் ஏமாற்றும் வல்லமையில் முட்டாள்தனமாக சார்ந்திருக்கிறார்கள். (மத். 13:22) அவர்களது செல்வங்கள் தொலைந்துபோகும்போதோ, களவுபோகும்போதோ, அற்ப பிரயோஜனமானவை என்று நிரூபணமாகும்போதோ அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கின்றனர். ஆவிக்குரிய பொக்கிஷத்திற்காக கடினமாக முயன்று, ஒரு ஞானமான போக்கை விடாமல் பின்தொடருவதற்கு நாம் துரிதப்படுத்தப்படுகிறோம். (மத். 6:19, 20) இது ‘விசுவாசித்து நடப்பதை’ உட்படுத்துகிறது.—2 கொ. 5:6.

2 “விசுவாசம்” என்ற வார்த்தை நம்பிக்கையாயிருப்பது, சார்ந்திருப்பது, நிச்சயமாயிருப்பது என்ற கருத்தை வெளிப்படுத்தும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்படுகிறது. விசுவாசத்தில் நடப்பது என்றால், கடவுள்மீது நம்பிக்கைவைத்து கஷ்டமான நிலைமைகளை எதிர்ப்படுவதையும், நம் நடைகளை வழிநடத்துவதற்கு அவரது திறமையில் சார்ந்திருப்பதையும், நம் தேவைகளைப் பராமரிப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வத்தில் நம்பிக்கை வைப்பதையும் அர்த்தப்படுத்தும். இயேசு ஒரு பரிபூரண முன்மாதிரியை வைத்தார்; எது உண்மையில் முக்கியமோ அதன்மீதே கவனத்தை ஒருமுகப்படுத்தினார். (எபி. 12:2) அதேவிதமாக, காணக்கூடாத ஆவிக்குரிய காரியங்களில் நம் இருதயங்களை ஒருமுகப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். (2 கொ. 4:17, 18) நம்முடைய தற்போதைய வாழ்க்கையின் நிச்சயமற்றத்தன்மையை நாம் எப்போதுமே மனதில் வைத்தவர்களாக இருக்க வேண்டும் மற்றும் யெகோவாவின்பேரில் நாம் முழுமையாக சார்ந்திருத்தலை ஆமோதிக்கவேண்டும்.

3 ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின்’ வழிநடத்துதலின்கீழ் செயல்படும் தம்முடைய காணக்கூடிய அமைப்பின் மூலம் யெகோவா நம்மை வழிநடத்துகிறார் என்றும்கூட நாம் நிச்சயத்தோடு இருக்க வேண்டும். (மத். 24:45-47, NW) சபையில் ‘வழிநடத்துகிறவர்களுக்கு . . . கீழ்ப்படிகையில்’ விசுவாசத்தை நாம் மெய்ப்பித்துக்காட்டுகிறோம். (எபி. 13:17) தேவராஜ்ய ஏற்பாடுகளுக்குத் தாழ்மையோடு ஒத்துழைத்து வேலை செய்வது, யெகோவாவின்மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது. (1 பே. 5:6) செய்வதற்காக அமைப்பிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலைக்கு முழு இருதயத்தோடு ஆதரவை தர நாம் தூண்டப்பட வேண்டும். இது அன்பு மற்றும் ஒற்றுமை என்னும் ஒரு பலமான பிணைப்புக்குள் நம்மை நம் சகோதரர்களுடன் நெருங்கச் சேர்க்கும்.—1 கொ. 1:10.

4 விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்துவது: நம் விசுவாசம் செயலற்ற ஒன்றாக ஆவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. அதனைப் பலப்படுத்த நாம் கடினமாக போராடவேண்டி இருக்கிறது. படிப்பிலும், ஜெபத்திலும், கூட்டத்திற்கு ஆஜராவதிலும் தவறாமல் இருப்பது நமது விசுவாசத்தைப் பலப்படுத்த நமக்கு உதவுகிறது, இவ்வாறு அதனால் யெகோவாவின் துணையோடு, எந்தச் சோதனையையும் எதிர்க்க முடியும். (எபே. 6:16) தின பைபிள் வாசிப்பிற்கும், கூட்டத்திற்குத் தயாரிப்பதற்கும் ஒரு நல்ல கிரமமுறையை ஏற்படுத்திவிட்டீர்களா? நீங்கள் கற்பதன்பேரில் அடிக்கடி தியானம் செய்து, ஜெபத்தில் யெகோவாவை அணுகுகிறீர்களா? அனைத்து கூட்டங்களுக்கும் ஆஜராகி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவற்றில் பங்கேற்கிறீர்களா?—எபி. 10:23-25.

5 நல்ல கிரியைகளால் பலமான விசுவாசம் நிரூபிக்கப்படும். (யாக். 2:26) நமது நம்பிக்கையை மற்றவர்களுக்கு அறிவிப்பதே, நமது விசுவாசத்தை மெய்ப்பித்துக்காட்டுவதற்கான ஒரு மிகச் சிறந்த வழி. நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை நீங்கள் நாடுகிறீர்களா? ஊழியத்தில் இன்னும் அதிகம் செய்வதற்கு உங்களை அனுமதிக்கும் விதத்தில் உங்களது சூழ்நிலைமைகளை தக்கவாறு அமைத்துக்கொள்ள முடியுமா? நமது ஊழியத்தின் தரத்தையும், திறம்பட்டத்தன்மையையும் முன்னேற்றுவிக்க நாம் பெறும் ஆலோசனைகளைப் பொருத்திப்பிரயோகிக்கிறீர்களா? தனிப்பட்ட ஆவிக்குரிய இலக்குகளை வைத்து, அவற்றை அடைய நீங்கள்தாமே கடினமாக உழைக்கிறீர்களா?

6 அன்றாட வாழ்க்கை விவகாரங்களில் மிதமிஞ்சி ஈடுபடுவதைக் குறித்தும், பொருள்சம்பந்தமான அல்லது தன்னல அக்கறைகள் ஆவிக்குரிய நோக்குநிலையை மங்கவைக்க அனுமதிப்பதைக் குறித்தும் இயேசு எச்சரித்தார். (லூக். 21:34-36) நம் விசுவாசத்தைக் குறித்ததில் கப்பல் சேதம் நிகழாமல் தவிர்ப்பதற்காக, நாம் எவ்வாறு நடக்கிறோம் என்று அதிகவனமாக கண்காணிக்க வேண்டும். (எபே. 5:15; 1 தீ. 1:19) நாங்கள் ‘நல்ல போராட்டத்தைப் போராடினோம், ஓட்டத்தை முடித்தோம், விசுவாசத்தைக் காத்துக்கொண்டோம்,’ என்று கடைசியாக நம் அனைவராலும் அறிவிக்க இயலும் என நம்பிக்கையோடு இருப்போமாக.—2 தீ. 4:7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்