உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/96 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 11/96 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரையும் வீட்டு பைபிள் படிப்புகள் தொடங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சந்திக்க விசேஷ முயற்சி எடுக்கப்படும்.

டிசம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 25.00 ரூபாய் (பெரிய அளவு ரூபாய் 45.00) நன்கொடைக்கு கொடுக்கலாம். இதற்குப் பதிலாக, பொருத்தமான சந்தர்ப்பங்களில், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ, அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தையோ 45.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம்.

ஜனவரி: பழைய 192-பக்க புத்தகங்கள் ஒவ்வொன்றும் 10.00 ரூபாய் நன்கொடைக்கு விசேஷ அளிப்பு. இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் இன்னும் கிடைக்கின்றன: ஆங்கிலம்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, மனிதன் வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா?; கன்னடம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” “கடவுள் பொய்ச் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” குஜராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ் மற்றும் ஹிந்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?; மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல். பெங்காலி அல்லது நேப்பாளி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு 32-பக்க சிற்றேடுகள் எதையாவது கொடுக்கலாம். மலையாளத்தில் வாசிக்க விரும்பும் ஆட்களுக்கு உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம், பஞ்சாபியில் வாசிக்க விரும்பும் ஆட்களுக்கு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம். கடைசியில் குறிப்பிடப்பட்ட இந்த இரண்டு புத்தகங்களையும் விசேஷ விலைக்கு அளிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.

பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்.) அல்லது உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், என்ற புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம். பஞ்சாபியில் வாசிக்க விரும்பும் ஆட்களுக்கு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம். இதற்கு பதிலாக, பழைய 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்கள் எதையாவது 10.00 ரூபாய் நன்கொடைக்குக் கொடுக்கலாம்.

◼ இராஜ்ய செய்தி எண் 34 துண்டுப் பிரதிகளை இன்னும் கையிருப்பில் வைத்திருக்கும் சபைகள், இவற்றை வீட்டுக்குவீடு ஊழியத்திலோ அல்லது வேறு இடங்களிலோ மற்ற துண்டுப்பிரதிகளை பயன்படுத்துகிற மாதிரியே உபயோகிக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்தலாம். உங்களுடைய பிராந்தியத்தில் செய்யத்தகுந்ததாக இருக்குமானால், பிரஸ்தாபிகள் ஆட்கள் இல்லாத ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துண்டுப்பிரதியை விட்டுவரலாம். ஆனால் வழிப்போக்கர்களுடைய கண்களில் படாதவகையில் விட்டுவரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். விலைமதிப்பற்ற இந்தச் செய்தியடங்கிய பிரதிகளில் மீதியிருக்கும் பிரதிகள் அனைத்தையும் விநியோகிக்க முயற்சியெடுக்கப்பட வேண்டும்.

◼ 1951 முதல் 1959 வரையுள்ள பைண்டிங் செய்யப்பட்ட ஆங்கில காவற்கோபுர தொகுதிகள் ஆர்டர் கொடுத்திருந்த சபைகளுக்கு தற்போது அனுப்பி வைக்கப்படுகின்றன. பிரஸ்தாபிகளுக்கும் பயனியர்களுக்கும் இந்தத் தொகுதிகள் ஒவ்வொன்றின் விலையும் ரூபாய் 90.00—ஒன்பது தொகுதிகள் அடங்கிய ஒரு செட்டின் விலை ரூபாய் 810.00 ஆகும். இந்தத் தொகுதிகளை கையிருப்பில் வைத்துக்கொள்ளாமல் ஆர்டர் கொடுத்த தனிநபர்களுக்கு சீக்கிரமாக கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை உடனடியாக சங்கத்திற்கு செலுத்திவிட வேண்டும். பைண்டிங் செய்யப்பட்ட இந்தத் தொகுதிகள் விசேஷ தருவிப்பு பிரசுரம் என்பதை நினைவில் வையுங்கள், ஆகவே திட்டவட்டமாக வேண்டப்பட்டிருந்தால் மட்டுமே ஆர்டர் செய்யவேண்டும். மற்ற விசேஷ தருவிப்பு பிரசுரங்களைப் போலவே, அவற்றின் விலையை அடுத்த முறை தொகை அனுப்புகையில் சங்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இந்தத் தொகுதிகளை அனுப்பிவைத்ததும், பழைய தொகுதிகளுக்கு எங்களிடம் எந்த ஆர்டரும் நிலுவையில் இருக்காது—எல்லா சபைகளும் இதுவரை தாங்கள் ஆர்டர் செய்த பழைய தொகுதிகளை பெற்றிருக்கும். இருப்பினும், இந்தத் தொகுதிகள் சிலவற்றை கையிருப்பில் நாங்கள் வைத்திருப்போம். ஆகையால், இந்தத் தொகுதிகள் வேண்டுமென்று விரும்புகிறவர்கள் தங்களுடைய சபையின்மூலம் உடனடியாக கேட்டு எழுதவேண்டும். கையிருப்பு தீர்ந்துபோனதும், இனி பழைய தொகுதிகளுக்கான வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எதிர்காலத்தில் வரப்போகும் தொகுதிகளுக்கான நிலையான தருவிப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். புதிய தொகுதிகளுக்கான நடப்பில் உள்ள நிலையான தருவிப்புகளுக்கு தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்