உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/97 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 1/97 பக். 7

அறிவிப்புகள்

◼ ஜனவரி: விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய பதிப்பு புத்தகங்கள் ஒவ்வொன்றும் 10.00 ரூபாய் நன்கொடைக்கு. பெங்காலி அல்லது நேப்பாளி வாசிக்க விரும்பும் ஆட்களுக்கு 32-பக்க சிற்றேட்டை அளிக்கலாம். மலையாளத்தில் வாசிக்க விரும்பும் ஆட்களுக்கு உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கும், பஞ்சாபி விரும்புகிறவர்களுக்கு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கும் அளிக்கலாம். கடைசியில் குறிப்பிடப்பட்ட இவ்விரண்டு புத்தகங்களும் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.

பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்), அல்லது உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றீடாக, 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்களில் எதையாவது 10.00 ரூபாய்க்கு வழங்கலாம்.

மார்ச்: “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய புத்தகம். சபைகள் இந்தப் புத்தகத்திற்காக தங்களுடைய ஆர்டர்களை தங்கள் மாநாடு முடிந்தவுடனேயே அனுப்ப வேண்டும்.

ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள்.

◼ இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 23, சூரிய அஸ்தமனத்திற்கு பின் நினைவு நாளை ஆசரிக்க சபைகள் வசதியான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். பேச்சை முன்னதாக ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு அடையாளச் சின்னங்களைப் பரிமாறுவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக ஆரம்பிக்கக் கூடாது. உங்களுடைய பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்பொழுது ஏற்படும் என்பதை தீர்மானிப்பதற்கு உள்ளூர் மூலங்களுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அந்த நாளில் வெளி ஊழியத்திற்கான கூட்டத்தைத் தவிர வேறு எந்தக் கூட்டங்களும் நடத்தப்படக் கூடாது. எனவே காவற்கோபுர படிப்பை மற்றொரு சமயத்தில் நடத்துவதற்காக பொருத்தமான சரிப்படுத்துதல்கள் செய்ய வேண்டும். வட்டாரக் கண்காணிகள் உள்ளூர் சூழ்நிலைமைகளுக்கேற்ப தங்களுடைய கூட்ட நேரங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சபையும் அதனுடைய சொந்த நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கதாக இருந்தபோதிலும், அது எப்பொழுதும் சாத்தியமாக இல்லாமல் இருக்கலாம். அநேக சபைகள் வழக்கமாக ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகிற இடங்களில், ஒருவேளை ஒன்றோ இரண்டோ சபைகள் அந்த மாலைவேளைக்காக மற்றொரு மன்றத்தை பயன்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளலாம். அக்கறைகாண்பிக்கும் புதியவர்கள் ஆஜராவதற்கு அசெளகரியமாக காணுமளவுக்கு அதிக காலதாமதமாக நினைவு ஆசரிப்பை ஆரம்பிக்கக் கூடாது. வருகையாளர்களுக்கு வணக்கம் தெரிவிப்பதற்கும் அக்கறை காட்டும் நபர்களுக்கு தொடர்ந்து ஆவிக்குரிய உதவியளிப்பதற்கும் அல்லது பரஸ்பர உற்சாகமூட்டுதலை அனுபவிப்பதற்கும் கூட்டத்திற்கு முன்பும் பின்பும் சமயமில்லாதளவுக்கு அட்டவணை போடாதீர்கள். எல்லா அம்சங்களையும் தீர ஆலோசித்த பிறகு, அந்த நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகிறவர்களுக்கு என்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்த உதவியளிக்கும் என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும்.

◼ அந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தின் காரணமாக, நினைவு ஆசரிப்புக்காக பேச்சாளரை நியமிக்கையில், வெறுமனே ஒருவர் மாறி ஒருவராக பேச்சு கொடுப்பதற்குப் பதிலாக அல்லது ஒவ்வொரு வருடமும் ஒரே பேச்சாளரையே பயன்படுத்துவதற்கு பதிலாக, மூப்பர்களில் அதிக தகுதிவாய்ந்த ஒருவரை மூப்பர் குழுவினர் தெரிவுசெய்ய வேண்டும்.

◼ 1997 நினைவு ஆசரிப்பு காலத்திற்கான விசேஷ பொதுப் பேச்சு ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடுக்கப்படும். பேச்சுத் தாள் ஒன்று கொடுக்கப்படும். அந்த வாரயிறுதியில் வட்டாரக் கண்காணியினுடைய சந்திப்பு, வட்டார மாநாடு, அல்லது விசேஷ மாநாட்டு தினத்தையுடைய சபைகள், விசேஷித்த பேச்சை அதைத் தொடர்ந்து வரும் வாரத்தில் வைத்துக்கொள்வார்கள். ஏப்ரல் 6-ம் தேதிக்கு முன்பாக எந்தச் சபையும் விசேஷித்த பேச்சைக் கொடுக்கக்கூடாது.

◼ ஜனவரி 1, 1997 முதற்கொண்டு, பின்வரும் விலைகள் அமலுக்கு வரும்:

பயனியர் சபை/பொது மக்கள்

32-பக்க சிறுபுத்தகங்கள் 1.50 2.00

எல்லா சிற்றேடுகளும் 4.00 6.00

இளைஞர் கேட்கும் கேள்விகள்,

பைபிள் கதைகள் (சிறியது),

படைப்பு (சிறியது),

பாட்டுப்புத்தகம் (சிறியது) 20.00 30.00

மனிதவர்க்கத்தின் தேடல் 40.00 60.00

புதிய உலக மொழிபெயர்ப்பு

(bi12 துணைக்குறிப்புகளுடன்) 60.00 80.00

தினந்தோறும்

வேதவாக்கியங்களை ஆராய்தல்* 6.00 10.00

ஆடியோகேஸட் (ஒன்று) 55.00 65.00

* ஜனவரி 1, 1997-க்கு முன்பு, தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—1997 விநியோகிக்கப்பட்டிருந்தாலும்கூட இந்த விலை அதற்குப் பொருந்தும்.

◼ ஜனவரி 6-ல் துவங்கும் வாரத்திற்கான ஊழியக் கூட்டத்தில் ஆஜராயிருக்கும் முழுக்காட்டப்பட்ட அனைத்து பிரஸ்தாபிகளும், மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையையும் (Advance Medical Directive/Release card) தங்களுடைய பிள்ளைகளுக்கான அடையாள அட்டையையும் (Identity Card) லிட்ரச்சர் கெளண்ட்டரிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) —திபெத்து

வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது! —குஜராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்