உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/97 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 2/97 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்), அல்லது உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றீடாக, விசேஷ அளிப்புக்கான 192-பக்க பழைய புத்தகங்களில் எதையாவது 10.00 ரூபாய்க்கு வழங்கலாம்.

மார்ச்: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம், 20.00 ரூபாய் நன்கொடைக்கு.

ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள்.

குறிப்பு: குடும்ப வாழ்க்கை மற்றும் என்றும் வாழலாம் புத்தகங்களை நன்கு பயன்படுத்தும்படி எல்லா சபைகளையும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். வருடம் முழுவதும் இந்தப் புத்தக பிரதிகளை எப்போதும் வைத்திருக்கவும், ஒவ்வொரு பொருத்தமான சூழலிலும் கொடுக்கவும் பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்தலாம். மேற்சொல்லப்பட்ட அளிப்பு பிரசுரங்களுக்கு இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், அடுத்தமுறை அனுப்பும் பிரசுர தருவிப்பு படிவத்தில் (S-AB-14)-ல் அதை ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ செயலரும் ஊழியக் கண்காணியும், ஒழுங்கான பயனியர்கள் அனைவரின் நடவடிக்கையையும் மறுபார்வை செய்ய வேண்டும். மணிநேர தேவையைப் பூர்த்தி செய்வதில் யாருக்காவது பிரச்சினை இருக்குமானால், உதவியளிப்பதற்காக மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்காக, அக்டோபர் 1, 1993, மற்றும் அக்டோபர் 1, 1992 தேதியிட்ட சங்கத்தின் கடிதங்களை (S-201) மறுபார்வை செய்யுங்கள். அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழியம் (ஆங்கிலம்) உட்சேர்க்கையில் பாராக்கள் 12-20-ஐயும் பார்க்கவும்.

◼ மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர்களாக சேவை செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்போதே தங்கள் திட்டங்களைச் செய்து, சீக்கிரமாக தங்கள் விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அவசியமான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்யவும் போதுமான பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் கையிருப்பில் வைத்திருப்பதற்கும் இது மூப்பர்களுக்கு உதவியாக இருக்கும். துணைப் பயனியர் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் சபையில் அறிவிக்கப்பட வேண்டும்.

◼ சபையானது அந்த வட்டாரத்திற்குரிய மாநாடுகளுக்குச் செல்லும்போது பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்பதை மூப்பர் குழு தெரிந்திருக்க வேண்டும்: விசேஷ மாநாட்டு தினம் திட்டமிடப்பட்டிருக்கும்போது, சபையானது, அந்த வாரத்தின் போது நடக்கும் எல்லா வழக்கமான கூட்டங்களையும் கொண்டிருக்கும்; பொதுப் பேச்சும் காவற்கோபுர படிப்பும் ரத்து செய்யப்படும். வட்டார மாநாடு ஒன்றிற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருக்கையில், சபையானது தேவ ராஜ்ய ஊழியப் பள்ளியையும் ஊழியக் கூட்டத்தையும்கூட ரத்து செய்யும்; அந்த வாரத்தில் சபை புத்தகப் படிப்பு மட்டுமே உள்ளூரில் நடத்தப்படும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

பூமியில் வாழ்க்கையை என்றென்றும் அனுபவியுங்கள்! —அஸ்ஸாமி, திபெத்திய மொழி

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) —ஸோங்கா

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்

—ஆங்கிலம், கன்னடா, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், ஹிந்தி

(இந்தப் புத்தகம் பிரஸ்தாபிகளுக்கும் பொது மக்களுக்கும் 20.00 ரூபாய்க்கும் பயனியர்களுக்கு 12.00 ரூபாய்க்கும் கிடைக்கும்.)

கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்?

—அஸ்ஸாமி, ஆங்கிலம், ஒரியா, கன்னடம், காஸி, குஜராத்தி, கொங்கணி (கன்னடம், தேவனாகிரி, ஆங்கில எழுத்து வடிவங்களில் தனித்தனியாகக் கிடைக்கின்றன), நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மணிப்புரி, மராத்தி, மலையாளம், மிஸ்ஸோ, தமிழ், தெலுங்கு, ஹிந்தி

(இந்தச் சிற்றேடு, பிரஸ்தாபிகளுக்கும் பொது மக்களுக்கும் 6.00 ரூபாய்க்கும் பயனியர்களுக்கு 4.00 ரூபாய்க்கும் கிடைக்கிறது.)

நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறிய அளவு) —பஞ்சாபி

◼ புதிய ஆடியோகேஸட்டுகள் கிடைக்கின்றன:

கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? (ஒரு கேஸட்) —கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி

(இந்த ஆடியோகேஸட்டுகள் பிரஸ்தாபிகளுக்கும் பொது மக்களுக்கும் 65.00 ரூபாய்க்கும் பயனியர்களுக்கு 55.00 ரூபாய்க்கும் கிடைக்கும்.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்