உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/97 பக். 4-5
  • சந்தாக்களை எப்படிக் கையாளுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சந்தாக்களை எப்படிக் கையாளுவது
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 5/97 பக். 4-5

சந்தாக்களை எப்படிக் கையாளுவது

உலகம் முழுவதிலும் 40-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்திய மொழிகளில் பத்திரிகைகளை, இந்திய கிளை அலுவலகம் அனுப்பிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவது அதிக சந்தோஷத்தை அளிக்கிறது. மேலுமாக, மற்ற நாடுகளுக்கு இந்திய மொழி சந்தாக்களை நாம் அனுப்புவதுபோலவே, மற்ற கிளை அலுவலகங்களிலிருந்தும் அந்நிய மொழி சந்தாக்கள் நமக்கு அனுப்பப்படுகின்றன. எனவே, இந்தியா, வங்காள தேசம், நேப்பாளம் ஆகிய நாடுகளிலுள்ள அந்நிய மொழி பேசும் தனிப்பட்ட ஆட்கள், தங்களுடைய தாய் மொழியில் சந்தாக்களைப் பெற உதவிசெய்யும் சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்தச் சந்தாக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்காக நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; இதன் சம்பந்தமாக சாதகமான மனநிலையைக் காத்துக்கொள்ளும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

2 இருந்தபோதிலும், தபால் துறை சேவையின் மூலம் பத்திரிகைகள் நாடு முழுவதும் அனுப்பப்படுவதனுடன் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளை நாங்கள் எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அநேக சந்தாக்களும், விநியோகஸ்தர் பத்திரிகைகளும் பட்டுவாடா செய்யப்படுவதில்லை; சில, பட்டுவாடா செய்யப்பட முடியாதவையாக சங்கத்துக்கே திரும்பி வந்துவிடுகின்றன. பிரஸ்தாபிகள் அதிக கவனமாக இருந்து, காரியங்களை உடனடியாக கையாண்டிருப்பார்களேயானால், இப்படிப்பட்ட அநேக பிரச்சினைகளைத் தவிர்த்திருந்திருக்கலாம் என ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, சிறந்த விதத்தில் சேவை அளிப்பதற்கும், அதோடு சந்தாக்களைக் கையாளுவதில் தேவையற்ற பிரச்சினைகளையும் தாமதங்களையும் தவிர்க்க உதவுவதற்கும், பின்வரும் குறிப்புகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

3 முன்கூட்டியே திட்டமிடுதல் சிறந்த சேவையளிப்பதில் விளைவடையும். (ஆதி. 41:33-36; லூக். 14:28-30) உதாரணமாக, துணைப் பயனியர்கள் இருக்கையில் சபைகள், பத்திரிகைகளுக்காக விசேஷித்த ஆர்டர் செய்யவேண்டியதாகலாம். எத்தனை பேர் துணைப் பயனியராக பெயர் பதிவு செய்கிறார்கள் என்பதை அறிவதற்கு கடைசி நிமிடம் வரை காத்திருப்பதற்கு பதிலாக எத்தனை பேர் அந்த ஊழியத்தில் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் முன்கூட்டியே விசேஷித்த ஆர்டர்களை அனுப்புவது ஞானமான காரியமாய் இருக்கும். நீங்கள் கேட்கும் எல்லா பத்திரிகைகளையும் அனுப்பிவைக்கவே நாங்கள் விரும்புகிறோம். இருந்தாலும், உங்களுக்கு தேவைப்படும் பத்திரிகைக்கான விசேஷித்த ஆர்டர்களை, அந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டபின் நாங்கள் பெற்றுக் கொண்டால், உங்கள் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய இயலாது. நீங்கள் பெற்றுக் கொள்ள விரும்பும் பத்திரிகைக்கான உங்கள் விசேஷித்த ஆர்டர்கள், அந்தப் பத்திரிகையின் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன்னதாகவே சங்கத்துக்குக் கிடைக்க வேண்டும் என்பதை தயவுசெய்து கவனத்தில் வைத்துக் கொள்ளவும். தற்போதுள்ள ஆர்டரில் அல்லது விலாசத்தில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டி இருந்தால் அது 45 நாட்களுக்குள் செய்யப்படும்.

4 திருத்தம், தெளிவு, முழுமை ஆகியவை எந்தத் தபாலையும் சரியாக பட்டுவாடா செய்ய முக்கியமாக தேவைப்படுபவை. நீங்கள் சந்தா தாளையோ அல்லது விநியோகஸ்தர் பத்திரிகைகளை அனுப்புவதற்கான விலாசத்தையோ பூர்த்தி செய்கையில், உங்கள் பகுதியில் உள்ள இடங்களின் பெயர்களை அறியாத ஒருவர் அதை வாசித்து, சரியாக புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள். எனவே, தேவைப்பட்ட எல்லா தகவல்களும் சரியான வரிசையிலும், தெளிவாகவும், எழுத்துப் பிழையின்றியும் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள். நகரத்தின் அல்லது தபால் நிலையத்தின் பெயரோ அஞ்சல் குறியீட்டு எண்ணோ சுருக்கக் குறியீட்டில் எழுதப்படக் கூடாது. ஒவ்வொரு தகவலையும் தனிப்படுத்திக் காட்ட அதை அடுத்து ஒரு காற்புள்ளி வைத்து, ஒவ்வொரு வார்த்தையையும் அடுத்து கொஞ்சம் இடம்விட்டு எழுதவும். திருத்தமற்ற அல்லது முழுமையற்ற தகவல்கள், பட்டுவாடாவைத் தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ செய்யலாம். சந்தாக்களைப் பொறுத்தவரை, நீங்கள் எழுதியவற்றை சந்தாதாரர் சரிபார்த்து தரும்படி கேட்பது எப்போதும் ஞானமானது. விநியோகஸ்தர் பத்திரிகைகளை அனுப்புவதற்கான விலாசம், தபால்காரர் பத்திரிகைகளை பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வசதியான இடமாக இருக்கவேண்டியது அவசியம்.

5 சமீபத்திய ஊழிய படிவங்களை உபயோகிக்கவும். வேலையை, எளிதாகவும் வேகமாகவும் செய்வதற்காகவே இப்படிவங்கள் இருக்கின்றன. உதாரணமாக, விநியோகஸ்தர் ஆர்டர் ([Distributor’s Order] M-AB-202) படிவத்தை, விநியோகஸ்தர் பத்திரிகைகளை புதிதாக ஆர்டர் செய்வதற்கோ, தற்போதுள்ள ஆர்டரை அதிகரிப்பதற்கோ, குறைப்பதற்கோ, அல்லது நீக்குவதற்கோ, விசேஷித்த ஆர்டர்கள் செய்வதற்கோ நீங்கள் உபயோகிக்கலாம். எனவே, சங்கத்துக்கு கடிதங்கள் எழுதுவதற்கு பதிலாக இந்த நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஊழிய படிவத்தைத் தயவுசெய்து உபயோகியுங்கள். சந்தாக்களைப் புதுப்பிப்பதற்கு, உங்கள் சந்தா தீர்ந்துபோகிறது ([Expiring Subscription] M-91/M-191) தாள்களைத் தயவுசெய்து உபயோகிக்கவும். அவை இல்லையென்றால், சந்தாதாரரின் விலாசமுள்ள லேபிலை (உறையிலிருந்து) எடுத்து, புதிய சந்தா தாளுடன் அல்லது புதுப்பிக்கும் படிவத்துடன் ([Renewal Form] M-5/M-105) இணைத்து நீங்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கலாம். சந்தா விலாசத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே சந்தா விலாச மாற்றம் ([Subscription Change Of Address] M-205) படிவத்தை உபயோகித்து தெரியப்படுத்த வேண்டும். மாற்றங்கள் செய்கையில், எப்போதும் பழைய விலாசத்தையும் புதிய விலாசத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். பத்திரிகை உறையிலிருந்து பழைய விலாசத்தின் லேபிலை எடுத்து அதையும் இதனுடன் சேர்த்து உங்களால் அனுப்ப முடிந்தால் அது அதிக பிரயோஜனமாக இருக்கும். எந்தவொரு விலாச மாற்றத்தையும் உள்ளூர் தபால் நிலையத்துக்குத் தெரிவிக்கும்படியோ அல்லது மாற்றம் அமலுக்குவரும் வரை, தபால் நிலையத்திற்குச் சென்று பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ள திட்டமான ஏற்பாடுகளைச் செய்யும்படியோ சந்தாதாரருக்குச் சொல்லுங்கள். அதேபோலவே, விநியோகஸ்தர் பத்திரிகைகள் அனுப்பப்படும் விலாசத்தில் மாற்றமிருந்தால், மாற்றம் அமலுக்கு வரும் வரை, தங்கள் பத்திரிகைகளைப் பழைய விலாசத்திலிருந்தோ அல்லது தபால் நிலையத்திலிருந்தோ பெற்றுக் கொள்வதற்கு சபைகள் ஏற்பாடுகளைச் செய்யும்படி எதிர்பார்க்கப்படுகின்றன.

6 சந்தாக்களைக் கையாளுவதிலும் சங்கத்துக்குத் தேவைப்படும் தகவலளிப்பதிலும் உடனடியாக செயல்படுங்கள். சந்தாக்களைப் பெற்றபின் நடக்கும் அடுத்த கூட்டத்திலேயே, அவற்றை சபையில் அதற்காக நியமிக்கப்பட்டவரிடம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் செயலர், பெற்றுக் கொண்ட எல்லா சந்தாக்களையும், ஒன்று மட்டுமே இருந்தாலும்கூட, சரியாக பூர்த்தி செய்யப்பட்ட வாராந்தர சந்தாக்கள் ([Weekly Subscriptions] M-AB-203) படிவத்தோடு சேர்த்து அனுப்பி வைக்கவேண்டும். மாதாந்தர பணம் செலுத்துதலோடு சேர்த்து அனுப்ப சந்தாக்களை வைத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் சங்கத்திற்கு அனுப்பும் படிவங்களின் ஒரு பிரதியை எப்போதும் பத்திரமாக வையுங்கள். சந்தாதாரர்கள் தங்களுடைய பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள பிரஸ்தாபிகள் மீண்டும் சென்று அவர்களை சந்திக்க வேண்டும். பொதுவாக, சந்தா தாள்களை சங்கம் பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக சந்தாதாரர்கள் தங்களுடைய சந்தாவின் முதல் பிரதியைப் பெற வேண்டும். தெளிவுபடுத்தும் நோட்டீஸ் ([Verification Notice] M-232), உங்கள் சந்தா தீர்ந்துபோகிறது (M-91 அல்லது M-191) படிவம், பட்டுவாடா செய்யப்பட முடியாத சந்தாவை விசாரித்தல் ([Undeliverable Subscription Follow-up] M-210) படிவம் போன்று எந்த அறிக்கையை நீங்கள் சங்கத்திலிருந்து பெற்றுக் கொண்டாலும் தயவுசெய்து உடனடியாக செயல்படுங்கள். பட்டுவாடா செய்யப்பட முடியாத சந்தாவுக்குரிய சந்தாதாரரைத் தேடி கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பத்திரிகையை அனுப்பி வைப்பதில் சாத்தியமான தடங்கல் ஏற்பட்டதை அவரிடம் தெரிவிக்க வேண்டும். எனினும், உங்களுடைய குறிப்போடு, பட்டுவாடா செய்யப்பட முடியாத சந்தாவை விசாரித்தல் படிவத்தை சங்கம் பெற்றுக் கொண்ட உடனேயே அவை வரத் தொடங்கும்.

7 விநியோகஸ்தர் பத்திரிகைகள் அல்லது சந்தாக்கள் ஒழுங்கற்று வந்தால் தாமதிக்காமல் உடனடியாக தெரியப்படுத்துங்கள். ஒரு பத்திரிகைக்கான விநியோகஸ்தர் பத்திரிகைகள், அந்தப் பத்திரிகையின் வெளியீட்டுத் தேதி வரை வரவில்லை என்றால், எல்லா விவரங்களோடும் சங்கத்துக்கு தயவுசெய்து எழுதுங்கள். தெரியப்படுத்துவதில் நீங்கள் உடனடியாக செயல்படுபவராக இருந்தால், நீங்கள் பெறாதவற்றை சங்கம் அனுப்பி வைக்கும். சந்தா சங்கத்துக்கு அனுப்பப்பட்டு, எட்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட பின்னும், அதைப் பெறவில்லை என்றால் அது சபை மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை கடந்த இரண்டு மாதங்களாக, மாதாந்தர வரவுசெலவு அறிக்கைகளில் (monthly statements) அது வரவு வைக்கப்படவில்லை என்றால், வாராந்தர சந்தாக்களின் படிவத்தினுடைய ஒரு பிரதியுடன், சம்பந்தப்பட்ட எல்லா சந்தா தாள்களின் நகல்களையும் ஒரு விளக்கக் கடிதத்தோடு சேர்த்து மீண்டும் செயலர் அனுப்ப வைக்க வேண்டும். ஆனால், ஒருவேளை மாதாந்தர வரவுசெலவு அறிக்கையில் தொகை வரவுவைக்கப்பட்டிருந்தால், சந்தேகத்துக்குரிய சந்தா தாள்களின் பிரதியை மட்டும், சந்தாக்கள் வரவுவைக்கப்பட்டிருப்பதையும் ஆனால் இதுவரை பெறப்படவில்லை என்பதையும் விவரிக்கும் ஒரு கடிதத்துடன் அனுப்பிவைக்க வேண்டும். வரவுசெலவு அறிக்கையில், வாராந்தர சந்தாக்கள் (M-AB-203) படிவத்திற்கு ஏற்கெனவே தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால் அதன் பிரதிகளை தயவுசெய்து அனுப்ப வேண்டாம்.

8 உள்ளூர் தபால் துறை அதிகாரிகளுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வது, சரியான விதத்தில் பத்திரிகைகள் பட்டுவாடா செய்யப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்கள் நம்மைக் குறித்து நன்கு தெரிந்து வைத்திருப்பது நம்மைப் பற்றியும் நம்முடைய பத்திரிகைகளைப் பற்றியும் ஏதேனும் தப்பெண்ணம் இருந்தால் அதைப் போக்கிவிட செய்யலாம். அவர்கள் நமக்காக செய்யும் அத்தியாவசிய சேவைக்கு போற்றுதல் தெரிவிப்பது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். (நியா. 8:1-3) சபையிலுள்ள அனுபவமிக்க சகோதரர்கள் (மற்றும் சகோதரிகள்) உள்ளூர் தபால் துறை அதிகாரிகளை அவ்வப்போது சிநேகப்பான்மையுடன் சந்திக்கச் செல்வது நல்லது. தபால்காரர்களுடனும் மற்ற அதிகாரிகளுடனும் அவர்களுடைய வீடுகளில் சிநேகப்பான்மையான கலந்தாலோசிப்புகளை செய்வது, அவர்களோடு நல்ல உறவுகளைக் கட்டியமைக்க உதவலாம். ஒத்துழைப்பது, குறிப்பிட்ட சில தபால் நிலையங்களுக்கு பரிசு சந்தாக்களை அளிப்பது, டிப்ஸ் கொடுப்பது போன்றவை உறவுகளை முன்னேற்றுவிக்க நீங்கள் செய்ய முடிந்த சில காரியங்கள்.

9 தர்க்கம் செய்பவராக ஒருபோதும் இருக்காதீர்கள். தபாலை சரியான நேரத்திற்கு உங்கள் தபால்காரர் பட்டுவாடா செய்ய தவறுகிற போதும்கூட, அவரும் அநேக பிரச்சினைகளையும் இடையூறுகளையும் எதிர்ப்படுகிறார் என்பதை அறிந்து அவரிடம் தயவோடு நடந்துகொள்ளுங்கள். (யாக். 3:13) உங்கள் தபால், முக்கியமாக அதிக கனமானவையாக இருக்கையில், அவற்றை எடுத்துச் செல்வதில் உள்ளூர் தபால் நிலையத்தோடு ஒத்துழையுங்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், முக்கியமாக பத்திரிகைகளின் கட்டுகள் (bundles) வரும்போது, தபால்காரர் நம்முடைய வீட்டில் அவற்றைக் கொண்டுவந்து கொடுக்கும்படி எதிர்பார்ப்பதற்கு பதிலாக, உங்கள் தபால்களை தவறாமல் யாரோ ஒருவர் தபால் நிலையத்துக்குச் சென்று பெற்றுவரும்படி ஏற்பாடு செய்வது உசிதமானது. இருந்தபோதிலும், உங்கள் தபால் வரும்போது, தபால்காரர் உங்களிடம் அதைத் தெரிவிக்கும்படி தயவாக கேட்டுக் கொள்ளலாம்.

10 தபால் துறை அதிகாரிகள் உட்பட, அரசாங்க ஊழியர்களுடனான நம்முடைய செயல்தொடர்புகளில், நாம் விழிப்புடனும் சாதுரியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (மத். 10:16) சந்தாக்களுக்கு சம்பவிப்பது, உள்ளூர் சபையுடைய, அதோடுகூட சங்கத்தினுடைய, மிக முக்கியமாக, கடவுளுடைய பெயரின் நன்மதிப்பைப் பாதிக்கிறது. (1 சா. 16:7ஆ) எனவே, சிறந்த தபால் சேவையைப் பெற உள்ளூரில் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்து சிந்திக்கும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். சங்கத்தின் வழிகாட்டும் அறிவுரைகளை பின்பற்றுகையிலும், உள்ளூர் தபால் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கையிலும் நல்ல சேவை கிடைக்கும் என்பதை நீங்களே உறுதிசெய்து கொள்வீர்கள் என நாங்கள் நம்பிக்கையாய் இருக்கிறோம்.

சிறந்த சேவையைப் பெற நீங்கள் என்ன செய்யலாம்

(1) சந்தா தாள்களைப் பூர்த்தி செய்கையில், தேவைப்படும் எல்லா தகவலும் திருத்தமாகவும், தெளிவாகவும், சரியான வரிசையிலும் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள். முகவரியிலுள்ள ஒவ்வொரு தகவலையும் தனிப்படுத்திக் காட்ட காற்புள்ளியை உபயோகிக்கவும். நீங்கள் பூர்த்தி செய்தவற்றை சந்தாதாரரையே சரிபார்க்கும்படி சொல்வது ஞானமானது.

(2) சந்தாதாரரின் பெயருக்கு முன்னால், திரு., திருமதி, செல்வி, அல்லது டாக்டர் என வேண்டியவற்றை எழுதலாம், ஆனால் பொதுவாக பெயரைத் தொடர்ந்து எதையும் எழுத வேண்டிய அவசியமில்லை.

(3) தபால் நிலையத்தினுடைய மற்றும் நகரத்தினுடைய பெயரையும், மாநகரங்களின் பெயரையும்கூட முழுமையாகவே எழுதவேண்டும்—சுருக்கக் குறியீட்டை உபயோகிக்காதீர்கள். அஞ்சல் குறியீட்டு எண் என்னவென்று தெரியாதபட்சத்தில், தயவுசெய்து அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு கோடிடவும்.

(4) சபை எண் என குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில், சந்தாதாரர் வாழும் பிராந்தியத்திலுள்ள சபையுடைய எண் இருக்க வேண்டும். உங்கள் சபையின் பிராந்தியத்திற்கு வெளியே அவர் வசிக்கிறவராகவும் அவர் இருக்கும் பிராந்தியத்திலுள்ள சபையின் எண்ணை நீங்கள் அறியாதவராகவும் இருக்கையில், தயவுசெய்து அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு கோடிடவும்.

(5) பரிசு சந்தாக்கள், தாளின் வலப்புறத்தில் மேலே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் குறியிடப்பட வேண்டும். பரிசு அளிப்பவரின் பெயரையும் இடத்தையும் பற்றிய தகவல், சந்தா எடுப்பவர் எழுதுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

(6) மொழியைக் குறிப்பிடுகையில், ஆங்கில மொழி சந்தாக்களாக இருந்தாலும், முழுமையாக எழுதப்படவேண்டும். பிரேய்ல் மொழி சந்தாவுக்கு, அந்த மொழியையும் சேர்த்துக் குறிப்பிடுங்கள். (உதாரணம்: “பிரேய்ல்-ஆங்கிலம்.”) தற்சமயம், எந்த இந்திய மொழியிலும் பிரேய்ல் மொழி பிரசுரங்கள் இல்லை.

(7) காலப்பகுதியை பொறுத்தவரை, உள்ளூர் சந்தாவிற்கு, குறைந்தபட்சம் 12 பிரதிகள் என்ற எண்ணிக்கையில், அதிகபட்சம் 5 ஆண்டு காலத்துக்கு சந்தா செய்யலாம்; ஏர் மெயில் சந்தாவை பொருத்தவரை, ஒரு வருடத்துக்கும் கூடுதலாக சந்தா செய்யமுடியாது.

(8) புதுப்பித்தல்: உங்கள் சந்தா தீர்ந்துபோகிறது தாள்களை (M-91 மற்றும் M-191) தயவுசெய்து புத்துப்பிப்பதற்கு உபயோகிக்கவும். அவை இல்லையென்றால், புதுப்பிக்கும் படிவம் (M-5/M-105) அல்லது புதிய தாள்களை உபயோகிக்கவும். அவ்வாறு செய்கையில், சந்தாதாரரின் விலாசமுள்ள லேபிலை அவர் பெற்றுக்கொண்ட ஒரு பத்திரிகையின் உறையிலிருந்து எடுத்து உடன் சேர்த்து அனுப்புவது சிறந்ததாக இருக்கும்.

(9) பெரிய அச்செழுத்துப் பதிப்பு, காவற்கோபுரத்தின் 2-ம் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளபடி, (இந்திய மொழியில் இல்லை) சில மொழிகளுக்கு கிடைக்கும். அதில் படிப்புக் கட்டுரைகள் மாத்திரம் இருக்கும்.

(10) தொகை: சமீபத்திய சந்தா தொகைகளின் விவரம் பத்திரிகைகளில் காட்டப்பட்டுள்ளது. நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிப்பு செய்யப்படாதவரை, பயனியர்களுக்கான தொகையையும், பிரேய்ல் சந்தாக்களுக்கான தொகையையும் குறித்து சமீபத்திய காவற்கோபுர பிரசுரங்களின் விலைப் பட்டியலிலிருந்து தெரிந்துகொள்ளலாம். சந்தா தாளில் காட்டப்பட்டுள்ள தொகை, வாராந்தர சந்தாக்களின் படிவத்தில் உள்ளதுடன் ஒத்திருக்கிறதா என்பதை செயலர் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

(11) ஏர் மெயில் சந்தாவுக்கான தொகையைக் குறித்ததில், அரபு வளைகுடா நாடுகளுக்கு அல்லாமல் வேறு எந்த அயல்நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பத்திரிகைகளை அனுப்பினாலும், தற்சமயம் தபால் ஒன்றுக்கு ஆகும் செலவு, சாதாரண சந்தா தொகையுடன்கூட 9.00 ரூபாய். வளைகுடா நாடுகளுக்கான எல்லா சந்தாக்களும் முதல் வகுப்பு தபாலில் அனுப்பப்படுகின்றன; தபால் ஒன்றுக்கு ஆகும் செலவு 11.00 ரூபாய். மற்ற நாடுகளில் அச்சடிக்கப்படும் பத்திரிகைகளுக்கான புதிய ஏர் மெயில் தொகையை தயவுசெய்து சங்கத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

(12) உள்ளூர் சபை மூலம், பிரஸ்தாபிகளின் தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட எல்லா சந்தாக்களையும் அனுப்ப வேண்டும். அதேபோல, ஏதேனும் விவரத்தை அறிய சங்கத்தோடு தொடர்புகொள்ள வேண்டியிருந்தால், தயவுசெய்து சபையின்மூலம் அணுகவும். எல்லா சந்தாக்களையும் இரண்டு பிரதி எடுத்து, அவை பெற்ற பின் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் சந்தாக்களைக் கையாளுபவரிடம் கொடுத்துவிடுங்கள். செயலர், பெற்றுக்கொண்ட எல்லா சந்தாக்களையும், ஒன்று மாத்திரமே இருந்தாலும், சரியாக பூர்த்தி செய்யப்பட்ட வாராந்தர சந்தாக்களின் (M-AB-203) படிவத்துடன் சேர்த்து சங்கத்துக்கு ஒவ்வொரு வாரமும் அனுப்பிவைக்க வேண்டும். மாதாந்தர பணம் செலுத்தும் சமயத்தில் அனுப்புவதற்கென்று எந்தச் சந்தாவையும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது.

(13) பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சந்தாதாரர்களை மீண்டும் சென்று சந்தியுங்கள். சந்தாதாரர் தன்னுடைய பத்திரிகையின்/பத்திரிகைகளின் முதல் பிரதியைப் பெற, சந்தா தாளை/தாள்களை சங்கம் பெற்றுக் கொண்டதிலிருந்து ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.

(14) சங்கத்திற்கு தாள்களை அனுப்பி, எட்டு வாரங்களுக்கு அதிகமான பின்னும் சந்தாக்களைப் பெறவில்லை என்றால், சபைமூலம் அதைத் தெரியப்படுத்த வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக, மாதாந்தர வரவுசெலவு அறிக்கையில் தொகை வரவுவைக்கப்படவில்லை என்றால், வாராந்தர சந்தாக்களின் ஒரு பிரதியையும், சந்தா தாள்கள் சம்பந்தப்பட்ட எல்லா நகல்களையும் ஒரு விளக்கக் கடிதத்தோடுகூட சேர்த்து மீண்டும் செயலர் அனுப்பி வைக்கவேண்டும். ஏற்கெனவே தொகை, மாதாந்தர வரவுசெலவு அறிக்கையில் வரவுவைக்கப்பட்டிருந்தால், சந்தேகத்திற்குரிய சந்தா தாள்களின் பிரதியை மட்டும், சந்தாக்கள் வரவுவைக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை விவரிக்கும் ஒரு கடிதத்துடன் அனுப்பிவைக்கவும். ஏற்கெனவே தொகை வரவுசெலவு அறிக்கையில் வரவுவைக்கப்பட்டிருந்தால், எந்த வாராந்தர சந்தாக்களின் படிவங்களுடைய பிரதிகளையும் தயவுசெய்து அனுப்பாதீர்கள்.

(15) விலாச மாற்றம், முடிந்தால், ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே, சந்தா விலாச மாற்றம் படிவத்தை (M-205) உபயோகித்து, புதிய மற்றும் பழைய விலாசங்களோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படவேண்டும். முடிந்தால், சந்தாதாரரின் பழைய விலாசத்தையுடைய, விலாச லேபிலை தயவுசெய்து சேர்த்து அனுப்புங்கள். மாற்றம் அமலுக்கு வரும்வரை, உள்ளூர் தபால் துறை அதிகாரிகளிடம் விலாச மாற்றத்தைப் பற்றி தகவல் தெரிவிக்கவும், மற்றும்/அல்லது பழைய விலாசத்திலிருந்து தங்களது பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி சந்தாதாரர்களிடம் சொல்லுங்கள்.

(16) “பட்டுவாடா செய்யப்பட முடியாத சந்தாவை விசாரித்தல்” தாள்களை, சந்தாவைப் பெற்றுக் கொண்டவரிடம் கொடுக்க வேண்டும்; இவ்வாறு செய்வது அவர் சந்தாதாரரை அணுகி காரியங்களை சரிப்படுத்துவதற்கு உதவும். இதுபோன்று சங்கத்தினிடமிருந்து தகவல் கேட்டு வருவனவற்றிற்கு உடனடியாக கவனம் செலுத்தவும்.

(17) உங்கள் தபாலை சரியான நேரத்திற்கு பட்டுவாடா செய்ய தவறினாலும் தபால் துறை அதிகாரிகளிடம் தயவாகவும் அவர்களோடு ஒத்துழைப்பவர்களாகவும் இருங்கள். இது அவர்களை நல்ல மனநிலையுடன் இருக்க வைத்து, அவர்களுக்கு ஏதேனும் தப்பெண்ணம் இருந்தால் அதையும் நீக்கிவிடும்.

இந்தத் தகவல்களை கவனமாக பின்பற்றினீர்கள் என்றால், சந்தாக்களைக் கையாளுவதில் உட்பட்ட காலதாமதப்படுத்தும் பெரும்பாலான பிரச்சினைகள் நீங்கிவிடும் என்பதில் நாங்கள் உறுதியாய் இருக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்