உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/97 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 9/97 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும். உருது, பஞ்சாபி (இவற்றில் மாதாந்தர பதிப்பு) ஆகியவற்றைத் தவிர காவற்கோபுரம், இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை வருகிறது என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள். தமிழிலும் மலையாளத்திலும் விழித்தெழு! மாதம் இருமுறையும், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, நேப்பாளி, தெலுங்கு ஆகியவற்றில் மாதாந்தர பதிப்பாகவும் வெளிவருகிறது. உருது, பஞ்சாபி, ஆகியவற்றுக்கான விழித்தெழு! காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கின்றன; இந்த இரண்டு மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாவுக்கான ஏற்பாடு இல்லை. இந்த மாதத்தின் பிற்பகுதி முதற்கொண்டு, ராஜ்ய செய்தி எண் 35 விநியோகிக்கப்படும். நவம்பர்: ராஜ்ய செய்தி எண் 35-ஐ விநியோகிப்பது தொடரும். ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடியிருப்பிலும் உள்ள வீட்டுக்காரரை ராஜ்ய செய்தி எண் 35-ஐக் கொண்டு சென்றெட்டுவதன் மூலம் பிராந்தியத்தை முடித்திருக்கும் சபைகள் அறிவு புத்தகத்தை ரூபாய் 20.00 நன்கொடைக்கு அளிக்கலாம். டிசம்பர்: பின்வரும் மூன்று புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், (சிறியது 25.00 ரூபாய்), என்னுடைய பைபிள் கதை புத்தகம், (சிறியது 30.00 ரூபாய்) அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர். மாற்றீடாக, ஜூலை நம் ராஜ்ய ஊழியத்தில் விசேஷ விலை புத்தகங்களாக பட்டியலிடப்பட்டிருக்கும் எந்தப் புத்தகமும் 2.50 ரூபாய்க்கு கொடுக்கப்படலாம். குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யலாம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

◼ திரும்ப நிலைநாட்டப்பட மனச்சாய்வுள்ள சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக்கொண்ட எந்தவொரு நபரின் சம்பந்தமாகவும், ஏப்ரல் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்கள் நினைப்பூட்டப்படுகின்றனர்.

◼ ஆகஸ்ட் மாதத்திற்கான ஊழிய அறிக்கையை எல்லா பிரஸ்தாபிகளும் ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம். ஆண்டு அறிக்கையை சரியான சமயத்தில் தயாரிக்க எங்களுக்கு உதவியாக இருப்பதற்கு, சபை செயலர்கள் சபை அறிக்கையை (S-1)) தயாரித்து, செப்டம்பர் 3, புதன்கிழமைக்கு முன்பாக எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

◼ பிரசுரங்களை அனுப்பும்படி தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கேட்டுக்கொள்கையில் சங்கம் அனுப்புவதில்லை. சபையானது பிரசுரங்களுக்கான மாதாந்தர ஆர்டரை சங்கத்திற்கு அனுப்புவதற்கு முன்பு, நடத்தும் கண்காணி, ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சொந்த பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் லிட்ரேச்சரை கவனிக்கிற சகோதரரிடம் தெரிவிக்கலாம். எந்தெந்த பிரசுரங்கள் விசேஷ-தருவிப்புக்குரியவை என்பதை தயவுசெய்து மனதிற்கொள்ளுங்கள்.

◼ பிரசுர ஆர்டர் செய்யும்போது, சங்கத்தின் CD-ROM-கள் பிரஸ்தாபிகள் உபயோகத்திற்கு மட்டுமே என்பதை சபைகள் நினைவில்கொள்ள வேண்டும்; ஏனென்றால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாத சில விஷயங்கள் அதில் இருக்கின்றன.

◼ ஊழியத்தில் எதிர்பாலாரோடு வேலைசெய்வதை குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி மே 1997 நம் ராஜ்ய ஊழியத்தின் “கேள்விப் பெட்டி” சிபாரிசு செய்தது. இந்த விஷயத்தில் நாமனைவரும் நல்ல பகுத்தறிவை உபயோகிப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. பிரயாணக் கண்காணிகளோ மற்ற சகோதரர்களோகூட ஊழியத்தில் சகோதரிகளுடன் வேலை செய்யமுடியாது என்பதை இது அர்த்தப்படுத்தாது. மாறாக, எதிர்பாலாரில் தனக்கு சொந்தமில்லாத அதே நபருடன் ஒரு சகோதரர் அடிக்கடி, தனியாக நேரம் செலவழிப்பது ஞானமற்றது என்ற கருத்தே சொல்லப்பட்டது.

◼ மே 22-ம் தேதி மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூரில் ஒரு கடுமையான பூகம்பம் ஏற்பட்டபோது அங்குள்ள சபையின் 19 பிரஸ்தாபிகளில் ஒருவரும் காயமடையவில்லை என்பதை அறிய நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். நடத்தும் கண்காணியின் வீட்டை அடுத்துள்ள அநேக ஃப்ளாட்கள்கொண்ட ஒரு கட்டடம் நொறுங்கியது. அவரது வீட்டிலோ, சுவற்றில் ஒரு விரிசல் ஏற்பட்டு மாடிப்படி உடைந்துபோனது; ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏறக்குறைய இரண்டாக பிளந்த ஒரு பெரிய சர்ச் உட்பட அநேக மத கட்டடங்கள் சேதமடைந்தன, ஆனால் சாட்சிகளின் கூடும் இடம் பாதிக்கப்படவில்லை. இதன் சம்பந்தமாக நீங்கள் எழுதி விசாரித்ததை நாங்கள் போற்றுகிறோம். ஏனென்றால் அவை, நீங்கள் முன்பின் பார்த்திராத நம்முடைய உலகளாவிய சகோதரத்துவத்தின் அங்கத்தினருக்கான உங்களுடைய சகோதர அன்பையும் அக்கறையையும் காண்பிக்கிறது.

◼ கோவாவிலுள்ள பனஜியில் நடக்கும் மாவட்ட மாநாடு நவம்பர் 21-23, 1997 என்ற தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

◼ இந்த வருடம் கேரளாவில் மூன்று மாநாடுகள் நடக்கும் ஆகையால், ஒவ்வொன்றிற்கும் நியமிக்கப்பட்ட வட்டாரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

கட்டப்பனா (டிச. 12-14): KE-5 வட்டாரத்திலுள்ள எல்லா சபைகளும் KE-7 வட்டாரத்திலுள்ள ஹை ரேஞ்சஸ்ஸில் இருக்கும் சபைகளும்.

எர்ணாகுளம் (டிச. 26-28): KE-3, KE-4, KE-6 மற்றும் KE-8 வட்டாரங்களிலுள்ள எல்லா சபைகளும் KE-7 வட்டாரத்திலுள்ள ஹை ரேஞ்சஸ்ஸில் இல்லாத சபைகளும்.

கோழிக்கோடு (ஜன. 2-4, 1998): KE-1 மற்றும் KE-2 வட்டாரங்களிலுள்ள எல்லா சபைகளும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறிய அளவு) —தெலுங்கு

◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

“உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” —தமிழ்

“மனிதன் வந்தது பரிணாமத்தினாலா, படைப்பினாலா?” —ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்