தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 21, 1998 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. 2 தீமோத்தேயு 1:6-ல் உள்ள, ‘வரம்’ என்ற பதம், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கிரியை மூலம் பல பாஷைகளில் பேசுவதற்காக தீமோத்தேயுவுக்கு கொடுக்கப்பட்ட திறமையைக் குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w85 5/1 பக். 16 பாரா 15-ஐக் காண்க.]
2. ஒரு முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர், கடவுளுடைய வார்த்தையின் அறிவை தான் எந்தளவுக்குப் பெற்றிருக்கிறாரோ, அதை பயன்படுத்துவதைப் பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறியத்தக்கதாய்’ தனது ‘ஞானேந்திரியங்களைப்’ பயிற்றுவிக்கிறார். (எபி. 5:14) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w85 6/15 பக். 9 பாரா 7-ஐக் காண்க.]
3. யெகோவா, ‘தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்,’ என்ற உண்மையானது, மனித குடும்பத்துடனான அவருடைய தொடர்புகளில், யெகோவா பாரபட்சமற்ற தன்மையை தொடர்ந்து நிரூபித்துள்ளார் என்பதைக் குறிக்கிறது. (மத். 5:45) [w-TL96 11/15 பக். 25 பாரா 7-ஐக் காண்க.]
4. விருத்தசேதனம் குறித்து தீர்மானம் எடுத்த சமயத்தில், ‘அப்போஸ்தலருக்கும் மூப்பர்களுக்கும்’ பேச்சாளராக இருந்த யாக்கோபும், பைபிள் எழுத்தாளராகிய யாக்கோபும் ஒரே நபரே. (அப். 15:6, 13; யாக். 1:1) [si பக். 248 பாரா. 2-3]
5. பேதுரு தனது முதலாம் நிருபத்தை எழுதும்போது பாபிலோனில் இருந்தாரென 1 பேதுரு 5:13 கூறுகிறபோதிலும், பாபிலோன் என்ற பெயர் ரோமை மறைமுகமாய் குறிப்பதாக நிருபணம் சுட்டிக்காட்டுகிறது. [si பக். 251 பாரா 4]
6. 1 யோவான் 2:18-ல் உள்ள, ‘அந்திக்கிறிஸ்து வருகிறான்’ என்ற கூற்று, ஒரு தனி நபரைச் சுட்டிக்காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; rs-TL பக். 32 பாரா 4-ஐக் காண்க.]
7. ஒருவரை வீட்டிலே ஏற்றுக் கொள்ளவோ அல்லது வாழ்த்துதல் சொல்லவோ கூடாது என்று 2 யோவான் 10-ல் சொல்லப்பட்டுள்ள கட்டளை, பொய்ப் போதகங்களை ஆதரித்து வளர்ப்பவர்களை மாத்திரமே குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w85 7/15 பக். 30 பாரா. 1-3-ஐக் காண்க.]
8. அப்போஸ்தலனாகிய யோவானால் கடைசியாக எழுதப்பட்டதினால், வெளிப்படுத்துதல் புத்தகம் சரியாகவே பைபிளில் கடைசிப் புத்தகமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. [si பக். 263 பாரா 1]
9. சர்வதேச சங்கத்திற்கும், அதன்பின் வந்த ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும், ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு எவ்விதம் முக்கிய ஆதரவளிப்பதாகவும் உயிரூட்டுவதாகவும் ஆனது என்பதை வெளிப்படுத்துதல் 13:11-15 துல்லியமாக விவரிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 12/15 பக். 19 பாரா 3-ஐக் காண்க.]
10. மது அருந்துவதை பைபிள் அனுமதிப்பதால், எவ்வளவு அருந்தலாம் என்பதை உள்ளூர் பழக்கங்களும் பாரம்பரியங்களும் நிர்ணயிக்க அனுமதிப்பது பொருத்தமான ஒன்றே. (சங். 104:15) [w-TL96 12/15 பக். 27 பாரா 5-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. கண்காணியானவன், ‘அடியாதவனாய்’ இருக்கவேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? (தீத். 1:7) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 9/1 பக். 27 பாரா 21-ஐக் காண்க.]
12. கொடுப்பதை ஏன் உண்மை வணக்கத்தின் பாகமாக யெகோவா ஆக்குகிறார் என்பதற்கு இரண்டு காரணங்கள் தரவும். [w-TL96 11/1 பக். 29 பாரா. 3-6; பக். 30 பாரா 3-ஐக் காண்க.]
13. “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை” என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? (எபி. 10:5) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 7/1 பக். 14 பாரா 3-ஐக் காண்க.]
14. கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘உலகத்தை ஜெயிக்க’ முடியும்? (1 யோ. 5:3, 4) [si பக். 258 பாரா 12]
15. ‘யெகோவாவின் நாளை மனதின் அருகாமையில் வைத்திருத்தல்’ என்ற பேதுருவின் கூற்று எதை உட்படுத்துகிறது? (2 பே. 3:12, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 9/1 பக். 19 பாரா 2-ஐக் காண்க.]
16. 1 யோவான் 2:2-ல் உள்ள என்ன முக்கிய வார்த்தைகள், இயேசுவின் பலிக்குரிய மரணத்திலிருந்து நன்மையடையும் இரண்டு தொகுதிகளை அடையாளங்காண உதவுகின்றன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 1/15 பக். 12 பாரா 11-ஐக் காண்க.]
17. வெளிப்படுத்துதல் 1:7-ற்கிசைய, இயேசுவைக் குத்தினவர்கள் அவர் ‘மேகங்களுடனே வருவதை’ எப்படிக் காண்பார்கள்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w93 5/1 பக். 22 பாரா 7-ஐக் காண்க.]
18. இஸ்ரவேலர் மத்தியில் பிரசங்கிப்பதற்கு இயேசு கிறிஸ்து மூன்றரை ஆண்டுகள் செலவழித்த போதிலும், அவரை மேசியாவாக பெரும்பாலானோர் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? [w-TL96 11/15 பக். 29 பாரா. 1, 6; பக். 30 பாரா 3-ஐக் காண்க.]
19. வெளிப்படுத்துதல் 13:1, 2-ல் (NW) உலக அரசாங்கம், “மூர்க்க மிருகமாக” வருணிக்கப்படுவது ஏன் பொருத்தமானது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 4/1 பக். 20 பாரா 17-ஐக் காண்க.]
20. வெளிப்படுத்துதல் 4:4-ல் உள்ள, “இருபத்துநான்கு மூப்பர்கள்” யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர், மேலும் அவர்களுடைய “பொன் முடி” மற்றும் ‘சிங்காசனங்கள்’ எதை நினைவுப்படுத்துகின்றன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 7/1 பக். 13 பாரா 17-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. தீமோத்தேயுவுக்குப் பவுல் எழுதிய இரண்டாம் கடிதம், அநேகமாக தீமோத்தேயு இன்னமும் _________________________-வில் இருந்தபொழுது, பொ.ச. _________________________-ம் ஆண்டில், _________________________-இருந்து எழுதப்பட்டது. [si பக். 237 பாரா 3]
22. நமக்கு முன்னால் நியமிக்கப்பட்டிருக்கும் பந்தயத்தில் ஓடுவதற்கு, பாரமான யாவற்றையும், _________________________ எனும் நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற _________________________ நாம் தள்ளிவிடுவது அவசியம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 1/1 பக். 10 பாரா 15-ஐக் காண்க.]
23. 2 பேதுரு 1:5-8-ல் (NW ), _________________________ அல்லது _________________________ இருப்பதைத் தவிர்க்க உதவும் தெய்வீக குணங்களை விருத்திசெய்வதற்கு, அப்போஸ்தலனாகிய பவுல் _________________________ சிபாரிசு செய்கிறார். [si பக். 255 பாரா 9]
24. வெளிப்படுத்துதல் 6:1-8-ல், சிவப்பு நிற குதிரையில் சவாரி செய்பவன் _________________________ குறிக்கிறான்; கருப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்தவன் _________________________ , _________________________ குறிக்கிறான்; மரணம் மங்கின நிற குதிரைமீது சவாரி செய்கிறது. அது, கொள்ளைநோயாலும் மற்ற காரணங்களாலும் உண்டாகும் _________________________ குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 1/15 பக். 3-ல் பெட்டியைக் காண்க.]
25. தெளிவாகவே, கிறிஸ்து பிறப்பதற்கு முன் _________________________-ல் கிரேக்கர்களின் _________________________ போதனையை யூதர்கள் ஒன்றிணைக்க துவக்கினார்கள். [w-TL96 8/1 பக். 6 பாரா. 2-3-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. ரோமில் பவுலுடைய முதல் சிறையிருப்பின்போது, அவருடைய பிரசங்கத்திற்கு செவிகொடுத்தவர்களில், (பிலிப்பு; பெஸ்து; பிலேமோன்) வீட்டாரை விட்டு ஓடிச்சென்ற அடிமை (ஒநேசிப்போருவும்; ஒநேசிமுவும்; ஓனனும்) இருந்தார். [si பக். 241 பாரா 2]
27. பவுல் (ஸ்பெய்னில்; கிரேத்தாவில்; இத்தாலியில்) இருந்ததும், (தீமோத்தேயுவின்; தீத்துவின்; யாக்கோபுவின்) கூட்டுறவில் இருந்தது போன்ற (பைபிள்சாராத; பைபிள்சார்ந்த; சரித்திரப்பூர்வமான) சான்றுகள், எபிரெயருக்கான கடிதத்தை பவுலே எழுதினார் என்பதை ஆதரிக்கின்றன. [si பக். 243 பாரா 3]
28. எபிரெயர் 11:10-ல் உள்ள, மெய்யான ‘அஸ்திபாரங்களுள்ள நகரம்’ (திரும்பக்கட்டப்பட்ட எருசலேமை; எசேக்கியேல் 48:35-ல் சொல்லப்பட்டுள்ள நகரத்தை; மேசியானிய ராஜ்யத்தை) குறிக்கிறது. [si பக். 247 பாரா 26]
29. யூதா-8-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘கர்த்தத்துவம்’ (இயேசுவின் ஸ்தானத்தை; யெகோவாவின் சர்வலோக அரசுரிமையை; கிறிஸ்தவ சபையில் கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை) சுட்டிக்காட்டுகிறது. [si பக். 263 பாரா 9]
30. வெளிப்படுத்துதல் 11:11-ல், அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் தங்களுடைய எதிரிகளின் கண்களில் செத்தப் பிரேதங்களாகத் தோன்றிய ‘மூன்றரை நாட்கள்,’ (மூன்றரை வருடங்களை; குறுகிய காலப் பகுதியை; மூன்றரை மாதங்களை) குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; re-TL பக். 167 பாரா 21-ஐக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
1 கொ. 6:9-11; எபி. 2:1; எபி. 10:32; யாக். 4:15; 1 பே. 3:4
31. இந்த உலகத்திலிருந்து வரும் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் செல்வாக்கை எதிர்ப்பதற்கு, நல்ல படிப்புப் பழக்கங்களின் மூலமும், நல்ல பைபிள் வாசிப்பு அட்டவணையின் மூலமும் கடவுளுடைய வார்த்தையை நாம் “மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.” [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 1/1 பக். 7 பாரா 9-ஐக் காண்க.]
32. எதிர்காலத்திற்கான திட்டங்களை நாம் போடும்போதெல்லாம், கடவுளுடைய நோக்கங்களோடு அவை எவ்விதம் பொருந்துகின்றன என்பதை நாம் ஜெபசிந்தையோடு ஆழ்ந்து யோசிக்கவேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 11/15 பக். 21 பாரா. 10-11-ஐக் காண்க]
33. ஒரு கிறிஸ்தவ மனைவியின் மற்றும் தாயின் “சாந்தமும் அமைதலுமுள்ள மனப்பான்மை” அவளுடைய கணவனை மாத்திரமல்ல, மிக முக்கியமாக தேவனைப் பிரியப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 5/15 பக். 19 பாரா 12-ஐக் காண்க.]
34. ஆவிக்குரிய போரில் உத்தமத்தன்மையின் கடந்தகாலச் செயல்களை நம்முடைய மனதுக்குக் கொண்டுவருவது, ஜீவனுக்கான நமது ஓட்டத்தை ஓடி முடிப்பதற்குத் தேவையான தைரியத்தை நமக்குக் கொடுக்கிறது. [w-TL96 12/1 பக். 29 பாரா 3-ஐக் காண்க.]
35. மனந்திரும்பாத குடிகாரர்களாகிற எவரையும் கிறிஸ்தவ சபையில் நீடித்திருக்க யெகோவாவின் சாட்சிகள் அனுமதிப்பதில்லை. [w-TL96 12/15 பக். 25 பாரா 3-ஐக் காண்க.]