உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/99 பக். 5-6
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 12/99 பக். 5-6

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

செப்டம்பர் 6 முதல் டிசம்பர் 20, 1999, வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதி​களின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.

[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]

பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:

1. யெகோவாவின் ஆட்சி முறையே எப்போதும் சரியானது, நியாயமானது என்பதை நிரூபிக்க மனிதன் தன்னையே ஆண்டுகொள்ள கடவுள் அனுமதித்திருக்கிறார். (உபா. 32:4; யோபு 34:10-12; எரே. 10:23) [w-TL97 2/15 பக். 5 பாரா 3]

2. எல்லா வகையான குறைகூறுதல்களையும் யெகோவா கண்டனம் செய்கிறார் என பைபிள் குறிப்பிடுகிறது. [w-TL97 12/1 பக். 30 பாரா. 3-4]

3. தலைமைவகிப்பு, நல்ல ஒழுங்கு ஆகிய தெய்வீக நியமங்களை உணர்ந்து, திருமணமான தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர் தங்களுடைய உறவை சரியான விதத்தில் வைத்துக்கொள்கிறார்கள். (ஆதி. 2:24; 1 கொ. 11:3; 14:33, 40) [fy-TL பக். 164 பாரா 6]

4. அந்த ஜனக் கூட்டத்தார் வியாதியாகவும் ஏழ்மையாகவும் இருந்ததால்தான் இயேசு மனதுருகினார் என மாற்கு 6:31-34 காட்டுகிறது. [w-TL97 12/15 பக். 29 பாரா 1]

5. வேறே ஆடுகளின் பாகமான ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் மரண ஞாபகார்த்தத்தில் கலந்துகொள்ள முடியவில்லையென்றால், எண்ணாகமம் 9:10, 11-⁠ல் குறிப்பிட்டிருக்கிற நியமத்திற்கு இணங்க ஒரு மாதத்திற்குப்பின் அதை அனுசரிக்க வேண்டும். (யோவா. 10:16) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL93 5/1 பக். 31 பாரா 9-ஐ காண்க.]

6. பிள்ளைகளுடைய மனதில் பைபிள் சத்தியங்களை பதியவைக்கும் பொறுப்பை தாத்தா பாட்டிமார் எடுத்துக்கொள்ளாதபோதிலும், பிள்ளையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவர்களும் உதவலாம். (உபா. 6:7; 2 தீ. 1:5; 3:14, 15) [fy-TL பக். 168 பாரா 15]

7. சில சூழ்நிலைமைகளில் திருடுவதை மன்னித்துவிடலாம் அல்லது நியாயம்தான் என நீதிமொழிகள் 6:30 காட்டுகிறது. [g-TL97 11/8 பக். 19 பாரா 2]

8. 1530-⁠ல், வில்லியம் டின்டேலே முதன்முதல் யெகோவா என்னும் பெயரை எபிரெய வேதாகமத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியவர். [w-TL97 9/15 பக். 28 பாரா 3]

9. இன்றைய அடைக்கலப் பட்டணமானது இரத்தத்தின் பரிசுத்தத்தன்மையைக் குறித்த கடவுளுடைய கட்டளையை மீறுவதால் மரணமடைவதிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான கடவுளுடைய ஏற்பாடாகும். (எண். 35:11) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL95 11/15 பக். 17 பாரா 8-ஐ காண்க.]

10. “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்று அந்தப் பொல்லாத பரிசேயர்களிடம் சொன்ன இயேசுவின் வார்த்தைகள், மாய்மாலமான மனிதரின் பொல்லாத இருதயங்களில் அந்த ராஜ்யம் இருந்ததாக அர்த்தப்படுத்தின. (லூக். 17:21) [kl-TL பக். 91 பாரா 6]

பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:

11. பெந்தெகொஸ்தே பண்டிகையன்று பிரதான ஆசாரியன் செலுத்தும் புளிப்புள்ள இரண்டு அப்பங்கள் எதை படமாக சித்தரிக்கின்றன? (லேவி. 23:15-17) [வாராந்திர பைபிள் வாசிப்பு w-TL98 3/1 பக். 13 பாரா 21]

12. கிறிஸ்தவ யூபிலி எப்போது ஆரம்பமானது, மேலும் அந்த சமயத்தில் என்ன வகையான விடுதலையை அது கொண்டுவந்தது? (லேவி. 25:10) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL95 5/15 பக். 24 பாரா 14-ஐக் காண்க.]

13. துன்மார்க்கத்தையும் துயரங்களையும் யெகோவா அனுமதித்திருப்பது எந்த மூன்று காரியங்களை நிரூபித்திருக்கிறது? [kl-TL பக். 77, 78 பாரா. 18-20]

14. பொறாமை குணத்தை வெளிப்படுத்தவில்லை என்பதற்கு எவ்விதத்தில் மோசே ஒரு சிறந்த மாதிரியாக இருந்தார்? (எண். 11:29) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL95 9/15 பக். 18 பாரா 11-ஐக் காண்க.]

15. காண்பதெல்லாம் நம்பிக்கைக்கு வழிநடத்தாது என்பதை கோராகு, தாத்தான் மற்றும் அபிராமின் உதாரணம் எவ்வாறு காட்டுகிறது? [w-TL97 3/15 பக். 4 பாரா 2]

16. மத்தேயு 15:3-6 மற்றும் 1 தீமோத்தேயு 5:4-⁠ல் வயதான பெற்றோரை கனம்பண்ணுவதற்கான என்ன இரண்டு அம்சங்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன? [fy-TL பக். 173-5 பாரா. 2-5]

17. எண்ணாகமம் 26:64, 65-⁠ல் என்ன முக்கியமான பாடம் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது? [வாராந்திர பைபிள் வாசிப்பு; g-TL95 8/8 பக். 10-11 பாரா. 5-8-ஐ காண்க.]

18. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை உணர்ந்துகொள்ள பினெகாஸின் மாதிரி நமக்கு எவ்வாறு உதவுகிறது? (எண். 25:11) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL95 3/1 பக். 16 பாரா. 12-13-ஐ காண்க.]

19. ஒருவர் எவ்வாறு மாதிரிப்படிவ அடைக்கலப் பட்டணத்தின் ‘எல்லையை விட்டு வெளியேற’ முடியும்? (எண். 35:26) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL95 11/15 பக். 20 பாரா 20-ஐ காண்க.]

20. கோடெக்ஸ் சினியாட்டிகஸ் எவ்வழியில் பைபிளின் மொழிபெயர்ப்புக்கு பேருதவியாக இருந்தது? [w-TL97 10/15 பக். 11 பாரா 2]

பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:

21. யெகோவா மாத்திரமே _________________________, அவருடைய எல்லா படைப்புகளும் தொடர்ந்து சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதற்கு அவருடைய சட்டங்களுக்கு _________________________ இன்றியமையாதது என்ற அடிப்படை உண்மையை என்றென்றைக்குமாக நிலைநாட்டுவதற்கே தீமையை கடவுள் அனுமதித்திருக்கிறார். (சங். 1:1-3; நீதி. 3:5, 6; பிர. 8:9) [w-TL97 2/15 பக். 5 பாரா 4]

22. யெகோவா _________________________ கடவுள் என்பதாக _________________________ நமக்கு கற்பிக்கிறது. [kl-TL பக். 66 பாரா 14]

23. சங்கீதம் 144:15ஆ-⁠வின்படி, உண்மையான மகிழ்ச்சி என்பது உண்மையான _________________________ யெகோவா தேவனோடு நல்ல ஒரு _________________________ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் இருதய நிலையாகும். [w-TL97 3/15 பக். 23 பாரா 7]

24. எபிரெய பைபிளிலிருந்து பொதுவாக பேசப்பட்டுவந்த கிரேக்க மொழிக்கு பொ.ச.மு. 150-⁠ல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பைபிளே _________________________ என அழைக்கப்படலாயிற்று; சுமார் பொ.ச. 400-⁠ல் மொழிபெயர்த்து முடிக்கப்பட்ட ஜெரோமின் லத்தீன் பைபிள் _________________________ என அழைக்கப்படலாயிற்று. [w-TL97 8/15 பக். 9 பாரா 1, பக். 10 பாரா 4]

25. கடவுளுடைய ஞாபகத்திலிருக்கும் அனைவருக்கும் _________________________-லிருந்து விடுவிக்கப்படும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது _________________________.[kl-TL பக். 88 பாரா 18]

பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:

26. ஆண்டுக்கு ஒருமுறை (கூடார பண்டிகையில்; பாவநிவாரண நாளில்; பஸ்காவில்) இஸ்ரவேலின் முழு ஜனமும் யெகோவாவை வணங்கிய அந்நியரும் (எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்து; பத்தில் ஒரு பங்கு கொடுத்து; முதற்பலன்களை செலுத்தி) உபவாசிக்க வேண்டும். (லேவி. 16:29-31) [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL96 7/1 பக். 10 பாரா 12-ஐக் காண்க.]

27. மூல மொழிகளிலுள்ள கருத்தை அப்படியே வாசகர் கண்டுகொள்வதற்காக புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவின் இலக்குகளில் ஒன்று மொழிபெயர்ப்பு (திருத்தமானதாக; மூல மொழியின் பொழிப்புரையாக; குறிப்பிட்ட கொள்கை சம்பந்தப்பட்ட புரிந்துகொள்ளுதலுக்கு இசைவாக) இருக்க வேண்டும் என்பதாகும். [w-TL97 10/15 பக். 11 பாரா 5]

28. எபிரெயர் 13:19-⁠ன்படி உடன் விசுவாசிகளின் இடைவிடாத ஜெபங்கள் (கடவுள் எதை அனுமதிக்கிறார்; கடவுள் எப்போது செயல்படுவார்; காரியங்களை எவ்விதமாகக் கையாளுவார்) என்ற விஷயத்தின்பேரில் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். [w-TL97 4/15 பக். 6 பாரா 1]

29. (புனித அலங்காரமாக; அடக்கத்தின் அடையாளமாக; யெகோவாவின் ஜனமாக உலகத்திலிருந்து பிரிந்திருப்பதற்கு காணக்கூடிய நினைப்பூட்டுதலாக) இஸ்ரவேலர் “வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும்.” (எண். 15:38, 39) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w83 10/15 பக். 20 பாரா 16-ஐக் காண்க.]

30. கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அஸ்திவாரம் (இயேசுவின் அப்போஸ்தலர் தெரிந்தெடுக்கப்பட்டபோது; கிறிஸ்துவின் கிரயபலியின்போது; கிறிஸ்து பரலோகத்துக்குச் சென்றபோது) போடப்பட்டது. [kl-TL பக். 93 பாரா 10]

பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:

எண். 16:41, 49; மத். 19:9; லூக். 2:36-38; கொலோ. 2:8; 3:14

31. துறவறம் விசேஷித்த பரிசுத்தத்திற்கோ அல்லது மெய்ஞானத்திற்கோ வழிநடத்தாது. [g-TL97 10/8 பக். 21 பாரா 3]

32. வேசித்தனம் மட்டுமே மணவிலக்கு செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்வதற்கான ஒரே வேதப்பூர்வமான அடிப்படை. [fy-TL பக். 159 பாரா 15]

33. வயதான காலங்களிலும்கூட தேவராஜ்ய நடவடிக்கைகளில் அதிக சுறுசுறுப்பாக ஈடுபடுவது விவாக துணையின் இழப்பை சமாளிக்க ஒருவருக்கு உதவும். [fy-TL பக். 170-1 பாரா 21]

34. நியமிக்கப்பட்ட ஊழியர்களைக்கொண்டு நியாயம் வழங்கும் யெகோவாவுடைய வழியில் குற்றம் கண்டுபிடிப்பது அழிவில் விளைவடையும். [வாராந்திர பைபிள் வாசிப்பு; w-TL96 6/15 பக். 21 பாரா 13-ஐ காண்க.]

35. தன்னலமற்ற அன்பு தம்பதியினரை ஒன்று சேர்த்து இணைக்கிறது, தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்ததைச் செய்வதற்கு விரும்பும்படி அவர்களை செய்விக்கிறது. [fy-TL பக். 187 பாரா 11]

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்