அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்கையில் ஆர்வம் தென்பட்டால் பத்திரிகை மார்க்க பட்டியலில் அந்நபரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்தில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதாவதொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ ஜூன் 1 அல்லது அதன் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். இது முடிந்ததும், அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் இதை சபைக்கு அறிவியுங்கள்.
◼ கிளை அலுவலகம் மாற்றலாகும் சமயத்தில் பிரசுரம், பத்திரிகை ஆகியவற்றிற்கு ஆர்டர் செய்வது சம்பந்தமாக மார்ச் 2002, நம் ராஜ்ய ஊழியத்தில் குறிப்பிட்டிருந்த அறிவிப்பில் செய்யப்பட்டுள்ள பின்வரும் மாற்றத்தை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். மே 2002-ல் கிளை அலுவலகத்தை லோனாவ்லாவிலிருந்து பெங்களூருக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதால் அந்த மாதத்திலும் அதற்குப் பிறகு கொஞ்ச நாட்களுக்கும் பிரசுரத்திற்கும் பத்திரிகைகளுக்குமான ஆர்டர்களை சொஸைட்டியால் அனுப்பி வைக்க முடியாது. அநேக சபைகளில் போதுமானளவு பிரசுரங்களும் பழைய பத்திரிகைகளும் கையிருப்பில் இருப்பதாக தெரிகிறது. எனவே இந்தக் காலகட்டத்தில் கையிருப்பிலிருக்கும் அத்தகைய பிரசுரங்களை விநியோகித்து முடிப்பதற்கு விசேஷ அளிப்பு திட்டங்களை ஏற்பாடு செய்யும்படி மூப்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
◼ முன்பு அறிவிக்கப்பட்ட விதமாகவே தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புதிய புத்தகம் 2002-ம் வருட கடைசியில் ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கும். இந்தப் புத்தகத்திற்காக இதுவரை ஆர்டர் செய்யாத சபைகள் ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் ஆர்டர் ஃபார் ஐட்டம்ஸ் அண்டு மினிஸ்ட்ரி ஸ்கூல் புக் என்ற படிவத்தை பயன்படுத்தி உடனடியாக ஆர்டர் செய்ய வேண்டும். இந்தப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் வரை சபை பேக்கிங் லிஸ்டில் இவை “பென்டிங்” என குறிப்பிடப்பட்டிருக்கும்.