உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/03 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 2/03 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! அல்லது பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) போன்றவற்றை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். ஆர்வம் காட்டியவர்களை, அதாவது நினைவு ஆசரிப்பிற்கும் மற்ற கூட்டங்களுக்கும் வந்தவர்களும் அதேசமயம் தொடர்ந்து கூட்டங்களுக்கு வராதவர்களையும் மறுசந்திப்பு செய்யும் போது, ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளியுங்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ ஏற்கெனவே படித்திருந்தால், அவர்களிடம் இந்த புத்தகத்தில் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு விசேஷ முயற்சி எடுங்கள். மே: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். அதற்குப் பதிலாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம், பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்), இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகியவற்றை அளிக்கலாம். இந்தப் புத்தகங்கள் எதுவுமே உங்கள் சபையில் இல்லையென்றால், பக்கத்து சபைகளில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தயவுசெய்து கேளுங்கள்; இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பின்பு, அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கையில் இதையும் சபைக்கு அறிவிக்க வேண்டும். சங்கத்தின் உலகளாவிய வேலைக்காகவும் மற்ற நிதிகளுக்காகவும் சபை அனுப்பியிருக்கும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டதற்காக சங்கம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள்.

◼ அனைத்து ஒழுங்கான பயனியர்களின் ஊழிய நடவடிக்கையை செயலரும் ஊழியக் கண்காணியும் பரிசீலிக்க வேண்டும். தேவையான மணிநேரத்தை எட்டுவதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அதற்குரிய உதவியை அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்கு சொஸைட்டியின் வருடாந்தர S-201-TL கடிதங்களை மறுபார்வை செய்யவும். 1986 அக்டோபர், ஆங்கில நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பாராக்கள் 12-20-ஐயும் காண்க.

◼ 2003-வது ஆண்டு நினைவு ஆசரிப்பு காலத்திற்குரிய விசேஷ பொதுப் பேச்சு ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27 அன்று கொடுக்கப்படும். பொதுப் பேச்சின் தலைப்பு “பாபிலோனுக்கு நியாயத்தீர்ப்பு வேளை வந்துவிட்டதா?” அதற்கான குறிப்புத்தாள் அனுப்பப்படும். அந்த வார இறுதியில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு அல்லது அசெம்பிளி இருந்தால், அந்த சபைகளில் இந்தப் பேச்சு அதற்கு அடுத்த வாரயிறுதியில் கொடுக்கப்படும். 2003, ஏப்ரல் 27-⁠க்கு முன்பாக எந்தச் சபையிலும் விசேஷ பேச்சை கொடுக்கக்கூடாது.

◼ தனிப்பட்ட நபர்களுக்கு சந்தாக்கள் தபாலில் இப்பொழுது அனுப்பப்படாததால் சபையானது காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் புதிய இதழ்கள் கையில் கிடைத்த உடனே அவற்றை கொடுத்துவிடுவது முக்கியம். இது, தங்களுக்கென்று ஒரு பிரதியை பெற்றுக்கொள்ளவும், ஊழியத்தில் கொடுப்பதற்கு முன்பு அந்த பத்திரிகைகளில் உள்ள விஷயங்களை தெரிந்துகொள்ளவும் பிரஸ்தாபிகளுக்கு உதவியாக இருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்