உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/04 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 7/04 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: திருப்தியான வாழ்க்கைக்கு வழி. இந்த சிற்றேடு உங்கள் மொழியில் இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள்.

◼ “விசுவாசத்தோடும் தைரியத்தோடும் எதிர்காலத்தை சந்தித்தல்” என்ற தலைப்பில் செப்டம்பர் முதல் வட்டார கண்காணிகள் பொதுப் பேச்சு கொடுப்பார்கள்.

◼ நியமிக்கப்படாத பிராந்தியங்களில் ஊழியம் செய்யும்போது, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது அறிவு புத்தகத்தை பிரஸ்தாபிகள் அளிக்கலாம். வீட்டுக்காரரிடம் இவ்விரு பிரசுரங்களும் ஏற்கெனவே இருந்தால், வேறு ஏதாவதொரு பிரசுரத்தை நாம் அளிக்கலாம். நம்முடைய பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளாத நபர்களுக்கு கொடுப்பதற்காக அல்லது பூட்டப்பட்டிருந்த வீடுகளில் விட்டுவிட்டு வருவதற்காக வித்தியாசப்பட்ட துண்டுப்பிரதிகளை நாம் எல்லாருமே வைத்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்களை, குறிப்பாக சபைகளுக்கு அருகே உள்ள நியமிக்கப்படாத பிராந்தியங்களில் இருக்கும் ஆர்வமுள்ளவர்களை திரும்ப சென்று பார்ப்பதற்கு முயற்சியெடுக்க வேண்டும்.

◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205-TL), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL) ஆகிய படிவங்கள் போதுமானளவு கைவசம் இருக்கும்படி சபை செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்யலாம். அவற்றை முடிந்த மட்டும் ஒரு வருடத்திற்குத் தேவைப்படும் அளவு வைத்திருங்கள்.

◼ ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்களை கிளை அலுவலகத்திற்கு அனுப்பும் முன், அவற்றை சபை செயலர் பரிசீலித்து எல்லாம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிப்பவருக்கு முழுக்காட்டுதல் பெற்ற தேதி சரியாக ஞாபகமில்லாதிருந்தால் அவர்கள் உத்தேசமாக ஒரு தேதியை எழுதி, பின்பு அதை அவர்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். செயலரும் இந்தத் தேதியை சபை பிரஸ்தாபி அட்டையில் குறித்துக்கொள்ள வேண்டும்.

◼ வேறு நாட்டில் நடைபெறும் சபை கூட்டங்களில், வட்டார மாநாட்டில், அல்லது மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள தனிப்பட்ட விதமாக திட்டமிடுகையில், அது சம்பந்தப்பட்ட தேதிகள், நேரங்கள், இடங்கள் போன்ற தகவல்களை அறிய அந்த நாட்டில் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகத்துக்கு எழுத வேண்டும். கிளை அலுவலகங்களின் விலாசங்கள் சமீபத்திய இயர்புக்கின் கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

◼ அனைத்து நடத்தும் கண்காணிகள், செயலர்கள் ஆகியோரின் சரியான விலாசங்களையும், தொலைபேசி எண்களையும் கிளை அலுவலகம் கைவசம் வைத்திருப்பது அவசியம். ஆகவே இவற்றில் எந்த சமயம் மாற்றம் செய்யப்பட்டாலும், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்றம் (S-29) என்ற படிவத்தை சபை ஊழியக் குழு முழுமையாக பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு உடனடியாக கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். டெலிபோன்கோடு மாற்றத்துக்கும் இது பொருந்தும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19) ​—⁠ஒரியா, சிந்தி

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) ​—⁠சிந்தி

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) ​—⁠சிந்தி

இயேசு கிறிஸ்து​—⁠அவர் யார்? (துண்டுப்பிரதி எண் 24) ​—⁠கொங்கனி (கன்னடம்), உருது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்