அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: திருப்தியான வாழ்க்கை சிற்றேடு. இது உங்கள் மொழியில் இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை சிறப்பித்துக் காட்டுங்கள். அக்கறை காட்டுவோரிடம் தயவுசெய்து தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அறிமுகப்படுத்துங்கள்; பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் மறுசந்திப்புகள் செய்யுங்கள். நவம்பர்: திருப்தியான வாழ்க்கை சிற்றேடு. இது உங்கள் மொழியில் இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இது கைவசம் இல்லாவிட்டால் என்னுடைய பைபிள் கதை புத்தகம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகிய புத்தகங்கள் உட்பட வேறு எந்தப் புத்தகத்தையாவது அளியுங்கள்.
◼ டிசம்பர் மாதத்தில் ஊழியக் கூட்டப் பகுதியில் இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது வீடியோவைப் பற்றி சிந்திப்போம். இது விசிடியில் இரத்தமில்லா மாற்று சிகிச்சை—டாக்குமென்ட்டரி தொடர் என்பதுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்று விசிடி-க்கள் அடங்கிய இந்த தொகுப்பில் பின்வரும் வீடியோக்கள் உள்ளன: இரத்தமேற்றுதல்-மாற்று உபாயங்கள்—எளியவை, பாதுகாப்பானவை, பயனளிப்பவை; உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல்; இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது. இந்த விசிடி தொகுப்பு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தேவைப்பட்டால், இந்த விசிடி-க்களின் நகல்களைப் பெற சீக்கிரத்தில் சபை மூலமாக ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ 2005-ம் ஆண்டின் நினைவு ஆசரிப்புக் காலத்தில் விசேஷப் பேச்சு, ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 10-ம் தேதி கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். சபைகளில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தாலோ, அந்த வாரக் கடைசியில் மாநாடு ஏதாவது இருந்தாலோ, அதற்கு மறுவாரத்தில் விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 10, 2005 தேதிக்கு முன்பு எந்தச் சபையிலும் விசேஷப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.
◼ ஒழுங்கான பயனியர் நியமன கடிதத்தின் பின்பக்கத்தில் “நிறுத்தி விடுதல்,” “சபை மாற்றம்,” “பெயர் மாற்றம்” ஆகிய தலைப்புகளின் கீழே அந்தந்தச் சூழ்நிலை ஏற்படுகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டவட்டமான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சூழ்நிலைகளை செயலர் கையாளும் போதெல்லாம் இந்த அறிவுரைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்களை போய் சந்திப்பது சம்பந்தமாக பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 20-1 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
◼ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் புதிய இதழ்களை சபை பெற்றவுடன் தாமதிக்காமல் அவற்றை கொடுத்துவிட வேண்டும். ஊழியத்தில் கொடுப்பதற்கு முன்பு அந்த பத்திரிகைகளில் உள்ள விஷயங்களை தெரிந்துகொள்ள பிரஸ்தாபிகளுக்கு இது உதவியாக இருக்கும்.
◼ அக்டோபரில் ஐந்து சனி-ஞாயிறு தினங்கள் வருவதால், அது துணைப் பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த மாதமாகும்.
◼ புதிய ஊழிய ஆண்டில் உபயோகிப்பதற்காக வருடாந்தர ஊழிய படிவங்கள் எல்லா சபைகளுக்கும் போதியளவு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட படிவங்கள் அடுத்த ஊழிய ஆண்டு முழுவதற்கும் போதுமானவையாக இருக்குமா என்பதை செயலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவற்றில் ஏதாவது கூடுதலாக தேவைப்பட்டால் தயவுசெய்து உடனடியாக செப்டம்பர் மாத லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட்டுடன் சேர்த்து ஆர்டர் செய்யுங்கள்.
◼ தற்போது பிரசுர மற்றும் பத்திரிகை ஆர்டர்களை கிளை அலுவலகம் வெகு சீக்கிரத்தில் அனுப்பி வைக்க முடியுமாதலால், இனிமேல் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திற்குள்ளேயே லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் படிவத்தையும் (S-14), காங்கிரிகேஷன் ரிக்வெஸ்ட்ஸ்-ஐயும் (M-202) நீங்கள் அனுப்பலாம். பிரசுரங்கள், பத்திரிகைகள் சம்பந்தமான உங்கள் வேலையை இது எளிதாக்கும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரம்:
பேச்சுத் திறமையையும் போதிக்கும் திறமையையும் மேம்படுத்த வழி —நேப்பாளி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் —அஸ்ஸாமீஸ், குஜராத்தி, பஞ்சாபி
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி —வங்காளி
நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் —மலையாளம்