உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/05 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2005
நம் ராஜ்ய ஊழியம்—2005
km 1/05 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: பழுப்பேறியோ, நிறம் மாறியோ உள்ள ஏதாவதொரு 192 பக்க புத்தகம், அல்லது 1990-ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ஏதாவதொரு புத்தகத்தை அளிக்கலாம். இது போன்ற பழைய புத்தகங்கள் எதுவும் இல்லாத சபைகள் கடவுளைத் தேடி அல்லது குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிப்போம். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக படைப்பு அல்லது வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அளியுங்கள்; அந்தப் புத்தகத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபைக்கு தொடர்ந்து வராமல், நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கோ வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சந்திப்போரிடம், முக்கியமாக அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருப்பவர்களிடம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே குறிக்கோளாய் இருக்க வேண்டும்.

◼ வட்டாரக் கண்காணிகளின் புதிய பொதுப் பேச்சு பிப்ரவரியிலிருந்து மார்ச் 6-⁠ம் தேதிக்குள் துவங்கும்; அதன் தலைப்பு: “ஞானமற்ற உலகில் ஞானமாய் நடவுங்கள்.”

◼ இந்த வருடம் மார்ச் 24, வியாழக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பேச்சை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களைச் சுற்றி அனுப்புவதைச் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதைத் தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். அந்தந்தச் சபை தனித்தனியாக நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கதே. என்றாலும் எப்பொழுதும் அவ்வாறு நடத்த முடியாதிருக்கலாம். ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில், வேறொரு இடம் பார்த்து அதில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கலாம். அந்த நிகழ்ச்சியிலிருந்து எல்லாரும் முழு பயனடைய, அடுத்த சபை தன் ஆசரிப்பை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் குறைந்தபட்சம் 40 நிமிட இடைவெளி விடுவது நல்லது. கூட்டத்திற்கு வருகிறவர்களை இறக்கிவிடுவது ஏற்றிச்செல்வது உட்பட, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் நிறுத்தும் போதும் நெரிசலை ஏற்படுத்திவிடாதபடியும் கவனமாயிருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தவை என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.

◼ மார்ச் மாத நம் ராஜ்ய ஊழிய இதழில், தாவீது​—⁠கடவுளில் நம்பிக்கை வைத்தார் என்ற வீடியோ கலந்தாலோசிப்புப் பகுதி இருக்கும். நோவா கடவுளுடன் நடந்தார்​—⁠தாவீது கடவுளில் நம்பிக்கை வைத்தார் என்ற தலைப்பை உடைய டிவிடியில் மட்டுமே இந்த வீடியோ உள்ளது. இந்த டிஸ்க்கில் பதிவாகியுள்ள பின்வரும் எட்டு மொழிகளிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த மொழிகள்: ஆங்கிலம், இத்தாலியன், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ் (பிரேஸிலியன்), ரஷ்யன், ஜாப்பனீஸ், ஜெர்மன், ஸ்பானிஷ். தற்சமயம் இந்த டிவிடி இந்திய மொழிகளில் இல்லை. அடுத்த முறை பிரசுர ஆர்டரை அனுப்புகையில் இந்த டிவிடி நகல்களைப் பெற சபை மூலமாக ஆர்டர் செய்யலாம்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் ​—⁠குஜராத்தி

இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் ​—⁠குஜராத்தி

யெகோவாவின் சாட்சிகள்​—⁠ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் ​—⁠பஞ்சாபி

விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை ​—⁠குஜராத்தி

பாதுகாப்பான ஓர் எதிர்காலம்​—⁠இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம் ​—⁠குஜராத்தி

◼ கிடைக்கும் புதிய விசிடி-⁠க்கள்:

நம் சகோதர கூட்டுறவு ​—⁠ஆங்கிலம்

சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்​—⁠சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் ​—⁠ஆங்கிலம்

பைபிள்​—⁠மனிதகுலத்தின் மிகப் பழமையான நவீனகால புத்தகம் ​—⁠ஆங்கிலம்

பைபிள்​—⁠உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி ​—⁠ஆங்கிலம்

நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள் ​—⁠ஆங்கிலம்

யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள் ​—⁠ஆங்கிலம்

நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கின்றனர் ​—⁠ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்