அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டில் சிறுபிள்ளைகள் யாரும் இல்லையென வீட்டுக்காரர் சொன்னால், அறிவு புத்தகத்தையோ அல்லது பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையோ அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்), என்னுடைய பைபிள் கதைப் புத்தகம், அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் போன்ற புத்தகங்கள் சபை கையிருப்பில் இருந்தால் அவற்றை வழங்கலாம். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். வீட்டுக்காரர் புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிப்போம். இந்தப் புத்தகம் கையிருப்பில் இல்லாத சபைகள் வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம்! புத்தகத்தை அல்லது அதிகளவில் கையிருப்பிலிருக்கும் வேறு பழைய புத்தகத்தை அளிக்கலாம்.
◼ 2006, ஏப்ரல் 17-ல் துவங்கும் வாரம் முதற்கொண்டு நாம் சபை புத்தகப் படிப்பில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் படிப்போம். போதிய பிரதிகள் கையிருப்பில் இருக்கும்படி சபைகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். ஏதாவது ரிப்பேர் வேலைக்காக அல்லது கட்டுமான வேலைக்காகத் தனி கணக்கு இருந்தால் அதையும் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை(கள்) முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.
◼ உலகளாவிய வேலைக்காகவும் ராஜ்ய மன்ற நிதிக்காகவும் நன்கொடைகளை செக் அல்லது பாங்க் டிராஃப்ட் மூலம் நேரடியாய் கிளை அலுவலகத்திற்கு அனுப்புகையில் அவற்றை, “The Watch Tower Society” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
◼ உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள்—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற ஆங்கில வீடியோ பற்றி ஜனவரி மாத ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். அவசியப்பட்டால், சீக்கிரத்திலேயே சபைக்குத் தேவையான பிரதிகளை ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? —ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, மலையாளம், ஹிந்தி
துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! (துண்டுப்பிரதி எண் 27) —ஆங்கிலம், உருது, கன்னடம், காசி, குஜராத்தி, கொங்கனி (ரோமன் ஸ்கிரிப்ட்), தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மணிப்புரி, மராத்தி, மலையாளம், மிசோ, ஹிந்தி