தயாரித்தல்—திறம்பட்ட மறுசந்திப்புகளுக்கு முக்கிய வழி
1 “ராஜ்யத்தின் சுவிசேஷத்தை” திறம்பட்ட விதத்தில் பிரசங்கிப்பதற்கு இயேசு தம்முடைய சீஷர்களை நன்கு தயார்படுத்தினார். (மத். 4:23; 9:35) பாலஸ்தீனாவில் மட்டுமே அவர் பிரசங்கிக்கையில் அவர்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்தார். என்றாலும், ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி’ கிறிஸ்தவ ஊழியம் எங்கும் செய்யப்படும் என்பதாக இயேசு பரலோகத்திற்குச் செல்லும் முன் தெரிவித்தார்.—மத். 28:19, 20.
2 கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியில் ஆர்வம் காட்டியவர்களை மறுபடியும் போய் சந்திப்பதும் கிறிஸ்து கட்டளையிட்ட எல்லா விஷயங்களையும் அவர்களுக்குக் கற்பிப்பதும் அந்த வேலையில் உட்படும். திறம்பட்ட விதத்தில் மறுசந்திப்புகளைச் செய்வதற்கு நாம் நன்கு தயாரிக்க வேண்டும்.
3 முன்னதாகவே திட்டமிடுங்கள்: சில பிரஸ்தாபிகள், முதல் சந்திப்பின் முடிவில் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அடுத்த முறை வந்து அதற்குப் பதிலளிப்பதாக சொல்கிறார்கள். அப்படி அடுத்த முறை செல்லும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலுள்ள தகவலைக் காட்டுவது அப்போதே ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க தங்களுக்கு உதவியாய் இருப்பதாகக் கண்டிருக்கிறார்கள்.
4 மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே பத்திரிகைகள் வருவதால், புதிய பத்திரிகைகள் கிடைக்கும்வரை மறுசந்திப்பு செய்வதைத் தள்ளிப்போட அவசியமில்லை. ஏற்கெனவே நாம் கொடுத்திருக்கும் பத்திரிகையிலுள்ள விஷயங்களை வீட்டுக்காரருடன் சிந்திப்பதன் மூலம் அதிக ஆர்வத்தைத் தூண்டுவிக்கலாம்.
5 நோக்கத்துடன் செயல்படுங்கள்: மறுசந்திப்புக்கு செல்வதற்குமுன், சற்று நேரத்தை ஒதுக்கி, அந்த வீட்டுக்காரரைப்பற்றி எழுதி வைத்துள்ள குறிப்புகளை எடுத்துப் பார்த்து, என்ன நோக்கத்துடன் மீண்டும் சந்திக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். உதாரணத்திற்கு, ஏற்கெனவே கொடுத்திருக்கும் பிரசுரத்திலிருந்து ஒரு குறிப்பைச் சிந்திக்கலாம். அல்லது கடந்த முறை பேசிய விஷயத்துடன் சம்பந்தப்பட்ட வேறொரு பிரசுரத்தைக் கொடுக்கலாம். ஒரு கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டு வந்திருந்தால், நிச்சயமாகவே அதற்குப் பதிலளிக்க திட்டமிடலாம். சொல்லும் குறிப்புக்கு ஆதாரமாக ஒரு வசனத்தைப் பயன்படுத்தும்போது, அதை நேரடியாக பைபிளிலிருந்து வாசித்துக் காட்ட முயற்சி செய்யுங்கள்.
6 நம் இலக்கு: ஒரு பைபிள் படிப்பைத் தொடங்குவதே நம் இலக்காக இருக்கிறது. மறுசந்திப்பில் ஒரு சகோதரர் வீட்டுக்காரரிடம் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப்பற்றி சொன்னார். அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய பத்திரிகைகளுடன் மீண்டும் போய் அவரைச் சந்தித்தார். “இன்று எல்லாரையும் சந்தித்து பைபிளிலிருந்து ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறோம்” என்று சொன்னார். அந்த நபர் என்ன சொல்கிறார் என்று கேட்ட பிறகு, சகோதரர் ஒரு வசனத்தையும் பைபிள் படிப்பு நடத்தும் ஒரு பிரசுரத்திலிருந்து பொருத்தமான ஒரு பாராவையும் வாசித்தார். இது பைபிள் படிப்பைத் தொடர்ந்து நடத்துவதற்கு வழிவகுத்தது.
7 மறுசந்திப்புகளுக்குத் தயாரிக்க நேரம் எடுத்துக்கொள்வது உண்மையிலேயே பலன் தருகிறது. நம் சந்தோஷம் அதிகரிப்பதோடுகூட, ‘நல்மனமுள்ளவர்கள்’ ஜீவ பாதையில் நடக்க உதவும் பாக்கியத்தையும் பெற்றிருப்போம்.—அப். 13:48, NW.
[கேள்விகள்]
1. ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ ஊழியம் எந்தளவுக்கு செய்யப்படவிருந்தது?
2. ‘சீஷராக்கும்படி’ இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
3. மறுசந்திப்பு செய்வதற்கு நீங்கள் எப்படி முதல் சந்திப்பிலேயே வழி வகுக்கலாம்?
4. புதிய பத்திரிகைகள் கிடைக்கும்வரை நாம் ஏன் மறுசந்திப்பு செய்வதைத் தள்ளிப்போட அவசியமில்லை?
5. மறுசந்திப்பு செய்கையில் ஒரு நோக்கத்துடன் செயல்படுவதால் என்ன பயன்?
6. மறுசந்திப்புகளைச் செய்வதில் நம் இலக்கு என்ன?
7. மறுசந்திப்புக்கு நன்கு தயாரிப்பது பைபிள் படிப்பை ஆரம்பிக்க உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?