அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: சபையின் கையிருப்பில் இருக்கும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதாவது ஒன்றை கொடுங்கள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.