பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 9-10
தன்னுடைய ஆடுகளை இயேசு கவனித்துக்கொள்கிறார்
மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இடையிலான பந்தம், இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. (1) நம்பிக்கை. (2) அறிவு. நல்ல மேய்ப்பரான இயேசு, தன் ஆடுகளை நன்றாக அறிந்துவைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆட்டின் தேவை... பலம்... பலவீனம்... ஆகியவற்றைப் பற்றி அவருக்குத் தெரியும். ஆடுகளுக்கும் மேய்ப்பனைப் பற்றி நன்றாகத் தெரியும்; மேய்ப்பனுடைய வழிநடத்துதலில் முழு நம்பிக்கை வைக்கும்.
நல்ல மேய்ப்பரான இயேசு, எப்படி . . .
கூட்டிச்சேர்க்கிறார்?
வழிநடத்துகிறார்?
பாதுகாக்கிறார்?
உணவு கொடுக்கிறார்?