கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவுடைய மாறாத அன்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும்
யெகோவா உங்களைப் பொக்கிஷமாகப் பார்க்கிறார். (ஏசா 43:4) அவரிடமும் அவருடைய அமைப்பிடமும் உங்களை ஈர்த்திருக்கிறார். யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்த நாளிலிருந்து நீங்கள் அவருக்குத்தான் சொந்தம். நீங்கள் அவருடைய விசேஷ சொத்து. அதனால், கஷ்ட காலத்தில்கூட அவர் உங்களைக் கண்ணுக்குக் கண்ணாக பார்த்துக்கொள்வார். தன்னுடைய அமைப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு மாறாத அன்பைக் காட்டுவார்.—சங் 25:10.
சமீபத்தில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டபோது தன்னுடைய அமைப்பைப் பயன்படுத்தி அவர் எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது, யெகோவா காட்டும் மாறாத அன்புக்கு இன்னும் நன்றியோடு இருப்பீர்கள்.
2019 ஒருங்கிணைப்பாளர்கள் குழுவின் அறிக்கை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பேரழிவுகள் ஏற்படும்போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு கிளை அலுவலகங்களை ஒருங்கிணைப்பாளர்கள் குழு எப்படித் தயார்படுத்தியிருக்கிறது?
இந்தோனேஷியாவிலும் நைஜீரியாவிலும் இருப்பவர்களுக்கு யெகோவாவுடைய அமைப்பு எப்படி ஆலோசனையையும் நிவாரண உதவியையும் கொடுத்திருக்கிறது?
கொரோனா பெருந்தொற்று சம்பந்தமாக அமைப்பு செய்திருக்கிற எந்த விஷயம் உங்களுடைய மனதைத் தொட்டிருக்கிறது?