தினாரியு
சுமார் 3.85 கிராம் எடையுள்ள ரோம வெள்ளிக் காசு. இதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. இது ஒரு கூலியாளின் தினக் கூலியாக இருந்தது. யூதர்களிடமிருந்து ‘தலைவரியாக’ ரோமர்களால் வசூலிக்கப்பட்டது. (மத் 22:17, அடிக்குறிப்பு; லூ 20:24)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.