நீங்கள் என்றும் வாழலாம்!
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புதிய புத்தகத்தைக் குறித்து போற்றுதலுள்ள ஒரு வாசகர், அது “ஜீவனைத் தொடர்ந்து காக்கும் சத்தியங்களால்” நிறைந்திருக்கிறது என்று எழுதினார்.
ஒரு முழுநேர கிறிஸ்தவ பிரசங்கியாக மற்ற குடும்பங்களுடன் அநேக வேதப்படிப்புகளை நடத்தும் அவள் சொன்னாள்: “இந்தப் புதிய புத்தகம்தான் தேவையைப் பூர்த்தி செய்கிறது! இது குழந்தைகள் சத்தியத்தைக் கிரகித்துக்கொள்வதற்குப் போதுமான அளவு எளிதாகவும் பெற்றோர் தங்களுடைய தீர்மானங்களைச் செய்வதற்குப் போதுமான அளவு புத்திக்கூர்மையுள்ளதாகவும் இருக்கிறது. இது சுருக்கமாகவும் நேரடியாகவும் கையாளுகிறது. இது காரியங்களைச் சுற்றிவளைத்து பேசுவதில்லை! இது ‘சத்தியத்தை’ அது இருக்கும் வண்ணமாகவே தெரிவிக்கிறது. நேர்மை இருதயமுள்ளவர்களின் இருதயத்தைச் சென்றெட்டுவதற்கான தேவையான எல்லாச் சிறந்த குறிப்புகளாலும் நிறைந்திருக்கிறது. இந்தப் புதிய வெளியீடு சங்கத்தின் எல்லாப் பிரசுரங்களையும் ஒரு சிறு புத்தகமாக அமைத்திருப்பதுபோல் இருக்கிறது.”
வேதப்படிப்பிற்கென்று வடிவமைக்கப்பட்ட சுலபமாக வாசிக்க முடிகிற இந்தப் புதிய புத்தகத்தைத் திறந்து பார்க்கையில் நீங்களும்கூட கிளர்ச்சியடைவீர்கள். இந்தப் பத்திரிகை அளவிலானதும் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டதுமான இந்தப் புத்தகத்தின் 256 பக்கங்களில், சுமார் 150 அழகான விளக்கப்படங்களை இது கொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை நான்கு வண்ணங்களாலானவை. இவை வாசிப்போரின் மனதில் முக்கியமான குறிப்புகளைப் பதியச் செய்ய உதவுமளவில் மிகச் சிறந்த போதிக்கும் உதவிகளாகச் சேவிக்கின்றன. உடன் சேர்க்கப்பட்டுள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து தபாலில் அனுப்புவதன்மூலம் உங்களுடைய பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தயவுசெய்து 256 பக்கங்களடங்கிய நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ.30 அனுப்பியுள்ளேன்.*