உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 1/8 பக். 4-8
  • போர்—ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போர்—ஏன்?
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • போர்—நம்முடைய ஜீன்களிலேயா?
  • பிரசாரத்தின் பங்கு
  • தீர்மானங்களைச் செய்வது யார்?
  • யுத்தத்தின் மீது மதம் எவ்விதமாக செல்வாக்கை செலுத்துகிறது?
  • தேசப்பற்று—“புனிதமான தன்னல வேட்கை நெறி”
  • யுத்தத்துக்கு மறைவான காரணம்
  • போர்
    விழித்தெழு!—2017
  • யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு யுத்தம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • போர் எதிர்காலத்தில் என்ன செய்யும்?
    விழித்தெழு!—1999
  • போர்கள் தவிர்க்க முடியாதவையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 1/8 பக். 4-8

போர்—ஏன்?

தேசங்கள் ஏன் போர் செய்கின்றன என்பதாக நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அந்த கேள்விக்கு நாம் பதிலை கண்டுபிடித்துவிட்டால், சமாதானத்தின் திறவுகோலையுங்கூட நாம் கண்டுபிடித்துவிடலாம்.

ஒருவேளை அரசியல் விஞ்ஞான பேராசிரியர் ஜான் ஸ்டோஸிங்கர் போலவே நீங்கள் பிரதிபலிக்கக்கூடும்: “தேசப்பற்று, போர் மனப்பான்மை நேச நாடு அமைப்புகள், பொருளாதார காரணிகள் அல்லது என்னால் புரிந்துகொள்ள முடியாத கொடூரமான கருத்துக்கள் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றன என்று நான் வாசித்திருக்கிறேன். . . . இது உண்மையாக இருக்குமோ என்று சிந்தித்திருக்கிறேன். . . . எப்படியிருந்தாலும் போர்களை மனிதர்களே ஆரம்பித்திருக்கிறார்கள். என்றபோதிலும் யுத்தத்தைப் பற்றிய புத்தகங்களில் இந்த ஆளுமை (மனித) நோக்கத்துக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டில்லை.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) போரில் மனிதனின் பங்கை அசட்டை செய்ய முடியாது என்பது தெளிவாக இருக்கிறது.

யுத்தத்தின் மலர்ச்சி என்ற தம்முடைய புத்தகத்தில் பேராசிரியர் ஆட்டர்வீன் அதே போன்ற ஒரு முடிவுக்கு வருகிறார்: “அவை இராணுவ அமைப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது ஆளும் குழுக்களாக இருந்தாலும் சரி அமைப்புகளின் அங்கத்தினர்களாக மனிதர்களின் தீர்மானங்களே போர்களுக்கு காரணமாக இருக்கின்றன.” ஆனால் போரின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன? அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படையில் அவை அரசியல் அதிகாரம், ஆட்சிப்பகுதி, கொள்ளை, கீர்த்தி, தற்காப்பு மற்றும் பழிவாங்கும் எண்ணமாக இருக்கின்றன.

போர்—நம்முடைய ஜீன்களிலேயா?

போருக்கான காரணங்களை விளக்க அநேக கோட்பாடுகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக பரிணாமத்தை நம்புகிறவர்கள், பலவந்தமாக தாக்குவதையும் தற்காப்பு செய்து கொள்வதையும் இயல்பாகச் செய்யும் மிருக உலகின் பண்புகளை இன்னும் கொண்டிருக்கும், மிருக உயிரின் ஒரு உயர்வடிவாக மட்டுமே மனிதனை கருதுகிறார்கள். சண்டை செய்வது மனிதனின் உள்ளியல்பாக, அது அவனுடைய ஜீன்களிலேயே இருக்கிறது என்பதாக அவர்கள் தர்க்கம் செய்கிறார்கள். சமாதானம் மற்றும் போரின் உயிர்நூல் என்ற புத்தகத்தில் விலங்கு நூலாய்வாளர் ஐரேனஸ் இப்ல்-இபிஸ்ஃபெல்ட் இவ்விதமாக எழுதினார்: “நம்முடைய நெருங்கிய உறவினர்களான பெரிய குரங்குகளுக்கு கணிசமாக வலிய சண்டைக்குப் போகும் உள்ளியல்பும் சமஸ்தான உணர்வும்கூட இருக்கின்றன. . . . போர் செய்வதற்கான மனிதனின் மனச்சாய்வு பூர்வாங்க பால்குடி உயிரினத் தொகுதியின் பரம்பரை சொத்தாக இருக்கக்கூடும் என்பதை இது பலமாக ஆதரிக்கிறது.”

ஆஸ்டிரியாவில் நவீன மனிதப் பண்பாண்மை ஆக்கத்தின் (மிருக நடத்தையின் ஆராய்ச்சி) ஸ்தாபகரான கோன்ராட் லாரன்ஸ், மனிதனுக்கு வலிய சண்டைக்குப் போகும் தூண்டுதல் இருப்பதாக உறுதியாகச் சொல்லுகிறார். அதாவது “போர் செய்யச் செய்யும், அதிக பலமாக தூண்டப்பட்ட ஒரு உள்ளுணர்ச்சி” என்பதாக அவர் குறிப்பிடுகிறார்.—ஆன் அக்ரெஷன்.

மறுபட்சத்தில் சரித்திர பேராசிரியர் சூ மான்ஸ்பீல்ட் அந்த முடிவை எதிர்க்கிறார்: “சரித்திர காலங்களில் பெரும் பலமான கலாச்சாரங்கள் போரில் ஈடுபட்டிருந்தாலும், மனிதர்களில் பெரும்பாலானோர் அதில் கலந்து கொண்டவர்களாக இருக்கவில்லை.” போர் படைகளில் பணி புரிய சட்டப்படி அரசாங்கங்கள் கட்டாய ஆள்-சேர்ப்பு முறைகளை நாட வேண்டியிருப்பதும்கூட, சண்டை செய்வதையும் கொலை செய்வதையும் பொதுவாக ஜனங்கள் பெரும் உற்சாகத்தோடு கருதுவதில்லை என்பதை அல்லது அவை தன்னியல்பான செயல்களாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. பேராசிரியர் மேன்ஸ்பீல்ட் மேலும் இவ்விதமாகச் சொல்லுகிறார்: “ஆம், போர் பொதுவாக ஒரு சிறுபான்மையானோரின் அனுபவமாகவே இருந்திருக்கிறது என்ற கருத்தையே சரித்திர பதிவு காண்பிக்கிறது.”

சமீப காலங்களில், அந்த சிறுபான்மையானோர், தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலுமாக பீரங்கி படை, அணுகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது முதல் போரையும் கொலையையும் செய்ய ஒருவரை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. கடந்த கால போர்களுக்கு எதிர்மாறாக, விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ள சிறு பான்மையானோர் உண்மையில் நேருக்கு நேர் பார்க்காமலே கொலை செய்யமுடியும். அவர்கள் யாரை கொலை செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளாமலே இதைச் செய்ய முடியும். ஆனால் விரோதியை அவர்கள் அறிந்திராவிட்டால், ஜனங்கள் எவ்விதமாக போர் செய்ய தூண்டப்படுவார்கள்?

பிரசாரத்தின் பங்கு

சில நேரங்களில் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அபூர்வமாகத்தானே இது இரத்தம் சிந்த வழிநடத்துகிறது. முதலிடத்தில், தேசத்தின் சட்டம், உடன்குடிமக்களை தாக்குவதையும் கொலை செய்வதையும் தடை செய்கிறது. ஆனால் யுத்த காலத்தில் அந்த தடை பொதுவாக, ஜனங்கள் அவர்களுடைய “விரோதியை” உண்மையில் அறிந்திராவிட்டாலும், எதிர் தேசத்திலுள்ள குடிமக்களுக்கு பொருந்துவது கிடையாது. அரசியலால் கட்டுப்படுத்தப்பட்ட செய்தி தகவலின் மூலம் அவர்கள் என்ன நம்பும்படியாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்களோ, அதை மட்டுமே அவர்கள் எதிரியைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

இது ஒவ்வொரு தேசத்திலும் வாழ்க்கையின் உண்மையாக இருக்கிறது. ஈபில் ஐரேனஸ் இப்ல்-இபிஸ்ஃபெல்ட் எழுதிய விதமாகவே: “பொய்யான அல்லது ஒரு பக்க தகவலை வாக்காளருக்குக் கொடுத்து ஏமாற்றம் தன்னலம் கருதும் கோஷ்டிகளாலேயே (அரசியல் வாதிகள் போர் கல உற்பத்தியாளர்கள், இரணுவம்) பொது மக்களின் கருத்து உருவாகிறது.” அதே தொனியில் சரித்திராசிரியர் H.E. பார்ன்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிரெஞ்சு புரட்சி யுத்தங்கள் முதற்கொண்டு . . . பொதுமக்களின் கருத்து வேறுபாடு, எதிர்ப்பு மற்றும் பிரச்னைகளைப் பற்றிய உண்மையான பகுப்பு ஆகியவற்றை விலக்கி, போரை பாதுகாப்பதற்காக ஏராளமான மற்றும் கருத்தை ஈர்க்கும் பிரசாரம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.”

இதன் விளைவாக, “கொலை செய்யவும் ஒருவேளை மரிக்கவும்கூட ஏறக்குறைய தானாகவே முன்வரும் ஒரு நிலைமைக்குள் வருகின்ற வகையில், நடைமுறையில் எவரையும் இணங்க வைத்து காரியத்தை சாதித்துவிடலாம்.” (போர், குவென் டையர் எழுதியது) இவ்விதமாக அவர்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தினிமித்தமாக “பதவியிலிருப்பவர்கள்” பெரும்பான்மையானோரை படுகொலைக்கு தயார் செய்யும் பொருட்டு, செய்தி துறையை கட்டுப்படுத்த முடியும்.

நாசி ஆட்சியிலிருந்த தலைவர்களான அடால்ப் ஹிட்லரும் ஜோசப் கோபெல்லும் மனக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களை ஏமாற்றவும் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 24, 1939-ன் போது, போலந்தின் மீது படையெடுக்க தன்னுடைய திட்டத்தை, ஹிட்லர் உயர் அதிகாரிகளின் ஒரு தொகுதிக்கு இவ்விதமாக விளக்கினார்: “போரை ஆரம்பிக்க பொய்யான ஒரு பிரசாரத்தை நான் ஏற்பாடு செய்வேன். அது நம்பத்தக்கதாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை . . . ஒரு போரை ஆரம்பித்து அதை நடத்துவதில் முக்கியமானது உண்மை அல்ல, ஆனால் வெற்றியே.”

ஆகவே ஒரு தேசத்தை மற்றொன்றுக்கு எதிராக எழும்பச் செய்ய ஒரு தூண்டுதலை உருவாக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் போர் காய்ச்சலை உருவாக்குவதில் முக்கிய பாகங்களாக இருப்பவை யாவை?

தீர்மானங்களைச் செய்வது யார்?

ஆஸ்ட்ரியா தேசத்து பொருளியல் ஆய்வாளர் ஸ்கம்பீட்டர் இவ்விதமாக எழுதினார்: “போரினிடமாக மனச்சாய்வு முக்கியமாக ஆளும் வர்க்கத்தினரின் சொந்த அக்கறைகளினால் ஊட்டி வளர்க்கப்படுவது மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலோ அல்லது சமுதாய ரீதியிலோ ஒரு போர் கொள்கையிலிருந்து தனிப்பட்ட விதமாக ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும் அனைவரின் செல்வாக்கினாலும் அது வளர்க்கப்படுகிறது.” “தொடர்ந்து பதவியில் நீடித்திருக்கும் பொருட்டு மக்கள் தொகையின் மற்ற பகுதிகளை அல்லது பொதுமக்களின் மனநிலையையே தந்திரமாக கட்டுப்படுத்தும் முயற்சியில் எல்லா சமயங்களும் ஈடுபட்டிருக்கும் செல்வாக்குள்ளவர்கள்” என்பதாக ஆளும் வர்க்கத்தினர் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்.—போர் ஏன்? பேராசிரியர்கள் நெல்சன் மற்றும் ஒலின் எழுதியது.

ஒவ்வொரு தேசத்திலும் ஆளும் வர்க்கத்தினர் இருக்கின்றனர். அந்த கோஷ்டியினர் வித்தியாசமான அரசியல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும்கூட இது உண்மையாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தேசத்திலும் இராணுவத்தில் செல்வாக்குள்ளவர்களின் அதிகாரம் குறைவாக மதிப்பிடப்பட முடியாது என்பதாக அநேகர் குறிப்பிடுகின்றனர். முன்னாள் ஐக்கிய மாகாணங்களின் தூதுவரான ஜான் K. கால்ப்ராத் இரணுவ நிறுவனத்தை “பெரிய அளவில், அரசாங்கத்தின் தன்னாட்சி உரிமையின் செயல் முறையில் மிகவும் வல்லமை வாய்ந்த ஒன்று” என்பதாக விவரிக்கிறார். அவர் தொடர்ந்து விளக்குகிறார்: “இரணுவத்தின் அதிகாரம், அதிகாரத்தின் குறிப்பிடத்தக்க மூலக்காரணங்களை உள்ளடக்கமாக கொண்டிருப்பது மட்டுமல்லாமல் . . . அதை நடைமுறைக்கு கொண்டுவரும் எல்லா துணை சாதனங்களும் அதில் உள்ளடங்கியதாக இருக்கிறது. . . . நம்முடைய காலத்தில் அதிகாரத்தை செயல்படுத்தும் வேறு எதையும்விட இதுவே முக்கியமாக பொது மக்களின் அமைதியைக் குலைக்கும் ஒன்றாக இருக்கிறது.”

அதே போன்ற அதிகாரமுள்ள வேறு எதைக் காட்டிலும் மிக அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் ஐக்கிய மாகாணங்களின் இராணுவ நிறுவனத்தைப் பற்றி குறிப்பிடுவதன் மூலம் கால்பிரித் தம்முடைய குறிப்பை விளக்குகிறார். படைப்பிரிவு பணிகளுக்கும் படைத்துறை சாதாரண இராணுவ நிறுவனத்துக்கும் கிடைக்கும் உடைமைகள் மட்டுமல்லாமல் யுத்தக் கருவி தொழிற்சாலைகளுக்கு ஏராளமாக வந்து சேரும் அனைத்துங்கூட இதற்குச் சொந்தமாகிறது.” அதே போன்ற ஒரு நிலையே ரஷ்யாவிலும் அநேக மற்ற தேசங்களிலும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை—இங்குதானே பரஸ்பர அழிவுண்டாக்கும் ஒரு யுத்தத்துக்கு வழிநடத்தக்கூடிய அபாயம் இருக்கிறது—அரசியல் அதிகாரத்தை இராணுவ நிறுவனத்தின் அதிகாரம் மிஞ்சிவிடும்போது இந்நிலை ஏற்படுகிறது.

யுத்தத்தின் மீது மதம் எவ்விதமாக செல்வாக்கை செலுத்துகிறது?

அநேக தேசங்களில் மதத்தின் மதிப்பு குறைந்து வந்தாலுங்கூட தீர்மானம் செய்யும் ஆளும் வர்க்கத்தோடு, மதகுருமார்களும் சேர்த்துக் கொள்ளப்படலாம். மேலுமாக, சில யுத்தங்களுக்கு பின்னால், மதம் தூண்டுவிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. இன்னும் அவ்விதமாக இருக்கிறது. ஈரானிலுள்ள ஷியட் முகமதியர் ஈராக்கிலுள்ள சுன்னி முகமதியரோடு போர் செய்வது இதற்கு ஒரு தெளிவான உதாரணமாக இருக்கிறது.

அதே நிலைமையே இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையே இருக்கிறது. பேராசிரியர் ஸ்டாய்சிங்கர் இவ்விதமாக எழுதுகிறார்: “சரித்திரத்தில் நடைபெற்ற மிகவும் கொடூரமான மதப் போர், முகமதியருக்கு எதிரான கிறிஸ்தவ சிலுவைப் போருமல்ல, அல்லது கத்தோலிக்கர்களுக்கு எதிராக புராட்டஸ்டாண்டினர் செய்த முப்பது ஆண்டு யுத்தமும் அல்ல. அது 20-ம் நூற்றாண்டில் முகமதியருக்கு எதிரான இந்துக்களின் யுத்தமே ஆகும்.” தொடர்ந்து இன்னும் இருந்து வரும் அந்த விரோதத்தை தூண்டியது என்ன? 1947-ல் இந்தியாவும் பாக்கிஸ்தானும் பிரிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும். “மக்கள் தொகையின் மிகப் பெரிய பரிமாற்றம்” இதன் முதல் பாதிப்பாக இருந்தது. “பாக்கிஸ்தானில் துன்புறுத்தப்படுவோமோ என்ற பயத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் ஒருவித வெறியோடு அடைக்கலம் நாடி இந்தியாவுக்கு வந்தார்கள். அதே எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்து முகமதியர்களும் பாக்கிஸ்தானிய மண்ணில் பாதுகாப்பை நாடி ஓடினார்கள். இந்த மக்கள் தொகையின் பரிமாற்றத்தோடுகூட மதசம்பந்தமான வெறுப்பு, வன்முறைக்கும், இரத்தஞ்சிந்துதலுக்கும் காரணமாக இருந்தது.”—தேசங்கள் ஏன் போர் செய்கின்றன.

சரித்திரம் முழுவதிலுமாக, குருவர்க்கத்தினர், ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களோடு மனப்பூர்வமாக உடந்தையாக இருந்திருக்கிறார்கள். யுத்த காலத்தில், மதத்தலைவர்கள் பக்தியோடு, யுத்தக் கருவிகளையும், கடவுளின் பெயரில் இரண்டு பக்கத்திலும், போர்ப்படைகளையும் ஆசீர்வதித்திருக்கிறார்கள். அநேகமாக இரு சாராருமே ஒரே மதத்தினராக இருப்பதாக உரிமைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தூஷணமானது அநேக ஆட்களை, மதத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விலகிப் போகச் செய்திருக்கிறது.

தேசப்பற்று—“புனிதமான தன்னல வேட்கை நெறி”

சில சமயங்களில், ஜனங்கள் யுத்தத்தை விரும்புவதில்லை. அப்படியென்றால், எதன் அடிப்படையில், ஆட்சி செய்பவர்கள் தங்களுடைய நோக்கங்களை ஆதரிக்கும்படியாக மக்களை அதிக எளிதில் இணங்க வைக்கமுடியும்? இதுவே ஐக்கிய மாகாணங்கள், வியட்நாமில் எதிர்பட்ட பிரச்னையாக இருந்தது. ஆகவே ஆட்சி செய்பவர்கள் என்ன செய்தார்கள்? கால்ப்ரேய்த் பதிலளிக்கிறார்: “நவீன காலங்களில் வியட்நாம் யுத்தம், ஐக்கிய மாகாணங்களில் சமுதாய மனநிலை கட்டுப்பாடு [பொது மக்களின் கருத்தை சரி செய்வது] மிக அதிகமான முயற்சிகளை தேவைப்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள பொதுமக்களுக்கு, யுத்தம் அவசியமானது மற்றும் விரும்பத்தக்கது என்பதாக தோன்றச் செய்வதற்கு எந்த முயற்சியும் விட்டு வைக்கப்படவில்லை.” யுத்தத்துக்காக ஒரு தேசத்தை தயார் செய்ய, கையாளுவதற்கு வசதியான ஒரு கருவியை அது சுட்டிக் காண்பிக்கிறது. அது என்ன?

பேராசிரியர் கால்ப்ரேய்த்தே மறுபடியும் பதிலளிக்கிறார்: “எல்லா தேசங்களிலும் பள்ளிகள் தேசாபிமான கொள்கைகளை வற்புறுத்தி பயிற்றுவிக்கின்றன . . . இராணுவ மற்றும் அந்நிய தேசங்களின் சம்பந்தமாக அரசியல் கொள்கை ஆகியவற்றிற்கு அடிபணியச் செய்வதில் வெற்றியடைய, அனைவரையும் கொடியைச் சுற்றி கூடுவதை தேவைப்படுத்தும் கட்டுப்பாடு குறிப்பாக முக்கியமானதாக இருக்கிறது.” மேற்கத்திய தேசங்களில் இருப்பது போலவே கம்யூனிஸ்ட் நாடுகளிலும்கூட விடாது தொடர்ந்து வலியுறுத்தப்படும் இந்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் அயல்நாட்டு அரசியல் பணியிலும், அரசியல் துறையிலும் நீடித்த அனுபவமுள்ள சார்லஸ் யோஸ்ட் இவ்விதமாக தம்முடைய கருத்தை வெளியிட்டார்: “தேசங்கள் அதிகமாக பெருமைப் பாராட்டிக் கொள்ளும்—அவர்களுடைய தன்னாட்சி சுதந்திரமும், அவர்களுடைய ‘புனிதமான தன்னல வேட்கை நெறி’யும் அவர்களுடையதைவிட வேறு எந்த விரிவான அல்லது உயர்வான அக்கறைக்கும் அடிபணியாமலிருப்பதும்—ஆகிய இவையே தேசங்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமாக தொடர்ந்து இருந்து வருகிறது.” பிரிவினைகளை உண்டுபண்ணும் தேசப்பற்றிலும், எந்த ஒரு தேசமும் மற்ற அனைத்தையும்விட உயர்வானது என்ற தீங்கிழைக்கும் போதகத்திலும் இந்த “புனிதமான தன்னல வேட்கை நெறி” தொகுத்துரைக்கப்படுகிறது.

சரித்திராசிரியரான அர்னால்ட் டாயின்பீ இவ்விதமாக எழுதினார்: “தேசீய ஆவி என்பது குல மரபு அமைப்பு முறை என்ற பழைய துருத்திகளிலுள்ள, மக்களாட்சி என்ற புளித்துப் பொங்கிய புதிய திராட்சரசமாக இருக்கிறது.” அதிகாரம் மற்றும் அழியாமை என்ற புத்தகத்தில் டாக்டர் லோப் பெஸ் ரேய்ஸ் இவ்விதமாக எழுதினார்: “சம காலத்தில் நடைபெறும் யுத்தத்துக்கு ஆட்சியுரிமையே முக்கிய காரணமாக இருக்கிறது; . . . இது திருத்தி அமைக்கப்பட்டாலொழிய அரசுரிமை ஆட்சி முறைகள் மூன்றாவது உலகப் போரை துவக்கிவிடும். மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் அனைவருமே ஒரே மனித குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படைக் கருத்தை, தேசாபிமானத்துக்கும் அரசுரிமைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மறுதலிக்கிறது. அந்த உண்மையை எற்க மறுப்பதே யுத்தங்களுக்கு வழிநடத்துகிறது.

ஆம், மனிதன் ஏன் தன்னுடைய சொந்த இனத்தை திட்டமிட்டு அழிப்பதற்கு ஒப்புக்கொள்கிறான் என்பதற்கு நிபுணர்கள் எல்லா விதமான விளக்கங்களையும் தரலாம். என்றபோதிலும் பெரும்பாலான கருத்துரையாளர்கள் காணத்தவரும் அடிப்படை காரணம் ஒன்று இருக்கிறது.

யுத்தத்துக்கு மறைவான காரணம்

யுத்தத்தின் சரித்திரத்தையும் அதன் காரணங்களையும் சிந்திக்கையில், மனிதவர்க்கத்தை ஆழமாக பாதித்திருக்கும் மிகப்பெரிய ஒரு போராட்டத்தை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அது பைபிளில் தெளிவாக அடையாளம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. வல்லமையுள்ள ஒரு ஆவி சிருஷ்டி, தன்னல பேராசையினால் தூண்டப்பட்டு, கடவுளுக்கு எதிராக தன்னை உயர்த்திக் கொண்டதை இந்த பூர்வீக புத்தகம் காண்பிக்கிறது. (யோபு 1:6-12; 2:1-7) அவன் பரலோகத்திலும் பூமியிலும் கலகத்தை துவக்கி வைத்து, அதோடுகூட மனித குடும்பத்துக்கு கீழ்ப்படியாமையையும் அபூரணத்தையும் பாவத்தையும் மரணத்தையும் அறிமுகம் செய்து வைத்தான். (ஆதியாகமம் 3:1-7) இவ்விதமாக பூமியின் மீதிருக்கையில் இயேசுவால் அவருடைய மதசம்பந்தமான சத்துருக்களை அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவர் சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள் . . . அவன் ஆதி முதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை. அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.”—யோவான் 8:44.

கலகம் செய்த இந்த ஆவி சிருஷ்டியாகிய சாத்தான் (பொருள், எதிர்ப்பவன்) பிசாசு (பொருள், குற்றஞ்சாட்டுபவன், பழிதூற்றுபவன்) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேசங்களின்மீது ஆட்சிசெய்து அவைகளில் பிரிவினைகளை உண்டுபண்ணியிருக்கிறான். அரசியல் அதிகாரத்தின் மூலமாக அவன் தேசங்களின் மீது காணக்கூடாத வகையில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறான். இவ்விதமாக உறுதியாகச் சொல்வதற்கு நமக்கு என்ன ஆதாரமிருக்கிறது? கிறிஸ்துவை அவன் சோதித்தபோது, “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமை”யையும் அவருக்குக் காண்பித்து நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று அவனால் சொல்ல முடிந்ததிலிருந்து இது தெரிகிறது.” உலகத்தின் சகல ராஜ்யங்களின்” மீதும் சாத்தானின் ஆதிக்கத்தை கிறிஸ்து ஒப்புக்கொள்ள மறுக்கவில்லை. “உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்று சொல்வதன் மூலம் அவர் சோதனையை விலக்கிவிட்டார்.—மத்தேயு 4:1, 8-10.

எல்லா சாத்தியமான அரசியல் சூழ்ச்சி மற்றும் மாற்றுக்கவர்ச்சிகளின் மூலமாக, சாத்தான் மனிதவர்க்கத்தை சமாதானத்தின் ஒரே மெய் வழியிலிருந்து திருப்பிவிட்டிருக்கிறான். பகைமையை அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் அமைப்புகளுக்கு மனிதவர்க்கத்தின் பெரும்பாலானோர் பற்றுமாறாமல் இருக்கிறார்கள். அவைகள் மனித இனத்துக்கு மெய்யான சமாதானத்தைக் கொண்டுவர மாட்டாது. அவைகளால் அது முடியவும் முடியாது. ஏனென்றால் அவைகள் தவறான கடவுளின்—குடியிருக்கப்பட்ட பூமி முழுவதையும் மோசம் போக்கும் கடவுளின்—செல்வாக்கின் கீழிருக்கின்றன. இதன் விளைவாக வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அவைகள் சமாதானத்துக்கான ஒரே மெய்யான வழியை வேண்டாமென்று தள்ளிவிடுகின்றன.—வெளிப்படுத்தின விசேஷம் 12:9; 2 கொரிந்தியர் 4:4.

ஆனால் சமாதானத்தை மெய்மையாக்க மெய்யான வழி எது? எது இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்? சமாதானத்தைச் சுதந்தரித்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளை தொடர்ந்து வரும் கட்டுரை சிந்திக்கும். (g86 2/8)

[பக்கம் 5-ன் படம்]

ஜோசப் கோபெல்ஸ், கொள்கை பரப்பு மற்றும் தேசீய அறிவொளி அமைச்சர், நாசி ஆட்சியின் பிரசார வல்லுநர்

[படத்திற்கான நன்றி]

U.S. Library of Congress

[பக்கம் 6-ன் படம்]

ஈரான் ஈராக் போர் காண்பிப்பது போலவே மதம் இன்னும் போர்களுக்கு காரணமாக இருக்கிறது

[படத்திற்கான நன்றி]

I. Shateri/Gamma-Liaison

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்