உங்களுடைய சொந்த உடல் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன?
மருத்துவம் நோயைக் குணமாக்க முயற்சி செய்கிறது. அநேகமாக அவ்விதமாகச் செய்வதில் அது வெற்றிப் பெற்றிருக்கிறது. ஆனால் ஆரோக்கியகரமான ஒரு வாழ்க்கைமுறை முதலிடத்தில் நோய் வராதபடித் தடை செய்யக்கூடும்.
“ஞானமாக உணவை உட்கொள்வது, மிதமாகக் குடிப்பது, புகை பிடிக்காமல் இருப்பது, கவனமாக வாகனம் ஓட்டுவது, போதிய உடற்பயிற்சிகளைச் செய்வது, நகர வாழ்க்கையின் அழுத்தங்களின் கீழ் வாழக் கற்றுக்கொண்டு அவ்விதமாகச் செய்ய ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு” நாம் நம்முடைய சொந்த உடல் ஆரோக்கியத்தைப் பொறுப்புடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாகத் தலைவர் டாக்டர் ஹாஃப்டன் மஹ்லர் குறிப்பிடுகிறார்.
ஞானமானப் புத்திமதியையும் நல்ல ஆலோசனைகளையும் கொண்ட பைபிள் இந்த விஷயத்தில் நமக்குப் பெரும் உதவியாக இருக்கக்கூடும். இதிலுள்ள நியமங்கள் அதிக அமைதியான ஒரு வாழ்க்கைக்கும் இவ்விதமாக அழுத்தங்கள் நிறைந்த நம்முடைய உலகில் மேம்பட்ட உடல் ஆரோக்கியத்துக்கும் வழிநடத்தக்கூடும். அதன் போதகங்கள், வெறுமென ஆவிக்குரிய கருத்தில் மட்டுமல்ல, ஆனால் சொல்லர்த்தமாகவும் கூட, “ஆரோக்கியமான வசனங்களாக” இருக்கின்றன. அதனுடைய நல்வார்த்தைகள் “அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.”—2 தீமோத்தேயு 1:13; நீதிமொழிகள் 4:22.
ஆனால் இன்னும் அதிகமாக, பைபிள் நியமங்கள் கவலைக்குரிய சாவுக்கேதுவானப் பிரச்னைகளைக் குறைத்துவிடக்கூடும். இது எவ்விதமாக சாத்தியமாக இருக்கிறது? இதோ சில உதாரணங்கள்:
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசாங்கம் சிகரெட் பிடிப்பதை, “ஐக்கிய மாகாணங்களில் தெளிவாகவே நோயையும் அகால மரணத்தையும் விளைவித்துவரும் தவிர்க்கப்படக்கூடிய மிகப்பெரிய தனித்த ஒரு காரணம்” என்றழைக்கிறது. புற்றுநோய் மரணங்கள் புகைப் பிடிக்காதவர்களைவிட புகைப்பிடிப்பவர்களின் மத்தியில் ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. பைபிள் சொல்கிறது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொள்வோம்.” (2 கொரிந்தியர் 7:1) யெகோவாவின் சாட்சிகள் புகையிலைக்கும்கூட இதை வெகு காலமாகவே பொருத்தி வந்திருக்கின்றனர். இதன் காரணமாக, அவர்கள் உலகின் மிகப் பயங்கரமான நோய்களில் ஒன்றுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ஒன்றைத் தங்களுக்கு குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுபான துர்ப்பிரயோகமும் குடிவெறியும் கல்லீரல் அழற்சியை உண்டுபண்ணுவது மட்டுமல்லாமல், சண்டகள், தர்க்கங்கள் மற்றும் தற்கால கொள்ளை நோயான சாவுக்கேதுவான மோட்டார் வண்டி விபத்துக்களையும்கூட உண்டு பண்ணுகின்றன. பைபிள் இங்கே உதவக்கூடுமா?
மதுபானத்தை மிதமாக உபயோகிப்பதை அது சிபாரிசு செய்கிறது. அது சொல்வதாவது: “வெறியரும், உதாசினரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” மறுபடியுமாக: “திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளி பண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல” என்று கூறுகிறது. (1 கொரிந்தியர் 6:9-11; நீதிமொழிகள் 20:1) ஆரோக்கியமான அந்தப் பைபிள் புத்திமதி அர்த்தமுள்ளதாக இருக்கிறதா?
மயக்க மருந்தின் துர்ப்பிரயோகம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் கவலைக்குரிய ஒரு பிரச்னையாகிவிட்டிருக்கிறது. உடல் நல நெருக்கடி 2000 சொல்வதாவது: “முறைகேடாகப் போதை பொருட்களைக் கடத்துவதற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பெரும் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் முதலிடத்தில், எளிதில் இதனால் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களை இதிலிருந்து தடை செய்வதற்கோ குறைவான பணமே செலவழிக்கப்படுகிறது,” புகையிலைக்குப் பொருத்தமாக இருக்கும் அதே பைபிள் ஆதார நியமத்தையே யெகோவாவின் சாட்சிகள், சிந்திக்கும் ஆற்றலை மந்தமாக்கிவிடும் போதை பொருட்களுக்கும் பொருத்துகிறார்கள். (2 கொரிந்தியர் 7:1) இந்த விஷயத்தில் பெற்றோர் ஒரு முன்மதிரியாக இருந்து தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். இது இந்த பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடை செய்வதற்கு வெகு உதவியாக இருக்கிறது.
மேக வேட்டை நோய், ஏய்ட்ஸ் போன்ற பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள், ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு பாலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குக் கூடுதலான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது? பைபிள் ஒழுக்கக்கேடான நடத்தையைத் தெளிவாகக் கண்டனம் செய்கிறது. விவாக வாழ்க்கை முழுவதிலும் ஒரே ஒரு துணைவரைக் கொண்டிருப்பதையும் அந்த நபருக்கு ஒழுக்க ரீதியில் உண்மையுள்ளவராய் இருக்கும்படியாகவும் அது கற்பிக்கிறது. அது சொல்வதாவது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும் விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) மேலுமாக, அது சொல்வதாவது: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம் . . . இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—கலாத்தியர் 5:19-21; மத்தேயு 5:32.
இப்படிப்பட்ட சரியான பைபிள் ஆதாரமுள்ள நியமங்கள் தொந்தரவுகள் நிறைந்த இன்றைய உலகிலும்கூட மேம்பட்ட உடல் ஆரோக்கியத்துக்கு வழிநடத்தக்கூடும். ஆனால் அவைகளால் நிரந்தரமான சுகத்தை அளித்திடமுடியாது. நிரந்தரமாக சுகமடைதல் என்பதே பின்வரும் கட்டுரையின் பொருளாக இருக்கிறது. (g87 5⁄8)
[பக்கம் 3-ன் படம்]
“முதலிடத்தில் நோய் ஏற்படுவதற்கு உண்மையான காரணங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, விஞ்ஞானமும் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பரிகாரத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.”—உடல் நல நெருக்கடி 2000