புகைபிடிப்போருக்கும் புகைபிடிக்காதோருக்கும் புகையிலையின் அபாயம்
புகைபிடிப்பவர்களுக்கும் புகை பிடிக்காதவர்களுக்கும் புகையிலை விளைவிக்கும் தீங்கிற்கான அத்தாட்சி தொடர்ந்து அதிகரிக்கிறது
◼உணவிற்குப் பதிலாக புகையிலை
ஒரு பத்தாண்டிற்குள் முன்னேற்றமடையும் அநேக நாடுகளில் “நுரையீரல் புற்றுநோய் ஒரு கொள்ளை நோயாகப் பரவுவதை ஊகிக்க முடிகிறது” என்பதாக உவர்ல்ட் ஹெல்த் என்ற ஆங்கிலப் பத்திரிகை சொல்கிறது. புகையிலை உபயோகம், “மூன்றாம் உலக நாடுகளில் ஆண்டொன்றுக்கு 2.1 விழுக்காடாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய சங்கம் மேலும் குறிப்பிடுகிறது. தற்போது உலகத்தின் புகையிலையில் 63 விழுக்காடு அங்கே உற்பத்தி செய்யப்படுகிறது. அது 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த 50 விழுக்காட்டிலிருந்து உயர்ந்திருக்கிறது. இத்தகைய போக்கானது இந்த வளரும் நாடுகளை ஆபத்துக்குள்ளாக்குகிறது. இலண்டனின் தி டைம்ஸ் இதற்கான காரணத்தை விளக்குகிறது: “புகையிலை உற்பத்தி, மூன்றாம் உலக நாடுகள் முழுவதிலும் ஒரு வியாபாரப் பயிராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது, புற்றுநோய் வீதத்தை அதிகரிக்கிறது. காடுகள் அழிக்கப்படுவதற்குக் காரணமாகிறது. மற்றும் வீட்டு உபயோகத்திற்கான அத்தியாவசியமான உணவுப் பயிர்கள் பயிரிடக்கூடிய நிலத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.”
◼புகையும் புற்றுநோயும்
1986-ல் ஹங்கேரியில் நடந்த 14-வது சர்வதேச புற்றுநோய் மாநாட்டின்போது, அந்த ஆண்டில் 35 இலட்சம் ஆட்கள் புற்றுநோயால் மரிப்பார்கள் என்பதாக வல்லுநர்களால் ஊகிக்கப்பட்டது. “உலக சுகாதார ஸ்தபனத்தின் புள்ளி விவரத்தின் பிரகாரம், இவைகளில், பத்து இலட்சம் மரணங்கள் புகைபிடிப்பதினால் விளைகிறது” என்பதாக எர்ட்ஸ்லிஷ் பிரேக்ஸிஸ் (Artzliche Praxis) என்ற ஜெர்மானிய மருத்துவப் பத்திரிகை அறிக்கையிடுகிறது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை கெளரவப் பேராசிரியரான சர் ரிச்சர்டு டால் புகையிலையின் புகையிலுள்ள 3800 இரசாயனப் பொருட்களில் 50 இரசாயனப் பொருட்கள் மிருகங்களில் புற்றுநோயை விளைவிப்பதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கிறார். இந்த இரசாயனப் பொருட்களில் சில உட்சுவாசிக்கப்படாத புகையில் பேரளவு வீரியத்தோடு நிறைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதமாக, புகைபிடிப்பவர்கள், மற்றவர்களை, புகைபிடிப்பவரின் புகையை சுவாசிப்பவர்களை, அதிகளவான புற்றுநோயை உண்டுபண்ணும் பொருட்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். புகைபிடிப்பவர்களுடன் வாழும் புகைபிடிக்காதவர்கள் பற்றிய ஒரு பிரிட்டிஷ் ஆய்வு, நுரையீரல் புற்றுநோயால் கொல்லப்படும் ஒவ்வொரு இரண்டாம் நபர் மற்றவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர் என்று கண்டுபிடித்தது.
ஐக்கிய மாகாணங்களின் இரண வைத்திய தலைமையதிகாரி புகைபிடிக்காதவர்களுக்கு புகைவிலக்கப்பட்ட வேலை செய்யும் இடத்தை அளிக்குமாறு வியாபார நிறுவனங்களைத் துரிதப்படுத்தினார். புகைபிடிப்பதினால் உண்டாகும் உடல்நல பாதிப்புகள் பற்றிய 1986-வது ஆண்டின் தம்முடைய அறிக்கையில் அவர் சொன்னதாவது: “தன்னிச்சையற்ற புகைபிடித்தல் ஆரோக்கியமுள்ள புகைபிடிக்காத ஆட்களில் புற்றுநோய் உட்பட, நோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது,” மேலும், “புகைபிடிப்பவர்களையும் புகைபிடிக்காதவர்களையும் அதே காற்றுப் பகுதியில் வெறுமென பிரித்து வைப்பதால் புகைபிடிக்காதவர்களை சுற்றுப்புற புகையிலை புகைக்கு வெளிப்படுத்தப்படுவதை குறைக்க முடியுமே தவிர தவிர்க்க முடியாது.
◼இன்னும் பிறவாத குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன
புகைபிடிப்பது கருப்பையிலிருக்கும் குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவு கிடைக்க வொட்டாமல் பட்டிணி வைக்கிறது என்பதாக ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குழு உரிமை பாராட்டுகிறது. இன்னும் பிறவாத குழந்தைக்கு உணவையும், பிராணவாயுவையும் அளிக்கிற மற்றும் கழிவுப்பொருட்களை கொப்பூழ்க்கொடி வழியாக வெளியேற்றுகிற பிளசென்ட்டாவுக்குச் (placenta) செல்லும் இரத்த ஓட்டத்தின்மீது, புகைப்பிடித்தல் கொண்டுள்ள பாதிப்பைக் குறித்து இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியாளர்கள் கொப்பூழ்க்கொடி வழியாகச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் கண்காணிப்புச் செய்கையில், ஒரு தாய் புகை பிடித்த இரண்டே நிமிடங்களுக்குப் பிறகு, இரத்த ஓட்டம் குறைந்ததாகவும், மேலும் இப்படிப்பட்ட பாதிப்பு ஒரு மணி நேரம் வரை நீடித்ததாகவும் கண்டுபிடித்தனர்.
பிரசவ சம்பந்தமான மருத்துவக்கலை மற்றும் மகளிர்நோய் சிகிச்சை பற்றிய மருத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளரான டாக்டர் பிரையன் ட்ரூடிங்கர், தி யுனிவர்சிடி ஆஃப் சிட்னி நியூஸ் அறிக்கையின் பிரகாரம், சொன்னதாவது: “நாளொன்றுக்கு பத்து சிகரெட்டுகள் வீதம், கர்ப்பவதியாயிருக்கும் காலப்பகுதி முழுவதும் புகைபிடித்துவரும் தாய்மார்களின் குழந்தைகள், புகைபிடிக்காதவர்களின் குழந்தைகளைக் காட்டிலும், சராசரியாக, எடையில் சுமார் 300 கிராம் [10 அவுன்சுகள்] குறைந்தவையாகப் பிறக்கின்றன. ஆனால், இதுவரையாக, புகைபிடித்தலைக் காட்டிலும் புகை பிடிப்பவரே இதற்குக் காரணமாக இருப்பதாக, அதாவது, கருத்தரித்தலின் சமயத்தில் புகைபிடித்த அந்தப்பெண் வேறு பிரச்னைகளையும் கொண்டிருந்ததால் அது அளவு சிறியதான குழந்தைகள் பிறப்பதில் விளைவடைந்திருக்கலாம் என்று விவாதிக்க முடிந்தது. இருப்பினும், புகைபிடித்தல், சிசுவிலிருந்து பிளசென்ட்டாவுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலம் நேரடியாக சிசுவைப் பாதிக்கிறது என்பதை எங்களுடைய ஆராய்ச்சி தீர்மானமாகக் காட்டுகிறது.”
மேலும் தி லான்செட் என்ற பிரிட்டனின் மருத்துவப் பத்திரிகை பிள்ளை பிராய புற்றுநோய் சம்பந்தமான ஆய்வு ஒன்றின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. ஒரு தாய் கர்ப்பவதியாயிருக்கும்போது ஒரு நாளில் உபயோகிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவளுடைய குழந்தைக்குப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு கண்டுபிடித்தது. தி லான்செட் அறிக்கையிட்டதாவது: “சதை வளர்ச்சிக்கான (tumour) எல்லா அபாய பகுதிகளையும் கருத்தில் கொள்ளும்போது கருத்தரித்த நிலையின்போது ஒரு நாளின் 10 அல்லது அதிகமான சிகரெட்டுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய்க்கான ஒட்டுமொத்தமான அபாயம் 50% அதிகரித்துள்ளது.”
குழந்தைகள் பிறந்த பிறகு, புகைபிடிப்பவர்களின் குழந்தைகள் கூடுதலான உடல்நல ஆபத்துக்களை எதிர்படுகின்றன. மற்றொரு வெளியீட்டில், தி லான்செட் குறிப்பிட்டதாவது: “மற்றவர்கள் விடும் புகையைச் சுவாசித்தலுக்கும், பிள்ளை பிராய காசநோய், தொடர்ச்சியான இரைந்த மூச்சுவிடுதல், மேலும் வாழ்க்கையின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் சம்பவிக்கும் சுவாச சம்பந்தமான நோய் ஆகியவற்றிற்கும் நேரடியான தொடர்பு இருப்பதை ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன.”
◼வேலை செய்யும் இடங்களில் புகைபிடித்தலுக்கான செலவுகள்
புகைபிடிப்பவர்கள் தங்களை வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு நபருக்கு கூடுதலாக 4,000 டாலர்கள் (2,650 அமெரிக்க டாலர்கள்) இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் உடல்நல ஆய்வுச் சங்கம் விவரிக்கிறது. புகைபிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைபிடிப்பவர்கள் வேலைச் சோர்வினால் வேலைக்கு வராதிருக்கிறார்கள் மற்றும் சுமார் இரண்டு மடங்களவு ஆபத்துக்குள்ளாகிறார்கள் என்ற அத்தாட்சியை தங்களுடைய உரிமை பாராட்டுதலின் அடிப்படையாக வைக்கிறது. வேலை செய்பவர்களின் கண்களின் மீதுள்ள புகையின் காரணமாகவோ அல்லது புகை பிடிப்பவர்கள் ஒரு கையில் சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் மட்டும் வேலை செய்வதன் காரணமாகவோ, புகை பிடிப்பவர்களிடையே விபத்துக்கள் நிகழ்வது அதிக சாத்தியமானதாக இருக்கிறது என்று அந்தச் சங்கம் சொல்கிறது. (g87 6⁄22)