வீடு இழந்தேன்—ஆனால் உயிரோடிருக்கிறேன்!
ஜப்பான் “விழித்தெழு!” நிருபர்
ஓஷிமா தீவிலிருந்து வெளியேறியவர்களை ஏற்றிவந்த முதல் கப்பல்கள் நவம்பர் 21-ம் தேதி இரவு இஜு தீபகற்பத்தின் துறைமுகங்களை வந்து சேர்ந்தன. ஓஷிமா டோக்கியோ நகராட்சிக்குட்பட்ட நகராதலால் இந்த மக்கள் டோக்கியோவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று பின்பு தீர்மானிக்கப்பட்டது. அந்த நகராட்சியும் தேசிய அரசும் சேர்ந்து நிவாரண பணிகளை ஏற்பாடு செய்தனர். இஜு, டோக்கியோ மற்றும் மிஹாரா மலையிலிருந்து 50 மைல் (80 கி.மீ.) தூரத்தில்தானே அமைந்திருந்த தலைமைக் கிளைக் காரியாலயத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விசேஷ செய்தி அறிக்கைகள் குறுக்கிட்டுக் கொண்டிருக்க அருகாமையில் வாழ்ந்த யெகோவாவின் சாட்சிகள் அந்தத் தீவிலிருந்த தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களின் பேரில் விசேஷ அக்கறைகொள்ள ஆரம்பித்தனர். இட்டோ சபையைச் சேர்ந்த நொபுமாசா ஓபேட்டாவும் மற்றவர்களும் கப்பல்களில் வந்த சாட்சிகளை துறைமுகங்களில் சந்தித்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தினர். அந்த நாளில் மாலை 6:30 மணிக்கெல்லாம் சாட்சிகள் இஜு தீபகற்பத்தின் ஒவ்வொரு துறைமுகங்களிலும் அட்டாமியிலும் ஓஷிமாவிலிருந்து வரும் தங்கள் சகோதரர்களை சந்திக்க ஆயத்தமாயிருந்தனர்.
ஜிரோ நிஷிமுராவும் அவரோடு மற்ற நான்கு பேரும் அட்டாமியை அன்று மாலை 10 மணிக்கு அடைந்தார்கள். அப்பொழுது அட்டாமியிலுள்ள சாட்சிகள் தங்கள் கைகளில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளைப் பிடித்தவர்களாய் அவர்களை சந்தித்தனர். என்ன செய்வது என்று அரசு அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்காமலிருந்ததால், வந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான எவருடனும் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் யுகாவாராவுக்குப் புறப்பட்டனர். அங்குள்ள சபையில் நிஷிமுராவின் மகன் மூப்பராக சேவை செய்கிறார். அவர்கள் தங்கிய வீடு ஓஷிமா சபையினருக்கு துணை மையமாக சேவித்தது.
மறுநாள் காலை 8:00 மணியளவில் தலைமைக் கிளைக்காரியாலயத்திலிருந்த கிளை செயற் குழு இஜு மற்றும் டோக்கியோ பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட இரண்டு பிரதிநிதிகளை உடனடியாக அனுப்பியது.
கிளைக் காரியாலய பிரதிநிதிகள் நிஷிமுராவுடன் நிவாரண பணி குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருக்கையில் மிட்சுவோ ஷியோஜாக்கி தன்னுடைய நுமஜு சபையிலிருந்து நிவாரண பொருட்களோடு வந்து சேர்ந்தார். அவர் அவர்களுக்குக் கொடுத்த உடைகளை இடம் மாறிவந்திருக்கும் அவர்கள் வெகுவாகப் போற்றினர், ஏனென்றால் அநேகர் தாங்கள் தீவை விடும்போது அணிந்திருந்த உடையைத் தவிர வேறு உடையின்றி இருந்தனர். அவர் கொண்டுவந்திருந்த உணவையும் அவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர்.
ஓஷிமா சபையின் அங்கத்தினருக்குத் தேவையான பண உதவியைப் பகிர்ந்தளிப்பதற்காக இஜுவிலும் டோக்கியோவிலும் நிவாரண செயற்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் அம்மக்களின் ஆவிக்குரிய தேவைகளையும் கவனிக்க வேண்டியதாயிருந்தது.
டோக்கியோவில் நிவாரணப் பணி
நவம்பர் 21-ம் தேதி மாலை 9:55 மணிக்கு கப்பல்கள் ஆட்களை இஜு தீபகற்பத்தில் இறக்கிவிட்டுத் திரும்பியதற்குப் பின்பு, அவர்கள் எல்லாரும் டோக்கியோவுக்கு அனுப்பப்படவேண்டும் என்று டோக்கியோ ஆளுனர் உத்தரவிட்டார். டோக்கியோவில் மிட்டா சபையில் ஒரு மூப்பராயிருந்த யோஷியோ நக்கமுரா, அங்கு நிவாரண பணியை ஒழுங்குபடுத்த கேட்டுக் கொள்ளப்பட்டார். நக்கமுராவின் வீடுதானே டோக்கியோவில் நிவாரண பணியின் தலைமைச் செயலகமானது.
அவர் தம்முடைய சபையிலிருந்தும் ஷினாகாவா சபையிலிருந்தும் சிலரைத் தம்முடன் செல்ல அழைத்திருந்தார். அவர்களில் பத்து பேர் நக்காமுராவின் வீட்டிலிருந்து சனிக்கிழமை காலை சுமார் இரண்டு மணியளவில் புறப்பட்டு ஓஷிமாவிலிருந்து வரும் கப்பல்களில் வருகிறவர்களைச் சந்திக்க புறப்பட்டனர். சகோதரர்கள் பின்வரும் வாசகத்தைக் கொண்ட அறிவிப்புகளை வைத்திருந்தனர்: “யெகோவாவின் சாட்சிகளின் ஓஷிமா சபை அங்கத்தினர்களே, தயவுசெய்து எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.”
கடைசி கப்பல் வந்துசேரும்வரை அவர்கள் கப்பல்கள் வந்த இடைகரைகளின் இரு பகுதிகளுக்கும் சென்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின்பு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு சுவோ சபையின் யெகோவாவின் சாட்சிகளும் ஓஷிமாவிலிருந்து வந்த கப்பலில் வந்தவர்களைச் சந்திக்க மறுகரைக்குச் சென்றனர். தங்களுடைய உடன் சகோதரர்கள் எந்தக் கப்பலில் வருகிறார்கள் என்பதை அறியாத நிலையில் டோக்கியோ சாட்சிகள் டோக்கியோவுக்கு வந்த எல்லா கப்பல்களையும் பார்த்தனர்.
“துறைமுகங்களில் தங்களுடைய உடன் விசுவாசிகளைச் சந்திக்க வந்த ஒரே மதத் தொகுதி யெகோவாவின் சாட்சிகளாகும்,” என்கிறார் கஜுயுக்கி கவாஷிமா. “கப்பலில் வந்தவர்களைச் சந்திக்க வந்த மற்ற ஒரே தொகுதி ஆசிரியர் யூனியனைச் சேர்ந்தவர்களாகும்.”
சனிக்கிழமை மாலைக்குள்ளாக மிட்டா மற்றும் ஷினகாவா சபைகளின் அங்கத்தினர்கள் ஓஷிமாவிலிருந்து வந்திருக்கும் தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களுக்கு உடனடியாக கொடுப்பதற்கு உடையையும் மற்ற நிவாரண தேவைகளையும் மனமுவந்து கொண்டுவந்தனர். சாட்சிகள் இந்தத் தேவைகளை ஒரு வாகனத்தில் ஏற்றி சாட்சிகள் தங்கியிருந்த இடங்களுக்கு எடுத்துச் சென்றனர். ஓஷிமாவிலிருந்து வந்த சாட்சிகளும் சாட்சிகளல்லாதவர்களும் இந்த நிவாரண பொருட்களிலிருந்து பயன்பெற்றனர்.
பிறர் காண்பித்த கரிசனையால் ஊக்குவிக்கப்பட்டனர்
பாதிக்கப்பட்ட ஒரு சாட்சி பின்வருமாறு சொன்னார்: “நாங்கள் ஓஷிமாவை விட்டபோது, எங்கே செல்கிறோம் என்பதை நாங்கள் அறியவில்லை. நாங்கள் கப்பலிலிருந்து இறங்கியதும் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற ஒரு அறிவிப்பு வாசகத்தைக் கண்டோம். நாங்கள் எவ்வளவு ஆச்சரியப்பட்டோம், அது எங்களை எவ்வளவாகக் கவர்ந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்! என்னுடைய மனைவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது, ஏனென்றால் எங்களைத் துறைமுகத்தில் சந்திக்க வந்த சகோதரர்களைப் பார்த்தது அவளுக்கு அவ்வளவு பெரிய விடுதலையாக இருந்தது.
“கோட்டோ வாட்டிலிருந்த உடற்பயிற்சி மன்றத்தில் சகலத்தையும் ஒழுங்குபடுத்தி சகோதரர் நக்காமுராவுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கொஞ்ச நேரத்திற்குள் எங்களை உற்சாகப்படுத்த கிளைக் காரியாலய பிரதிநிதிகள் வந்துவிட்டனர். இது எங்களை வெகுவாகக் கவர்ந்தது. எங்களுடைய போற்றுதலைத் தெரிவிக்க வார்த்தைகளில்லை.”
அந்த வாரத்தின்போது நிவாரண செயற்குழு அங்கத்தினர்கள் சாட்சிகள் தங்கியிருந்த சகல இடங்களையும் சந்தித்து தங்களுடைய உடன் சாட்சிகளின் தேவைகளைக் கவனித்துக்கொண்டனர். இடம்மாறி வந்திருக்கும் சாட்சிகளை உள்ளூர் சபைகள் நன்றாக கவனித்துக் கொள்வதை அவர்கள் பார்க்க முடிந்தது. பைபிளைப் படித்து வந்த சிலர் உள்ளூர் சாட்சிகளின் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் உணவுக்காக அழைக்கப்பட்டனர். அந்தச் சேதத்துக்கு முன்பு தாங்கள் பார்த்திராத சாட்சிகளின் இந்தத் தயவான செயல்களைப் போற்றினர்.
அந்தத் தீவின் குடிகளை வெளியேற்றும் செயல் வெற்றிகரமாக இருப்பதற்குக் காரணம் தகுந்த எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டன, மக்களும் அதற்கு செவிகொடுத்தனர். ஆனால் மனிதவர்க்கம் முழுவதுமே அதிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் அதைவிட மிகப் பெரியதோர் ஆபத்தை எதிர்படுகின்றனர். இந்த ஆபத்தைத் தப்பிப்பிழைத்து தங்கள் உயிரை எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை மக்களுக்கு காண்பிக்கும் எச்சரிப்புகள் இப்பொழுது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த எச்சரிப்புக்கு நீங்கள் செவிசாய்ப்பீர்களா? (g87 7⁄8)
[பக்கம் 7-ன் படம்]
ஜிரோ நிஷிமுரா உடன் விசுவாசிகளின் நிலைமை குறித்து அறிந்துகொண்டிருக்கிறார்*
[அடிக்குறிப்புகள்]
*அதிகமாக நேசிக்கப்பட்ட இந்த யெகோவாவின் சாட்சி பிப்ரவரி 1987-ல் இறந்தார்
[பக்கம் 8-ன் படங்கள்]
மிட்சுவோ ஷியோஜாக்கி நிவாரண பொருட்களை பகிர்ந்துகொடுக்கிறார்
தீவிலிருந்து வெளியேறியவர்களில் பலர் உடற்பயிற்சி அரங்குகளின் குளிர்ந்த தரைகளில் தூங்கினார்கள்