தங்க வாயில் பாலத்துக்கு 50 வயது
சிலர் அது இலேசான நிலநடுக்கம் என்பதாக எண்ணினார்கள்! ஆனால் இல்லை, 1987 மே 24 அன்று சான் பிரான்சிஸ்கோவின் தங்க வாயில் பாலத்தின் 50-வது ஆண்டு நிறைவு நாளுக்காக அதன் மேல் கூடிய 2,50,000 ஆட்களின் எடையும் நடமாட்டமும் காற்றோடு சேர்ந்து, அந்த பாலம் அசைந்தது அவ்விதமாக இருந்தது. கூடுதலாக, பாலத்தின் நுழைவு பாதையில் இன்னும் 5 லட்சம் ஆட்கள் கூடியிருந்தார்கள். பொறியாளர்கள் அந்த எடையை பாலம் தாங்கும் என்று அவசரமாக மதிப்பிட்டார்கள்.
4,200அடி முழு இடை நீளம் கொண்ட இந்த தங்க வாயில் 1937-ல் இது கட்டி முடிக்கப்பட்ட சமயத்தில் உலகின் மிக நீண்ட தொங்கற் பாலமாக இருந்தது. தண்ணீருக்கு மேல் 19 மாடி அளவு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையைக் கொண்ட இந்த பாலத்தின் கீழ் உலகின் மிக உயரமான கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும்.
80,000 மைல்கள் நீண்ட கம்பிகளைக் கொண்ட இரண்டு கம்பிவடங்களால் இந்த பாலம் தொங்கவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கம்பிவடங்களும் 3 அடி விட்டமும் 7,650 அடி நீளமும் 9 கோடியே 9 லட்சம் கிலோகிராம் இறுதியான விறைப்பாற்றலும் உடையதாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த திட்ட அமைப்பினாலும் தொடர்ந்த பராமரிப்பினாலும் இந்தப் பாலம் இன்னும் 200 ஆண்டுகள் நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
(g87 11⁄8)