இளைஞர் கேட்கின்றனர்
அம்மா அப்பாவுக்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
போக்குவரத்து அதிகமாயிருந்த, ஆறு சாலைகள் சந்திக்கும் நெடுஞ்சாலைக்குப்போகும் பாதையின் வழியை அடைப்பதற்காக வேலியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குழிக்கு முன்பாக ஜானும் அதே பள்ளியில் படிக்கும் இரண்டுப் பெண்களும் வந்து நின்றார்கள். இந்த இரண்டு பெண்கள் வீட்டைச் சீக்கிரமாக அடைவதற்காக, கார்கள் வேகமாக வேகமாக கடந்துப் போய்க் கொண்டிருந்த தெருவில் குறுக்கே ஓட தயாரானார்கள்.
“வா ஜான், நீ எங்களோடுத் தானே வருகிறாய், இல்லையா?” என்பதாக அந்தப் பெண்கள் இவனை அவசரப்படுத்தினார்கள். அவர்கள் பின்னால் போக ஜான் அடியெடுத்து வைத்தான். “அப்பொழுது நெடுஞ்சாலையில் ஒரு போதும் குறுக்காகப் போகக்கூடாது என்றும் பாதசாரிகளுக்குரிய வழியை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் என்றும் என்னுடைய அம்மாவும் அப்பாவும் சொன்னது என் ஞாபகத்துக்கு வந்தது.”
ஜான் தயங்குவதைப் பார்த்து பெண்களில் ஒருத்தி, “நீ ஒரு கோழை!” என்பதாக ஏளனமாகச் சொன்னாள். இந்த வார்த்தைகள் ஆழமாக அவனைக் குத்தியது. சிறிதும் பயப்படுகின்ற சுபாவமில்லாத ஜானுக்கு இரண்டுப் பெண்கள் அவனை வெளிப்படையாக இப்படி பேசியது எரிச்சலாக இருந்தது.
‘நான் ஜானாக இருந்திருந்தால், நான் என்ன செய்திருப்பேன்?’ என்பதாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களுடைய சவாலை அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் வயதிலுள்ள மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட வேண்டியிருக்கும். அருகில் வராத அவனுடைய. பெற்றோரின் உத்தரவே தடையாக இருந்தது.
இதே போலவே உங்கள் பெற்றோரும்கூட நீங்கள் கீழ்ப்படியும்படி அவர்கள் எதிர்பார்க்கும் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கலாம். சுத்தம், வீட்டுப்பாடம், விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொழுதுபோக்கு ஆகியவை மட்டுமல்லாமல் நடத்தை மற்றும் ஒழுக்க சம்பந்தமாகவும்கூட அவர்கள் கட்டளைகளை விதிக்கலாம். ஆனால் சில சமயங்களில் இளைஞர்கள் பெற்றோரின் கட்டளைகளை மீறும்படியாக தூண்டப்படுகிறார்கள். ஆனால் யோசித்துப் பாருங்கள் . . .
பெற்றோர்கள் ஏன் கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள்?
“என் மகனே (அல்லது மகளே) என் கட்டளைகளை காத்துக் கொண்டு பிழைத்திரு” என்று ஞானமுள்ள பெற்றோர் ஒருவர் எழுதினார். (நீதிமொழிகள் 7:1, 2) ஆம், பெற்றோரின் சட்டங்கள், “கட்டளைகள் உங்கள் நலனைக் கருதி கொடுக்கப்படுகின்றன. அவை உங்கள் பெற்றோரின் உண்மையான அன்பின் மற்றும் அக்கறையின் வெளிக்காட்டல்களாகும். உண்மையில் உறுதியான கட்டுப்பாடுகளும் கட்டளைகளும் இல்லாதபோது, அது பாதுகாப்பற்ற உணர்வை உண்டுபண்ணுகிறது.
உதாரணமாக, ஒரு இளைஞன் பின்வருமாறு எழுதினான்: “என்னுடைய வீட்டில் எதைச் செய்தாலும் என்னை கண்டிக்கமாட்டார்கள். அநேக பிள்ளைகள் தாங்கள் விரும்பிய எதையும் செய்ய பெற்றோர் அனுமதிப்பதை வெகுவாக விரும்புவார்கள். இல்லை. அது தமாஷாக இல்லை. அது என்னை குற்றமுள்ளவனாகவும் கேடானவனாகவும் உணரச் செய்கிறது. என்றாவது ஒரு நாள் மிக மோசமான எதையாவது செய்துவிடுவேனோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. அதை நினைத்துப் பார்க்கவே எனக்கு நடுக்கமாக இருக்கிறது.” பயப்படுவதற்கு இந்த இளைஞனுக்கு நல்ல காரணமிருக்கிறது. சிலருடைய விஷயத்தில், அவசியமான கட்டுப்பாடுகளை விதிக்க பெற்றோர் தவறியபோது, அது மரணத்துக்கு வழிநடத்தியிருக்கிறது.
உதாரணமாக ஒரு இளைஞன், தன்னுடைய அப்பாவின் காரை மூன்று முறை விபத்திற்குள்ளாக்கிவிட்டிருந்தான். விபத்துக்களைப் பற்றி கேள்விப்பட்டபோது, அவனுடைய அப்பாவின் பணி மேற்பார்வையாளர், “உன்னுடைய மகனால் கார் ஒட்டிச் செல்லமுடியாது என்பது தெளிவாக இருக்கிறது” என்று சொன்னார். “உங்கள் காரை தொடர்ந்து பயன்படுத்த ஏன் அவனை அனுமதிக்கிறீர்கள்?” அவன் கார் ஓட்டிச் செல்வதை தடை செய்வதன் மூலம் மகனின் உணர்ச்சிகளை தான் புண்படுத்த விரும்பவில்லை என்பதாக அப்பா பதிலளித்தார். ஆகவே, மறுபடியுமாக பையனிடம் காரின் சாவியை கொடுத்தார்—இது கடைசி தடவையாக இருந்தது.
மகன் காரை எடுத்துச் சென்று இருபது நிமிடங்களான பின்பு அப்பாவுக்கு காவல் துறையிலிருந்து அழைப்பு வந்தது. உடனே புறப்பட்டு வந்து உருக்குலைந்துகிடந்த அவருடைய மகனை அடையாளங்காட்டும்படி அவர்கள் சொன்னார்கள். காவல் துறையின்படி அவருடைய மகன் மணிக்கு 100 மைல் வேகத்தில் வந்து ஒரு தொலைப் பேசி கம்பியின் மீது மோதிவிட்டிருந்தான்! “நான் அவனை தடுத்திருக்க வேண்டும்” என்பதாக அப்பா அப்பா புலம்பினார். “நான் மட்டும் கண்டிப்பாக இருந்திருந்தால், அவன் இன்று உயிரோடிருப்பான்.”
ஆனால் சட்டதிட்டங்கள் வெறுமனே தீமையிலிருந்து உங்களை பாதுகாப்பதைக் காட்டிலும் அதிகம் செய்கிறது. வீட்டு வேலைகளையும் பள்ளி வீட்டுப்பாடங்களையும் செய்யும்படியாக உங்களுக்கு உத்தரவிடுவதன் மூலம் கடினமான வேலையைச் செய்ய உங்கள் பெற்றோர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். இது எவ்வளவு முக்கியமானது? இளமைப் பருவத்தின்போது வேலை செய்வதற்கான திறமையை வளர்த்துக் கொண்டவர்களோடு அவ்விதமாகச் செய்யாதவர்களை ஒப்பிட 456 பருவ வயது பையன்களை வைத்து ஆராய்ச்சி ஒன்று செய்யப்பட்டது. பையன்கள் வழக்கமாக வீட்டு வேலைகளைச் செய்து பள்ளி நடவடிக்கைகளில் நன்றாக கலந்துக் கொண்டார்களா போன்ற காரியங்களை ஆய்வாளர்கள் வனத்தில் எடுத்துக் கொண்டனர். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் சந்திக்கப்பட்டனர்.
வேலையில் திறமையுள்ளவர்களாக மதிப்பிடப்பட்ட பையன்கள், அவ்விதமாக மதிப்பிடப்படாதவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக பல்வேறு ஆட்களோடு நல்ல உறவுகளைக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களுடைய வேலைக்காக அவர்கள் ஐந்து மடங்கு அதிக ஊதியம் பெறுவதும் தெரியவந்தது. மறுபட்சத்தில், இளம் பிரயாயத்தின்போது வேலையில் அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லாதவர்கள் பத்து மடங்கு அதிகமாக உணர்ச்சிப்பூர்வமாக ஊனமுற்றிருப்பதும் ஆறு மடங்கு அதிகமாக 47 வயதுக்குள் மரித்துவிடுவது தெரிய வந்தது! இதன் காரணமாக, வீட்டு வேலைகள் மற்றும் பள்ளிப்பாடங்கள் சம்பந்தமாக உங்கள் பெற்றோரின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிதல், உங்கள் மீதமுள்ள வாழ்நாள் முழுவதிலும் பிரயோஜனமாயிருக்கும்.
கீழ்ப்படிதல் கடினமாயிருக்கையில்
சில நேரங்களில் வெறுமனே கவலையீனமாயிருத்தலே ஒரு சட்டத்தை மீறுவதற்கு வழிநடத்தக்கூடும். அப்போது சட்டதிட்டங்களைக் குறித்து உங்களுக்கு நீங்களே நினைப்பூட்டிக் கொள்வது அவசியமாகலாம். மேலுமாக அதிகமாக சலுகைத்தரும் மற்ற பெற்றோர்களை கவனிக்கையில், ‘நானும் ஏன் செய்யக்கூடாது’ என்பதாக உங்களுக்கு சிந்திக்க தோன்றலாம். உங்களுக்கு எது சிறந்தது என்பதை உங்கள் பெற்றோரே தீர்மானிக்கவேண்டும். மற்ற பெற்றோர்கள் அதிகமாக சலுகைத் தருபவர்களாக இருந்தால் அவளும் அவர்களுடையப் பிள்ளைகளும் கடைசியாக கவலைக்குரிய பிரச்சினைகளை அறுவடைச் செய்வார்கள். ஏனென்றால் “மனுஷன் எதை விதைக்கிறானோ அதை அறுப்பான்”. (கலாத்தியர் 6:7, 8) அதையே நீங்களும் ஏன் கேட்டு அறுவடை செய்ய வேண்டும்?
சில சமயங்களில் நியாயமற்றதாக நீங்கள் கருதும் ஒரு சட்டத்தை ஒரு பெற்றோர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் போடலாம். அப்பொழுது அதை மீறுவதே மனசாய்வாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சட்டம் ஏன் நியாயமற்றது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை சரியான ஒரு சமயத்தில் விளக்கி உங்கள் பெற்றோரிடம் உங்கள் உணர்ச்சிகளை ஏன் வெளியிடக்கூடாது. இரு சாராரும் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய சட்டத்தை நீங்கள் மனதில் வைத்திருப்பது அதிக பயனுள்ளதாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் மற்றவர்களின் விஷயத்தில் கீழ்படியாமைக்கு கரணம் பழிவாங்கும் எண்ணமாக இருக்கிறது.
தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதிலேயே முழுவதுமாக ஆழ்ந்துபோய் அக்கறையில்லாமலிருந்த ஒரு பெற்றோரின் 17 வயது பெண் உணர்ச்சிப்பூர்வமாக ஆதரவற்றவளாக உணர்ந்தாள். பெற்றோரின் மீது கோபங்கொண்ட அவள், அவளுடைய பெற்றோர் அறிவுறித்திவந்த பைபிள் நியமங்களை மீற தீர்மானித்தாள். இரயில் பிரயாணத்தில் பழக்கமேற்பட்ட ஒரு மனிதனோடு அவள் வேசித்தனஞ் செய்துவிட்டாள். “என் பெற்றோருக்கு இது போன்ற ஒன்று வேண்டும்” என்பதாக அவள் பின்னால் சொன்னாள். ஆனால் பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டதன் மூலம், அவள் தானே உண்மையில் நஷ்டமடைந்தாள். ஏனென்றால் அவளுடைய கோபம், வடுபட்ட ஒரு மனசாட்சிக்கு வழிநடத்தியது. அதற்குப் பின்பு, பள்ளி வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமலும் போதை மருந்துகளை துர்ப்பிரயோகம் செய்வதிலும் அவைகளை விற்பதிலும் ஈடுபடலானாள்.
நீதிமானாகிய யோபு பின்வருமாறு எச்சரிக்கப்பட்டான்: “உக்கிரமானது பழிவாங்கும்படிச் (செயல்களை) செய்யாதபடிக்கு கவனமாயிரும் . . . அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்.” (யோபு 36: 18-21, NW) பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகையில் சற்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள்: ‘நான் கீழ்ப்படியாமல் போவதால் என்னத்தை சாதிக்கப் போகிறேன்? என் பெற்றோரை பழிவாங்க சட்டங்களை நான் மீறினாலும் கூட, என்னுடைய உணர்ச்சிகள் அடங்கியப் பின்னும் கூட வாழ்நாள் முழுவதும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களோடு நான் வாழ வேண்டுமா?’ பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுவதற்கு பதிலாக, மூர்க்கமாக அல்ல, அமைதியாக இருக்கவே இது சமயமாக இருக்கிறது.
கடைசியாக, இளைஞர்கள் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் சமயம் வளரிளமைப் பருவமே. “நீங்கள் என்னை குழந்தையைப் போல நடத்துகிறீர்கள். என்னுடைய சொந்த வீட்டுப்பாடம், அறை, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், தோற்றம், நண்பர்கள், மற்றும் படுக்கும் நேரம் சம்பந்தமாக பொறுப்பேற்றுக்கொள்ள ஏன் என்னை அனுமதிக்கக்கூடாது?” அநேக இளைஞர்கள் சொந்தமாக கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முழுமையாக திறமையுள்ளவர்களாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஜான் கீழ்ப்படிதலின் மதிப்பைக் கற்றுக் கொண்டான்.,
கீழ்ப்படிதலின் மதிப்பு
“நீங்கள் என்னை ‘கோழை’ என்றழைத்தாலும் நான் கவலைப்படமாட்டேன்” என்று ஜான் இரு பெண்களிடமும் சொன்னான். “நான் என் அம்மாவின் சொல்லுக்கு கட்டாயமாக செவி கொடுக்க வேண்டும்.” பெண்கள் சாலையின் குறுக்கே பாய்ந்த போது ஜான் கீழ்ப்படிதலுடன் பாதசாரிகளுக்குரிய வழியில் சென்றான். கடந்து செல்கையில் அவன் டையர்களின் கிறீச்சொலி கேட்டு திரும்பினான். இரு பெண்களும் கீழேத் தள்ளப்பட்டு காற்றில் தூக்கி எறியப்பட்டிருந்தார்கள். ஒருத்தி அடுத்தப் பக்கம் போய் விழ அவள் மீண்டுமாக தள்ளப்பட்டு உயிரிழந்துவிட்டாள். அவளுடைய தங்கையின் கால் நசுக்கப்பட்டு, பின்னால் அது வெட்டி எடுக்கப்பட்டது.
இந்த விபத்து, ஜானுக்கு அவனுடைய சொந்த அனுபவம் எத்தனைக் குறைந்தது என்பதை நினைவுபடுத்தியது. இரண்டு பெண்கள் உட்பட அநேக இளைஞர்கள் எந்த ஆபத்துமின்றி சாலையில் ஓடி அதைக் கடப்பதை அவன் பார்த்திருக்கிறான். என்றபோதிலும் அவனுடைய அம்மாவுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவளுடைய சிநேகிதிகளில் ஒருத்தியின் பிள்ளை அதே சாலையைக் குறுக்கே கடந்து போக முயன்றபோது கொல்லப்பட்டது தெளிவாக நினைவிலிருந்தது. அவளுடைய கூடுதலான அனுபவத்தின் காரணமாக தன்னுடைய மகனை பாதுகாக்க சில சட்ட திட்டங்களை அவள் போட்டிருந்தாள்.
ஜானின் அம்மா தெல்மா, பின்னால் பெண்களின் தாயை சந்தித்து ஆறுதல் சொல்லப் போனாள். துக்கத்திலிருந்த தாய் சொன்னதாவது: “பாதசாரிகளுக்குரிய வழியை பயன்படுத்துமாறு எப்பொழுதும் நான் பெண்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எப்படியும் அவ்வழியாக போக அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள். உங்கள் மகனைப் போல கீழ்ப்படிதலுள்ளவர்களாக அவர்கள் இருந்திருக்கக்கூடாதா என்று எனக்கிருக்கிறது.” ஆம், ஜானின் கீழ்ப்படிதல் அவன் உயிரைக் காப்பாற்றியது.
நிச்சயமாகவே, பெற்றோர் விதிக்கும் கட்டளைகளை மீறுவது எப்போதும் ஜீவன் அல்லது மரணத்தைக் குறிப்பிடுவதாக இல்லை. கொஞ்சம் சாமார்த்தியத்தோடு, உண்மையில் உங்கள் பெற்றோர் விதிக்கும் ஒவ்வொரு கட்டளையிலும் சில சமயங்களில் நீங்கள் ஏமாற்றிவிடக்கூடும். ஆனால் சிறிய விஷயங்களில் கீழ்ப்படியாமை மாற்றுவதற்கு கடினமான ஒரு வழக்கத்தையே உருவாக்கிவிடக்கூடும். ஒருவருடைய இருதயம் தவறு செய்வதில் கடினமாகிவிடக்கூடும்.—பிரசங்கி 8:11.
ஜானின் கீழ்ப்படிதல் அவனுடைய பெற்றோர் கவனித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதன் பேரில் சார்ந்ததாக இல்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட கீழ்ப்படிதல் கடவுளின் கட்டளையாக இருப்பதை அவன் அறிந்திருந்தபடியால், அவரைப் பிரியப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்மனசாட்சியை அவன் கொண்டிருக்க விரும்பினான். (எபேசியர் 6:1) இந்தக் கீழ்ப்படிதல் இருதயத்திலிருந்து வர வேண்டும். ஞானமான ஒரு பெற்றோர் தன் பிள்ளையிடம் சொன்னதாவது: “உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக் கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள் அப்பொழுது பிழைப்பாய்”—நீதிமொழிகள் 4:4. (g88 1/8)
[பக்கம் 20-ன் படம்]
உங்கள் பெற்றோரின் சட்டங்களை நீங்கள் எவ்விதமாக கருத வேண்டும்?