பிரபஞ்சம் சிருஷ்டிப்பா அல்லது தற்செயல் நிகழ்வா?
பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டதா அல்லது அது தற்செயலாக வந்ததா என்பது பற்றி தொடர்ந்து செய்யப்பட்டுவரும் விவாதத்தில் க்ரேட் பிரிட்டனிலுள்ள நியு காஸல் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டியல் பெளதிக பேராசிரியர் பால் டேவிஸ் எழுதிய கடவுளும் புதிய பெளதிகமும் (God and the New Physics) என்ற புத்தகத்தின் பின்வரும் குறிப்புகள் வெகுவாக சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது:
“பிரபஞ்சம் வெறுமென ஒரு விபத்தாக இருக்குமானால், அதில் கணிசமான ஒழுங்கு இல்லை என்பதற்குரிய சாத்தியங்கள் பொருத்தமில்லாதவகையில் மிகவும் சிறியதாக இருக்கின்றது. . . . தெளிவாகவே இது இவ்விதமாக இல்லாததன் காரணமாக பிரபஞ்சத்தின் உண்மையான இயற்கூறு எப்படியோ கிடைக்கக்கூடியதாக இருந்த அநேக பல இயற்கூறுகளிலிருந்து ‘தெரிவு’ செய்யப்பட்டு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்ப்பது கடினமாகத் தோன்றுகிறது. இவற்றில் மிக நுண்ணிய ஒரு பின்னம் மாத்திரமே முற்றிலும் ஒழுங்கற்றதாக உள்ளது. இப்படியாக அசாதாரணமான நம்புதற்கரிதான ஆரம்ப இயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாகவே அங்கு அதைத் தெரிவு செய்ய ஒரு தேர்ந்தெடுப்பாளர் அல்லது திட்ட அமைப்பாளர் இருந்திருக்க வேண்டும்.”
உண்மையாகவே, கட்டுகிற ஒருவர் தன்னுடைய நோக்கத்தின்படி எதையோ கட்டுவதற்கு ஒரு வடிவமைப்பையும் மூலப் பொருட்களையும் தேர்ந்தெடுப்பது போலவே, யெகோவா என்ற பெயரைத் தாங்கிய சர்வ வல்லமையுள்ள கடவுள் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தார். (சங்கீதம் 83:17; வெளிப்படுத்துதல் 4:11) ஆம், பேராசிரியர் டேவிஸின் முடிவு எபிரெயர் 3:4-லுள்ள அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (g88 3⁄8)