“நான் அவர்களில் ஒருவரும் பொய்ச்சொல்லக் கேட்டதில்லை”
வண்டிகள் நிறுத்தும் இடத்தில் அத்துமீறலுக்காக உள்ளூர் புரூக்ளின் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்ற உத்தரவு ஒன்றை மைக் என்பவர் பெற்றார். அந்த நீதிமன்ற உத்தரவில் அவருடைய லைசென்ஸ் தட்டின் எண் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், குற்றத்திற்காக குறிக்கப்பட்ட நேரத்தில் காவற்கோபுர தலைமைக் காரியாலயத்தில் அவர் வேலையில் இருந்தார் என்பதை மைக் அறிந்தார். மேலுமாக, அவருடைய கார் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தத் தெரு இருக்கும் இடமும்கூட அவருக்குத் தெரியாது. ஆகவே அவர் இந்த அபராதத்திற்கெதிராக மனுசெய்ய தீர்மானித்தார்.
அவர் ஒழுங்காக உடையணிந்து நீதிமன்றத்தில் ஆஜராயிருந்தபோது, நீதிமன்ற உத்தரவை நரைத்த முடிகொண்ட வயதான நீதிமன்ற குமாஸ்தாவிடம் கொடுத்தார். பிறகு நீதிபதிக்கு முன்பாக அழைக்கப்பட்டு, இருக்கையில் அமரும்படி மைக்கிற்குச் சொல்லப்பட்டது. அச்சமயத்தில் குமாஸ்தா நீதிபதியிடம் கேட்டார்: “கனம் நீதிபதியவர்களே, வெறுமென இவரைப் பார்ப்பதன் மூலமாக, இவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று நீங்கள் அறிவீர்களா?” நீதிபதி பதிலளித்தார்: “நான் அறியவில்லை . . . இவர் ஒரு கத்தோலிக்கராக இருக்கலாம்.” ஒருவேளை மைக்கின் போர்ச்சுகீஸிய குடும்ப பெயரால் அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பார். குமாஸ்தா சொன்னார்: “இல்லை. வெறுமென இவரைப் பார்ப்பதன் மூலமாக, இவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்று நீங்கள் சொல்லக்கூடும். உண்மையில், இவர் கதவினுள் நுழைந்தவுடனே, இவர் ஒரு சாட்சி என்பதை நான் அறிந்தேன், இவருடைய முகவரியும் இதை உறுதிசெய்தது!”
பிறகு சிநேகப்பான்மையான நீதிபதி நீதிமன்ற உத்தரவின்மீதான உண்மைகளைக் குறித்து, மைக்கிடம் கேள்விகேட்க ஆரம்பித்தார். அந்த விவரிப்பு மைக்குடைய காருக்கு ஒத்திருந்தது, ஒரு விவரத்தைத் தவிர—கார் உருவில் எந்த மாதிரியைச் சார்ந்தது என்பது காணப்படாதிருந்தது. குமாஸ்தா நீதிபதியிடம் சொன்னார்: “அவர் வைத்திருக்கும் கார் எத்தகையது என்று அவரிடம் கேளுங்கள்.” தன்னுடைய பதிவு செய்த ரசீதைக் கையில் கொண்டு, மைக் மரியாதையோடு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அந்த அபராத சீட்டு முழுமையான அத்தாட்சியைத் தராததால் ரத்துசெய்யப்பட்டது. அப்போது நீதிமன்றத்தின் குமாஸ்தா மேலுமாக பேசுவதற்கு அனுமதி கேட்டார்.
அவர் சொன்னார்: “கனம் நீதிபதியவர்களே, நான் உங்களுக்கு முன்பாகவும் இங்குள்ள எல்லாருக்கு முன்பாகவும் சொல்ல விரும்புகிறேன்—30 ஆண்டுகளாக நான் யெகோவாவின் சாட்சிகளை அறிந்திருக்கிறேன். ஒருவரும் பொய் பேசுவதை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. இது அவருடைய அபராத சீட்டு அல்லவென்று சொன்னபோது, நான் அவரை நம்பினேன், அது அவருடைய கார் அல்லவென்பதற்கு இதுவே அத்தாட்சியாக இருக்கிறது. நான் உண்மையிலேயே இந்த ஜனங்களை மதிக்கிறேன். அவர்கள் நல்ல ஆட்கள், உண்மையைப் பேசும் ஆட்களை நான் விரும்புகிறேன்.”
அவர் தொடர்ந்து சொன்னார்: “ஒரே ஒரு காரியத்தில் நான் அவர்களோடு ஒத்துக்கொள்வதில்லை—நான்தான் சரி என்று சொல்வதில்லை.” மைக்கிடம் திரும்பி, அவர் சொன்னார்: “அநேகமாக நீங்கள் சரியாக இருக்கலாம், நான் தவறாக இருக்கலாம். இது இரத்தமேற்றுதல் மீதான உங்களுடைய நம்பிக்கை.”
மைக் பதிலளித்தார்: “நீங்கள் விரும்பினால், இரத்தமேற்றுதல் மீதான எங்களுடைய நிலைநிற்கை சம்பந்தமாக சில தகவல்களை நான் உங்களுக்கு கொண்டுவருவேன்.” குமாஸ்தா கனிவான விதத்தில் மறுத்தார். ஆனால் ஆஜராயிருந்தவர்களில் ஒரு பெண் பேசினாள்: “இரத்தமேற்றிக் கொள்வது மதிப்புள்ளதாக இல்லை. இந்நாட்களில் இதன் மூலம் ஒருவர் ஏய்ட்ஸ் நோயைப் பெறக்கூடும்.” நீதிமன்றத்திலிருந்த ஒவ்வொருவரும் தலையசைத்து சம்மதித்தனர் அல்லது அதை ஆதரித்து பேசினர்—மைக் பிரச்னையிலிருந்து விடுபட்டவராக மகிழ்ச்சியுடன் வெளியேறினார். (g88 8⁄8)