“புகைக்காதீர்” பகுதியிலும் உடல்நல அபாயம்
அமெரிக்க மருத்துவக் கழகப் பத்திரிகை (JAMA) பிப்ரவரி 10, 1989 இப்படியாக அறிக்கை செய்தது: “தேசிய அறிவியல் கல்வித்துறை, பிறர் புகைத்து வெளியிடும் புகையை உட்கொள்வதன் பேரில் செய்திக் குறிப்புகளை மறு ஆய்வு செய்தது . . . , குறிப்பாக விமானப் பயணத்தின் போது நிலவும் சூழலை கருத்திற்கொண்டு.” அது பரிந்துரைத்தது: “நான்கு முக்கியக் காரணங்களுக்காக எல்லா உள்நாட்டு விமானப் பயணங்களிலும் புகைத்தல் தடை செய்யப்பட வேண்டும்: எரிச்சலைக் குறைப்பது, உடல்நலத்துக்கு ஆபத்தைக் குறைப்பது, தீப் பிடிக்கும் அபாயத்தைக் குறைப்பது, மற்றும் மூடியுள்ள மற்ற இடத்துச் சூழலின் தராதரத்துக்கு இணையாக விமான அறையின் தரத்தை நிலைப்படுத்துவது.”
அந்தக் கல்வி நிறுவனத்தின் ஆழ்ந்த ஆய்வு வெளிப்படுத்தினதாவது: “விமான பயணத்தின் போது நிக்கோடீனுக்கு வெளியாகுதலின் அளவைத், தனிப்பட்ட விதத்தில் அதற்கு வெளியாகும் அளவை நிர்மானிக்கும் கருவிகொண்டு பார்த்தபோது, அது மாறுபடுவது காணப்பட்டது, புகைக்கக்கூடாத பகுதிகளும் புகைக்கப்படும் பகுதிகளில் காணப்படும் அளவை எட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புகைக்கக்கூடாத பகுதிகளில் பணிபுரிய நியமிக்கப்படும் பணியாட்களும் புகைக்கு வெளியாவதிலிருந்து காக்கப்படுவதில்லை.”
அந்த ஆய்வு மேலும் காண்பித்ததாவது: “காற்றில் நிக்கோடீன் அளவு பெருமளவில் வித்தியாசப்பட்டது, புகைக்கக்கூடாத பகுதிகளில் அதன் அளவு, புகைக்கப்படும் பகுதிகளைவிட அதிகமாயிருந்தது.” அது வாசகருக்கு நினைவுபடுத்தியது என்னவென்றால், “எதிர்ப்பு தெரிவிக்காத அல்லது தன் விருப்பின்றி புகைத்தலுக்கு இடங்கொடுக்கும் புகைக்காதவர்களின் உடல் நலக்கேடு நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களை உட்படுத்துகிறது.”
அந்தக் கழகத்தின் (JAMA) அதே இதழ் நிக்கோடீனின் அடிமைப்படுத்தும் வல்லமையை உறுதிப்படுத்திய ஓர் ஆய்வின் பேரில் அறிக்கை செய்ததாவது: “போதை மருந்தை சார்ந்துள்ள நிலைக்காக சிகிச்சைப் பெற வருவோர், தங்கள் முக்கியப் பிரச்னைப் பொருட்களைப் [மதுபானம், கோக்கேன், ஹெராயின்] போலவே அல்லது அதைக் காட்டிலும் அதிகமாக சிகரெட்டுக்கான அவா இருப்பதாகவும் புகைத்தலை விட்டுவிடுவது கடினமாக இருப்பதாகவும் கருதுகிறார்கள்.”
கானடா 1987-ல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்த விமான பயணங்களின்போது புகைப்பதன்மீது தடையை அமல்படுத்தியது. கானடாவின் இரு பெரிய விமான நிறுவனங்களும் இன்னும் ஒரு படி மேல் சென்று தங்களுடைய எல்லா வட அமெரிக்க பயணங்களிலும் புகைத்தலைத் தடை செய்துள்ளது. ஐக்கிய மாகாணங்களில் குடியரசுச் சட்டம் குறைந்த தூர விமான பயணம் எல்லாவற்றிலுமே புகைத்தலை தடை செய்துள்ளது. மற்றும் “ஓர் ஐ.மா. விமான நிறுவனம் ஹவாய்க்குச் சென்றுவரும் பயணத்தைத் தவிர ஐக்கிய மாகாணங்களில் மற்ற எல்லாப் பயணங்களிலும் புகைத்தலைத் தடைசெய்துள்ளது.” இன்னும் அதிகமதிகமான விமான நிறுவனங்கள் புகைக்கக்கூடாது என்ற இதுபோன்ற கொள்கைகளைப் பொருத்திடுகையில், அவை விமானப் பயணத்தின் கேடுகளைக் குறைப்பதற்கு உதவுகிறவையாக இருக்கும். (g89 7⁄22)