உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 12/8 பக். 5-6
  • ஆரோக்கியம் என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆரோக்கியம் என்றால் என்ன?
  • விழித்தெழு!—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆரோக்கியமும் வாழ்க்கைப் பாணியும்
  • உங்கள் விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • நல்ல ஆரோக்கியம் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1990
  • நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம்?
    விழித்தெழு!—1990
  • உடல்நல பராமரிப்பில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 12/8 பக். 5-6

ஆரோக்கியம் என்றால் என்ன?

உடல்நலம் குன்றியவராக ஒரு நபர் உணருவதில்லை என்ற காரணத்தினால் அவர் உண்மையில் நல்ல ஆரோக்கியமுள்ளவராக இருக்கிறாரா? சரி, குறையே இல்லாமல் உடற்கட்டுடையத் தோற்றத்துடன் இருந்தவர்கள் திடீரென்று ஏதோ எதிர்பாராத ஒரு காரணத்தால் மரித்துப் போனதைப் பற்றிய எத்தனை சம்பவத்தை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? ஆண்டுதோறும் இருதய நோயால் மரிப்பவர்களில், ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கானவர்கள், அவர்களில் எந்தக் கோளறும் இருப்பதற்குச் சிறிதளவு அறிகுறியையும்கூட காண்பிக்கவில்லை என்பதை அறிக்கைகள் காண்பிக்கின்றன. நலமாக அல்லது உடல்நலம் குன்றாமலும் இருப்பதாக உணருவதுதானே ஒருவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.

உதாரணத்துக்கு 22 வயது நிரம்பிய கல்லூரி கூடைப்பந்தாட்ட வீரனை எடுத்துக்கொள்ளுங்கள். பொதுவான எல்லாத் தராதரங்களின்படியும், அவன் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருக்கும் ஆரோக்கியமுள்ள நபர் என்பதாகக் கருதப்படுவான். ஆனால் ஒரு நாள் இரவு அவன் மரித்துப்போனான்—திடீரென்று. மரணத்துக்குக் காரணம் அளவுக்கு அதிகமான போதப் பொருள் என்பதை சோதனைகள் வெளிப்படுத்தின. சரீரப்பிரகாரமாக அவன் உச்சஉயர்நிலையான உருவில் இருந்தபோதிலும் அவன் ஆரோக்கியமுள்ள வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தானா? நிச்சயமாகவே இல்லை.

அப்படியென்றால், உண்மையில் ஆரோக்கியம் என்பது வெறுமென நோயுறாமல் இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது. நிச்சயமாகவே இதில் பரம்பரையும் சுற்றுப்புறச்சூழலும் பங்கேற்றுச் செயலாற்றுகின்றன. ஆனால் இயல்பான சூழ்நிலைமைகளின் கீழ், நம்முடைய வாழ்க்கை முறையே, நம்முடைய ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்தும் தனியொரு அதிமுக்கியமான காரியமாகும். நாம் என்ன சாப்பிடுகிறோம், குடிக்கிறோம், நாம் எத்தனை சுறுசுறுப்பாக இருக்கிறோம், நமக்கு எவ்வளவு ஓய்வு கிடைக்கிறது, அழுத்தத்துக்கு நாம் எவ்விதமாகப் பிரதிபலிக்கிறோம், இன்னும் மற்ற அநேக தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தவோ அல்லது சேதப்படுத்தவோக்கூடும். இதன் காரணமாக நம்முடைய ஆரோக்கியம் என்பது நாம் அதைக் குறித்து என்ன செய்கிறோம் என்பதையே பொருத்திருக்கிறது. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற பைபிள் நியமம், நம்முடைய சரீர ஆரோக்கியத்துக்கும்கூட நன்றாகவே பொருந்துகின்றது.—கலாத்தியர் 6:7.

ஆரோக்கியமும் வாழ்க்கைப் பாணியும்

உதாரணமாக, பெரிய ஜப்பானிய கம்பெனிகளில் தொழிலாளிகள், ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக உடற்பயிற்சியைத் தவறாமல் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். விளைவு? “ஜப்பானியத் தொழிலாளிகளே உலகில் மிகவும் ஆரோக்கியமுள்ளவர்கள் என்ற கருத்துக்கு கணிசமான புள்ளிவிவர அத்தாட்சி சிறப்புச் சேர்ப்பதாக இருக்கிறது” என்கிறது செய்தி பத்திரிகை ஏஷியாவீக். மறுபட்சத்தில், “ஜப்பானில் நான்கில் ஒரு மரணத்துக்குப் புற்றுநோயும்; ஐந்தில் ஒரு மரணத்துக்கு மாரடைப்பும் வலிப்பும்; பன்னிரண்டில் ஒரு மரணத்துக்குச் சுவாசம் சம்பந்தப்பட்ட நோயும் காரணமாயிருப்பதையும்” அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது. “ஒவ்வொரு 52 பேரில் ஓர் ஆண் (பெண்களில் 70 பேரில் ஒருவர்) தற்கொலை செய்துகொள்கிறார்.”

இந்தக் கூற்றுகள் முன்னுக்குப் பின் மாறுபட்டதாக அல்லது முரணாகவும்கூடத் தோன்றுகிறதா? உண்மைகளை ஆராய்கையில், நிச்சயமாகவே அது அவ்விதமாக இல்லை. வயதுவந்தப் பெரியவர்களில் 40 சதவிகிதத்தினர் ஆண்டுக்கு 30 கோடி சிகரெட்டுகளை ஊதித்தள்ளுவதன் காரணமாக ஜப்பான் (கிரீஸுக்கு அடுத்ததாக) சிகரெட் நுகர்வில் உலகில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. மேலுமாக ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய ஆண்கள் 800 கோடி புட்டிகள் பியர்களையும் 1.6 கோடி கால் காலன் அளவு தோப்பியையும் குடிக்கிறார்கள். இது ஒரு மனிதன் ஒரு வாரத்துக்கு ஏறக்குறைய ஒரு பைண்டு அளவு சுத்தமான சாராயம் குடிப்பதற்குச் சமமாக இருக்கிறது. மக்களின் ஆரோக்கியத்தின் மேல் இப்படிப்பட்ட தீங்கானப் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பைக் கொண்டில்லையென்றால் அது உண்மையில் ஆச்சரியமாக இருக்கும்.

வேறு எவரையும்விட ஜப்பானிய மக்களே அதிகமான உயிர்வாழும் எதிர்பார்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய புகையிலை மற்றும் சாராய நுகர்வு விகிதம் மற்ற சிலவற்றைவிட குறைவாக இருப்பதாகவும் வாதாடினாலும் இப்படியாக ஒப்பீடு செய்வது முடிவில் அர்த்தமற்றவையாக இருக்கின்றது. மக்கள் உரியகாலத்துக்கு முன்பாகவும் அனாவசியமாகவும் மரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஆரோக்கியமுள்ளவர்களாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா?

அப்படியென்றால் நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய வாழ்க்கைப் பாணி மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களின் முழு மொத்தத் தொகயைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. நல்ல ஆரோக்கியம் சமநிலையான ஒரு வாழ்க்கைமுறையை உட்படுத்துகிறது. இது நம்முடைய சரீரம், மனது, உணர்ச்சிகள் மற்றும் சமுதாய வாழ்க்கை சம்பந்தமாக நலமுடன் இருப்பதில் விளைவடைந்து, நம்முடைய சுற்றுப்புறச்சூழலைச் சமாளித்து, நம்முடைய அன்றாட நடவடிக்கைகளிலிருந்து நியாயமான சந்தோஷத்தையும் மனநிறைவையும் பெற்றுக் கொள்ள நமக்கு உதவிபுரிகிறது. அதை முயன்று அடைய நாம் என்ன செய்யலாம்? (g89 12/8)

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

பரம்பரையும் சுற்றுப்புறச்சூழலும் பங்கேற்றுச் செயலாற்றுகின்றன, ஆனால் நம்முடைய வாழ்க்கை முறையே நம்முடைய ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்தும் தனியொரு அதிமுக்கியமானக் காரியமாகும்

[பக்கம் 5-ன் படம்]

நல்ல ஆரோக்கியமானத் தோற்றம் ஏமாற்றுவதாக இருக்கக்கூடும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்