உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 1/8 பக். 16-17
  • ஒரு பிள்ளையின் பார்வையினூடே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு பிள்ளையின் பார்வையினூடே
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவர்கள் சின்னப் பெரியவர்களல்லர்
  • வற்புறுத்துவதைவிட ஊக்குவித்து வழிநடத்துங்கள்
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
    குடும்ப வாழ்க்கை
  • சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?
    விழித்தெழு!—2007
  • பாராட்டுங்கள்!
    விழித்தெழு!—2016
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 1/8 பக். 16-17

ஒரு பிள்ளையின் பார்வையினூடே

அநேக பெற்றோர் இந்த ஒரு குறிப்பையாவது ஒப்புக்கொள்வார்கள்: ஒரு பிள்ளையை வெற்றிகரமாக வளர்ப்பதுதானே தாங்கள் எதிர்ப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று. இதை எப்படிச் செய்வது, இதில் வெற்றி காண்பது எப்படி என்பதன்பேரில் எண்ணிலடங்கா சொற்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றபோதிலும், பெற்றோராயிருந்தாலுஞ்சரி, தாத்தா, பாட்டிமார்களாக இருந்தாலுஞ்சரி, சித்தப்பா, சித்திமார்களாக அல்லது மாமா, அத்தைமார்களாக இருந்தாலுஞ்சரி, அல்லது வெறுமென நண்பர்களாக இருந்தாலுஞ்சரி, எல்லாப் பெரியவர்களுக்கும் கிட்டிடும் ஒரு முறை இருக்கிறது. பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பயிற்றுவித்தல் என்ற காரியத்துக்கு வரும்போது, நீங்கள் ஒரு பிள்ளையின் பார்வையினூடே காரியங்களைப் பார்ப்பதற்கு முனைந்திருக்கிறீர்களா? அந்தச் சிறுவர் மனதில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

பிள்ளைகள் சின்னஞ்சிறு மக்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர்களைப்பற்றிய இந்த நோக்குநிலையைக் கொண்டிருத்தல், நாம் அவர்களால் எவ்விதம் நோக்கப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். அளவிலும், அதிகாரத்திலும், சக்தியிலும் பெரியவர்களாயிருக்கும் ஒரு மக்கள் உலகில் அவர்கள் சிறுவர்களாகப் பிறக்கின்றனர். ஒரு பாலகனுக்குப் பெரியவர்கள் பாதுகாப்பையும், ஆறுதலையும், உதவியையும் அளிப்பவர்களாகக் காணப்படக்கூடும் அல்லது அச்சுறுத்தும் கொடியவர்களாக காணப்படக்கூடும்.

அவர்கள் சின்னப் பெரியவர்களல்லர்

உட்பார்வை சம்பந்தமான மற்றொரு முக்கியமான குறிப்பு, அவர்களைச் சின்னப் பெரியவர்களாக நடத்தும் தவற்றைச் செய்யாதிருக்கக் கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். சிறுபிள்ளைப் பிராயம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான பருவமாக இருந்திட வேண்டும். அந்தப்பருவத்தை அவர்கள் வேகமாகக் கடந்திட துரிதப்படுத்திடவோ அல்லது அந்தப் பருவத்தை முற்றும் இழந்திடச் செய்யவோ அவசியம் இல்லை. அவர்கள் அதை அனுபவித்து மகிழட்டும். காலப்போக்கில் அவர்கள் நல்லவிதத்தில் பக்குவப்பட்ட பெரியவர்களாக ஆவதற்கு வேண்டிய ஒழுக்க நியமங்களை அவர்களில் வளர்த்திடுவதற்கான வாய்ப்பைப் பெற்றோராக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிறு குழந்தைகளைக் கையாளும் காரியத்தில் காரியங்களை ஒரு பிள்ளையின் பார்வையினூடே பார்ப்பதன் மதிப்பு சற்றும் குறைந்துவிடுவதில்லை. உதாரணமாக, அழுகையை எரிச்சலுற்ற பெற்றோர் அவர்களை அடிப்பதற்கு ஓர் அழைப்பாக எடுத்துக்கொள்ளக்கூடது. பிறந்த குழந்தையின் அழுகை அல்லது சிணுக்கம் தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்துவதற்குரிய இயல்பான வழியாக இருக்கிறது. தன்னுடைய தாயின் கர்ப்பத்தில் பாதுகாப்பாய் இருந்து வெளியே வரும் குழந்தை தன்னுடைய எண்ணத்தை நன்றாக அழுது தெரிவிக்கிறது!

வற்புறுத்துவதைவிட ஊக்குவித்து வழிநடத்துங்கள்

தங்களைத் தாங்கள் வெளிப்படுத்திட பிள்ளைகள் மேற்கொள்ளும் முயற்சிகளை உற்சாகப்படுத்திடுவது நல்லது. அவர்களுடைய கருத்து பிரச்னைகளை வெளிப்படுத்தக்கூடும், தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட பிரச்னை தீர்ப்பதற்கு மிகவும் எளிது. ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்திடச் செய்வது எவ்வளவு முக்கியமோ, அவர்களுடைய வார்த்தைகளுக்கு நாம் எவ்விதம் பிரதிபலிக்கிறோம் என்பதும் அந்தளவுக்கு முக்கியமானது. நாம் பிள்ளைகளுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து பெற்றோர் என்ற பத்திரிகையின் துணையாசிரியர் வெண்டி ஷுமென் பின்வரும் ஆலோசனைக் கூறுகிறார்: “மற்றொருவரின் நிலையில் நம்மை வைத்துப் பார்க்கும் தன்மையை வார்த்தைகளில் அமைப்பது . . . பெற்றோர்–பிள்ளைப் பேச்சுத்தொடர்புகள் சம்பந்தமாக அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளின் அடிப்படை மையக் கருத்தாகும். ஆனால் அது வார்த்தைகளில் மொழிபெயர்க்கப்படாவிட்டால் மற்றொருவர் நிலையில் தன்னை வைத்துப்பார்ப்பது மட்டுமே போதது. இது பெரும்பாலான பெற்றோரின் உதடுகளினூடே இயல்பாக வெளிப்படுவதில்லை.”

வேறு வார்த்தைகளில் குறிப்பிடவேண்டுமானால், திருத்தம் தேவைப்படுமளவுக்கு அவமரியாதையாக ஒரு பிள்ளை நடந்துகொண்டால், அல்லது அதிர்ச்சியளிக்கும் ஏதோ ஒன்றைச் செய்திருந்தால், நம்முடைய மனநிலையும் குரலும் கோபவேசத்தை அல்லது எரிச்சலை வெளிப்படுத்திடக்கூடது. உண்மைதான், இதைச் செய்வது சொல்வதைவிட கடினம். “முட்டாள்,” அல்லது “உன்னால் எதையுமே சரியாக செய்ய முடியாதா?” போன்ற கொடூரமான அல்லது மட்டுப்படுத்தும் பதில்கள் ஏற்கெனவே இருக்கும் கடினமான சூழ்நிலைமையை மாற்றிடாது.

விசேஷமாக புத்திமதி கொடுப்பதற்கு முன்பு அவர்களுடைய நிலையில் தன்னை வைத்துப் பார்த்து போற்றுதலளிப்பது நல்ல பலன்களைக் கொடுக்கக்கூடும் என்று அநேக பெற்றோர் கண்டுபிடித்திருக்கின்றனர். ஒரு பிள்ளையின் பார்வையினூடே பார்ப்பதற்கு இதோ இன்னொரு சந்தர்ப்பம். பெரும்பாலான பிள்ளைகள் அப்படிப்பட்ட போற்றுதல் ஓர் உள்நோக்குடன் அல்லது இருதயப்பூர்வமாகக் கொடுக்கப்படுகிறதா என்பதை அறிந்தவர்களாயிருக்கிறார்கள். எனவே நம்முடைய பிள்ளைகளுக்குப் போற்றுதலளிக்கும்போது, அந்தப் போற்றுதல் உண்மையானது, தகுந்தது என்பதை நாம்தாமே நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிறுவர் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஹேம் G. கினோட் பெற்றோருக்கும் பிள்ளைக்குமிடையே என்ற தன்னுடைய புத்தகத்தில், பெற்றோர் அந்தப் பிள்ளையைப் போற்றுவதைவிட அதன் சாதனைகளையே போற்றவேண்டும் என்று அழுத்தமாகக் கூறுகிறார். உதாரணமாக, உங்களுடைய மகன் ஒரு புத்தக அலமாரியைச் செய்து அதிகப் பெருமையோடு உங்களிடம் காண்பிப்பானானால், ‘அந்தப் புத்தக அலமாரி கவர்ச்சியாயிருப்பது மட்டுமின்றி, நடைமுறையாகவும் இருக்கிறது,’ என்று நீங்கள் கூறுவது அவனுடைய நம்பிக்கையை வளர்த்திடும். ஏன்? ஏனென்றால் நீங்கள் அவனுடைய சாதனையைப் போற்றுகிறீர்கள். எனவே உங்களுடைய போற்றுதல் பிள்ளைக்கு உண்மையாகவே இருக்கிறது. என்றபோதிலும் ‘நீ ஒரு நல்ல தச்சன்,’ என்று நீங்கள் சொல்வது அப்படி இராது, ஏனென்றால் நீங்கள் ஒரு நபராக அவனில் கவனத்தைத் திருப்புகிறீர்கள்.

டாக்டர் கினோட் கூறுகிறார்: “போற்றுதல் ஒரு பிள்ளையின் நம்பிக்கையை வளர்த்து அவனைப் பாதுகாப்பாக உணரச்செய்கிறது என்று அநேகர் நம்புகின்றனர். உண்மையில் போற்றுதல் அழுத்தத்திலும் தவறான நடத்தையிலும் விளைவடையக்கூடும். . . . ‘நீ எவ்வளவு நல்ல பையன்,’ என்று பெற்றோர் சொல்லும் போது அதை அவன் ஏற்றுக்கொள்ள முடியாதவனாயிருக்கக்கூடும், ஏனென்றால் தன்னைப்பற்றி தான் அறிந்திருப்பதுதானே முற்றிலும் வித்தியாசமாயிருக்கக்கூடும். . . . போற்றுதல் அந்தப் பிள்ளையின் ஆள்தன்மை சம்பந்தப்பட்டதாயிருக்கக்கூடாது, ஆனால் அவனுடைய முயற்சிகளையும் சாதனைகளையும் உட்படுத்தியதாயிருக்கவேண்டும். . . . போற்றுதலுக்கு இரண்டு பகுதிகள் உள்ளன: நம்முடைய வார்த்தைகளும் பிள்ளை அதைப் புரிந்துகொள்ளும் விதமும். நாம் பிள்ளையின் முயற்சியையும், வேலையையும், சாதனையையும், உதவியையும், கரிசனையையும் போற்றுகிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகள் தெளிவாகக் குறிப்பிடுவதாயிருக்கவேண்டும்.”

போற்றுதலளிப்பதற்கான இந்த நல்ல ஆலோசனை, தயாள குணத்தைக் காண்பிக்கவேண்டும் என்ற நீதிமொழிகள் 3:27-ல் காணப்படும் ஆவியால் ஏவப்பட்ட புத்திமதிக்கு இசைவாக இருக்கிறது: “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.”

நாம் என்ன நல்ல ஆலோசனை அல்லது ஞானமான புத்திமதியை வாசித்தாலும், ஒரு மகனை அல்லது மகளை வளர்ப்பதில் 20-ஆண்டு திட்டம் என்று சிலர் குறிப்பிட்டுள்ள காரியத்திற்கு வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. அதற்கு பெறுமை, அன்பு, புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் கரிசனை தேவைப்படுகிறது. ஆனால் வெற்றிக்கு மிகச் சிறந்த வழி என்னவெனில், “ஒரு பிள்ளையின் பார்வையினுடே” உங்களுடைய சிறுவரின் நடத்தையைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்வதாகும்.

“ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்,” என்று அரசனாகிய சாலொமோன் ஞானி எழுதினான். (நீதிமொழிகள் 10:1) உங்களுடைய பிள்ளை யோசிக்கும் விதம் மற்றும் அதன் எண்ணத்தை நீங்கள் மேன்மையான வழியில் புரிந்துகொள்ளுதல்தானே இந்த மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உதவுவதாக. (g90 1/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்