இனிய பாடலால் இன்புறச்செய்யும் சின்னஞ்சிறு சிவப்புப் பறவை
ஓர் இனிய பாடலால் இன்புறச் செய்யும் சின்னஞ்சிறு சிவப்புப் பறவையால் நீங்கள் எப்பொழுதாவது உங்கள் நித்திரையிலிருந்து விழித்ததுண்டா? நீங்கள் வட அமெரிக்காவில் வாழ்ந்தால், அதுவே உங்கள் தூக்கத்திலிருந்து இன்பமாக எழுந்திருக்கும் அனுபவமாக இருக்கும். ஏனென்றால் இசை பாடும் பிரபல பறவைகளில் ஒன்று—கார்டினல்—தன் கூட்டை உலகின் அப்பகுதியில் அமைக்கின்றது. ஆண் கார்டினல் தெளிவான ஒரு விசில் சத்தத்துடன் தன் பிராந்தியத்தை அளவிடுகிறது. அவன் தொடர்ந்து பாடும், சாதனை படைக்கும் ஒரு பாடகனாக இருக்க முடியும்! “ஓர் ஆண் கார்டினல் பறவை வித்தியாசமான இசை ஒலிகளை அமைத்து 28 பாடல்களைப் பாடியது பதிவுசெய்யப்பட்டது,” என்கிறது சர்வதேச வனவாழ்வு என்சைக்ளோபீடியா.
இந்த அழகிய பறவை ஏறக்குறைய எட்டு அங்குலம் நீளமுடையதும், பளிச்சென்று இருக்கும் சிவப்புச் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னுடைய அலகைச் சுற்றி கருப்பு “கழுத்தாடையையும்” கொண்டது. என்றபோதிலும், பெண் பறவை மங்கிய காவி நிற சிறகுகளைக் கொண்ட மேல் சட்டையை அணிந்திருக்கிறாள். மிகவும் குறைந்து காணப்படும் பாடக்கூடிய பெண்பறவைகளின் இனத்தைச் சேர்ந்தவள்.
நீங்கள் எங்கு வாழ்ந்தாலுஞ்சரி, இசை பாடும் ஒரு பறவையின் இனிய குரலை அடுத்த முறை கேட்கும் போது, உங்கள் பரலோக சிருஷ்டிகருடைய தனிச்சிறப்பான ஞானத்திற்கும் திறமைக்கும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். இசை பாடும் பறவைகள் வண்ணமும் இன்பமும் கொண்ட அவருடைய ஈவுகளில் ஒன்று.—சங்கீதம் 148:7–10. (g90 3/8)