உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 10/8 பக். 14-15
  • உலகிலேயே மிகுந்த மதிப்புடைய திரவம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகிலேயே மிகுந்த மதிப்புடைய திரவம்
  • விழித்தெழு!—1991
  • இதே தகவல்
  • இரத்தத்தின் உண்மையான மதிப்பு
    விழித்தெழு!—2006
  • அதிசயமான இரத்தச் சிவப்பணுக்கள்
    விழித்தெழு!—2006
  • உங்கள் உடலில் உள்ள நுண்ணிய “வண்டிகள்”
    விழித்தெழு!—2001
  • இரத்தத்தால் உயிரைப் பாதுகாத்தல்—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 10/8 பக். 14-15

உலகிலேயே மிகுந்த மதிப்புடைய திரவம்

இரத்தமேற்றுதல்கள் வெகுவாய்ப் பேராசைமிகுந்த தொழிலின் ஆபத்தான மற்றும் தேவையற்ற பொருட்கள் என்று விலக்கப்பட்டாலும், யெகோவாவின் சாட்சிகள் ஏன் அதை மறுக்கிறார்கள் என்பதை அது விளக்குவதாயிராது. அவர்களுடைய காரணங்கள் முற்றிலும் வித்தியாசமானதும் அதிக முக்கியமானதுமாய் இருக்கின்றன. அவை யாவை?

ஒரு துளி இரத்தத்தைச் சர்வசாதாரணமாக நோக்குவது மிகவும் எளிது. அது ஒரு சிறிய கீறலினால் அல்லது ஊசிக்குத்தினால் ஒளிரும் சிறிய செந்நிறக் குவிமாடமாய் எழும்பிட, நாம் சற்றும் சிந்தியாமல் அதைக் கழுவி அல்லது துடைத்துவிடுகிறோம்.

ஆனால் இந்தக் குவிமாடம் நம்முடைய தலைக்கு மேல் ஒரு மலைபோல் இருக்குமளவுக்கு நம்மை நாம் சிறுத்திட முடிந்தால், இந்தச் செந்நிற ஆழங்களில் வியந்திடச்செய்யும் சிக்கலான அமைப்பையும் ஒழுங்கையும் காண்போம். அந்த ஒரு துளியில் மகா பெருஞ் சேனையாய் உயிரணுக்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன: 25,00,00,000 சிவப்பணுக்கள், 4,00,000 வெள்ளையணுக்கள், மற்றும் 1,50,00,000 பிளாட்டலெட்டுகள், இவை அணியில் ஒரு சில மட்டுமே. இரத்த ஓட்டத்தில் செயல்பட செலுத்தப்படும்போது, ஒவ்வொரு சேனையும் வித்தியாசமான செயல்களை நிறைவேற்றப் புறப்படுகின்றன.

சிவப்பு அணுக்கள் செங்குழாய் நாள மண்டல கடுஞ்சிக்கலான இணைப்பினூடே விரைந்து, நுரையீரல்களிலிருந்து பிராணவாயுவை உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் எடுத்துச்செல்வதோடு, கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இந்த உயிரணுக்கள் அவ்வளவு சிறியவையாக இருப்பதால், அவற்றில் 500 அணுக்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினால், 0.1 சென்டிமீட்டர் உயரம்தான் இருக்கும். என்றபோதிலும், உங்களுடைய உடலிலுள்ள அனைத்து சிவப்பணுக்களையும் அவ்விதம் அடுக்கினால் 50,000 கிலோ மீட்டர் உயரத்திற்குச் செல்லும்! உடலினூடே நாள் ஒன்றுக்கு 1,440 முறைகள் என்ற கணக்கில் 120 நாட்கள் பயணத்தை மேற்கொண்ட பின்னர் சிவப்பணுக்கள் ஓய்வு பெற்றுவிடுகின்றன. இரும்புச்சத்து மிகுந்த அதன் கரு திறம்பட்ட விதத்தில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது, மற்றவை நீக்கப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் முப்பது லட்சம் சிவப்பணுக்கள் நீக்கப்படுகின்ற அதே சமயத்தில் புதியவை எலும்பு மச்சையில் அதே எண்ணிக்கையில் உண்டுபண்ணப்படுகின்றன. சிவப்பு அணுக்கள் ஓய்வு பெறுவதற்குரிய சரியான வயதை எட்டிவிட்டன என்பது உடலுக்கு எப்படித் தெரியும்? இது விஞ்ஞானிகளுக்கு ஒரு விந்தை. ஆனால் பழைய சிவப்பு அணுக்களை மாற்றும் இந்த ஒரு முறை இல்லாதிருந்தால், “நம்முடைய இரத்தம் இரண்டே வாரங்களில் கான்கிரீட் போன்று கெட்டியாகிவிடும்.”

அதற்கிடையில், வெள்ளையணுக்கள் உடலைத் தாக்குபவற்றைத் தேடி அழித்திடும் ஒரு பணியில் மும்முரமாய்ச் சுற்றிவருகின்றன. பிளாட்டலெட்டுகள் எங்கேனும் ஒரு வெட்டு இருந்தால் அவ்விடத்துக்கு உடனே விரைந்து அவ்விடத்தில் இரத்தம் உறைந்து வெட்டு மூடப்படுவதற்கான ஒரு செயல்முறையைத் துவக்குகின்றன. இந்த செல்கள் அனைத்துமே பிளாஸ்மா என்று அழைக்கப்படும் ஒரு தெளிவான, தந்த-வண்ண திரவத்தில் இருக்கின்றன; இந்தப் பிளாஸ்மாதானே நூற்றுக்கணக்கான வஸ்துக்களாலானது, இவற்றில் பல இரத்தத்தின் நீண்ட செயல் கடமைப் பட்டியலின் காரியங்களை நிறைவேற்றிடுவதில் முக்கிய பாகம் வகிக்கின்றன.

இரத்தம் செய்யும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் விஞ்ஞானிகள் தங்களைக் காண்கிறார்கள், அப்படியிருக்க அதைப்போன்ற ஒன்றைச் செய்வதைக் குறித்து யோசிப்பதற்கில்லை. அற்புதமான, சிக்கலான அமைப்புகொண்ட இந்தத் திரவம் ஒரு கைதேர்ந்த வடிவமைப்பாளரின் கைவேலையாக இருப்பதைத் தவிர வேறு எதுவுமாக இருக்க முடியுமா? மனிதனிலும் மேம்பட்ட சக்திபடைத்த சிருஷ்டிகர் தம்முடைய படைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் அனைத்து உரிமையும் கொண்டவர் என்பது நியாயம் அல்லவா?

யெகோவாவின் சாட்சிகள் எப்பொழுதுமே அவ்விதமாக எண்ணிவந்திருக்கின்றனர். பைபிள் மிகச் சிறந்த வாழ்க்கையை எவ்விதம் வாழ்வது என்பதற்குரிய வழிமுறைகளைக் கொண்டிருக்கும் சிருஷ்டிகரின் கடிதம் என்பதாக அவர்கள் கருதுகிறார்கள்; இது இரத்தம் பற்றிய காரியத்தில் அமைதியாக இருந்துவிடும் ஒரு புத்தகம் அல்ல. லேவியராகமம் 17:14 சொல்லுகிறது: “சகல மாம்சத்தின் உயிரும் [ஆத்துமாவும், NW] அதின் இரத்தந்தானே”—சொல்லர்த்தமாக அல்ல என்பது உண்மைதான், ஏனென்றால் உயிருள்ள ஒவ்வொன்றும் ஆத்துமாவாக இருக்கிறது என்றும் பைபிள் சொல்லுகிறது. மாறாக, அனைத்து ஆத்துமாக்களின் உயிரும் பிரிக்கமுடியாதளவுக்கு இரத்தத்தோடு இணைக்கப்பட்டும் அதனால் ஆதரிக்கப்பட்டும் இருப்பதால், பொருத்தமாகவே இரத்தம் உயிரைப் பிரதிநித்துவம் செய்யும் ஒரு பரிசுத்த திரவமாக நோக்கப்படுகிறது.

சிலருக்கு அதைப் புரிந்துகொள்வது கடினமாயிருக்கிறது. வெகு சிலவற்றையே பரிசுத்தமாகக் கருதும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். உயிர்தானே மதிக்கப்படவேண்டிய வகையில் மதிக்கப்படுவது அரிதாயிருக்கிறது. அப்படியிருக்க, வேறு எந்த ஒரு சரக்குப் பொருளைப் போலவே இரத்தமும் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் சிருஷ்டிகரின் விருப்பங்களை மதிக்கிறவர்கள் அதை அவ்விதம் கையாளுவதில்லை. ‘நீங்கள் இரத்தத்தைப் புசிக்க வேண்டாம்,” என்பது நோவாவுக்கும் அவனுடைய சந்ததிக்கும்—எல்லா மனிதவர்க்கத்துக்கும்—கடவுளுடைய கட்டளை. (ஆதியாகமம் 9:4) எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் அந்தக் கட்டளையை இஸ்ரவேலருக்குக் கொடுத்த தம்முடைய பிரமாணத்தில் உட்படுத்தினார். பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் அதை கிறிஸ்தவ சபைக்கும் மீண்டும் உறுதிப்படுத்தினார்: ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்.’—அப்போஸ்தலர் 15:20.

யெகோவாவின் சாட்சிகள் அடிப்படையில் அந்தப் பிரமாணத்தைப் பின்பற்றுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய சிருஷ்டிகரைப் பிரியப்படுத்த விரும்புகிறார்கள். தம்முடைய சொந்த குமாரனின் பலிக்குரிய மரணத்தின் மூலம், சிருஷ்டிகர் மனிதவர்க்கத்திற்கு உயிரைக் காக்கும் இரத்தத்தை ஏற்கெனவே அளித்துவிட்டார். அது உயிரை ஒரு சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அல்ல, ஆனால் என்றைக்குமாக நீடிக்கச் செய்யும்.—யோவான் 3:16; எபேசியர் 1:7.

மேலும், இரத்தத்திற்கு விலகியிருத்தல் சாட்சிகளை எண்ணிலடங்கா ஆபத்துகளிலிருந்து பாதுகாத்திருக்கிறது. இன்று யெகோவாவின் சாட்சிகளைத் தவிர மற்ற அநேகரும் இரத்தமேற்றுதல்களை மறுக்கின்றனர். மருத்துவ சமுதாயம் மெதுமெதுவாகச் சாதகமாய்ப் பிரதிபலிக்கின்றனர், மற்றும் இரத்தத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துவருகின்றனர். அறுவை மருத்துவ ஆண்டு தொகுப்பேடு கூறுவது போல் இருக்கிறது: “தெளிவாகவே, மிகுந்த பாதுகாப்பானது இரத்தமேற்றப்படாததே.” இரத்தமேற்றுதல் நல்ல சிகிச்சை அல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் வெகு காலமாக வலியுறுத்திவந்திருக்கின்றனர் என்று நோய்க்குறியியலர் என்ற பத்திரிகை குறிப்பிட்டது. மேலும் அது கூறியது: “அவர்களுடைய கருத்தை ஆதரிப்பதற்குப் போதியளவு ஆதாரம் இருக்கிறது, இதற்கு எதிர்மாறாக இரத்த வங்கியரின் எதிர்ப்பின் மத்தியிலும் இது இப்படி இருந்திருக்கிறது.”

நீங்கள் யாரை நம்புவீர்கள்? இரத்தத்தை வடிவமைத்த அந்த ஞானியையா? அல்லது இரத்தம் விற்பனையை ஒரு பெரிய வியாபாரமாக்கியிருக்கும் மக்களையா? (g90 10/22)

[பக்கம் 15-ன் படங்கள்]

மானிட இரத்த நாள மண்டலம், தந்துகிகள் (உட்படம்) மிகவும் நுண்ணிய குழாய்களாயிருப்பதால், இரத்த அணுக்கள் அவற்றினூடே தனித்தனியாய்ச் செல்லவேண்டியதாயிருக்கின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்