பூர்வ காலத்தில் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள்
வரலாற்றுப் பேராசிரியரும், முன்னாள் போலந்து கலாச்சார அமைச்சருமான அலெக்சாண்டர் கிராசக், பொலிட்டிகா (Politica) என்ற வாரப் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதினார். புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிய வரலாற்று பின்னணியைக் கலந்தாலோசித்தப் பின்னர் அவர் குறிப்பிட்டதாவது:
“பண்டைய கால ரோமர்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களைக் குறித்து அறிந்திருந்தார்களா? சந்தேகத்துக்கு இடமின்றி ஒருவர் ரோம பேராசைக் குறித்துக் கவனிக்கும்போது. . . . அத்தகைய களியாட்டங்கள் அதிக மகிழ்ச்சிக்கும், கட்டுப்பாடற்ற காரியங்களைச் செய்வதற்கான சமயங்களாக இருந்தன. இது அரசு-புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிய பூர்வ கிறிஸ்தவர்களின் மனநிலையைப் பாதித்தது. அத்தகைய வழக்கம் இழிவானதாகவும், முற்றிலும் புறமதத்திற்கே உரியதாகவும், அறிவொளியூட்டப்பட்ட மதத்தைச் சேர்ந்த வணக்கத்தாருக்கு அது அதன் வடிவத்திலும், ஆவியிலும் புறம்பானதாகவும் இருந்ததாக அவர்கள் கருதினர். தெய்வங்களுக்குப் பலிகள் இடப்பட்டன. இதன் காரணமாக, சர்ச் தன்னுடைய வணக்கத்தாரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விசேஷமாக களியாட்டங்களில் எத்தகைய பங்கையும் வைத்துக் கொள்ள உறுதியாகத் தடை செய்தது.”
கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கான தேதியைக் குறித்து முடிவு செய்வதைப் பற்றி பேராசிரியர் தொடர்ந்து விளக்கம் கொடுக்கிறார்:
“டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடும் ரோமர்களின் பழக்கம், நான்காம் நூற்றாண்டிலிருந்துதான் வழக்கத்தில் இருந்து வந்தது. வெல்லப்படாத சூரியனின் பிரபலமான பண்டிகையைக் கிறிஸ்தவ மயமாக்குவது இவ்வாறு சாத்தியமாயிற்று.
“ரோம் நகரம் தன்னுடைய பேரரசு வீழ்ச்சியடைந்த போதிலும், இவ்விரண்டு வருடாந்தர நாட்களைப் பற்றிய தன்னுடைய பாரம்பரியத்தையும் விருப்பத்தையும், முதலில் மேற்கத்திய நாகரிகத்தையும் விருப்பத்தையும், முடிவில் முழு உலகத்தையும் மெதுவாகவும் உறுதியாகவும் ஏற்றுக் கொள்ளும்படி செய்தது. என்றபோதிலும், ஜனவரி முதலாம் தேதியைப் புத்தாண்டின் ஆரம்பமாக ஏற்றுக் கொண்டது, விருந்துகள், திருமண வைபவங்கள், பரிசளிப்புகள், வாழ்த்துக்கூறல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத்திற்கு வெற்றியாக இருந்தது. பண்டைய கிறிஸ்தவர்கள் காட்டிய தீவிர வெறுப்பின் மத்தியிலும் இது இவ்வாறு இருந்தது.”
புத்தாண்டின் கொண்டாட்டங்கள் புறமதத்திலிருந்து தோன்றியவை என்று நிலைநாட்டின பேராசிரியர் கிராசக், இந்தப் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் பங்கு கொள்வதைக் குறித்து எவ்வாறு உணருகிறார்? கிறிஸ்தவர்களுக்கு அவருடைய சொந்த வேண்டுகோள்:
“கிறிஸ்தவர்கள் ஒழுக்கரீதியான முறையில் தங்களுடைய பூர்வகால சக-விசுவாசிகளுடைய வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும் நிலையில் இருக்க வேண்டும். உருவங்களும், சிலைகளும் கொண்ட பகட்டான ஆலயங்கள், விலையுயர்ந்த அங்கிகள் அல்லது வழிபாட்டுப் பாத்திரங்கள் ஆகியவை இல்லாத இது, எவ்விதமான மதம்?” என்று புறமதத்தினர் ஏளனமாகச் சொன்னபோது, பூர்வ கிறிஸ்தவர்கள் இவ்வாறு பதிலளித்தனர்: “நாங்கள் ஏழைகள் என்பது உண்மைதான். ஆனால் கடவுளிடமும் அயலானிடமும் உள்ள அன்பினால் நிறைந்த இருதயங்களே எங்களுடைய ஆலயங்கள்; எங்களுடைய வழிபாட்டு ஆடைகள் அடக்கம், கடும் உழைப்பு, கீழ்ப்படிதல், மனத்தாழ்மை ஆகியவை ஆகும்; வழிபாட்டுப் பாத்திரங்கள் எங்களுடைய நற்செயல்களே ஆகும்.”
“[கிறிஸ்தவர்கள்] அவிசுவாசிகளுடன் ஏறுமாறான ஓர் ஐக்கியத்தில் பிணைக்கப்படாமல் இருக்க வேண்டும். நீதியும் சட்டமீறுதலும் எவ்வாறு கூட்டாளிகளாக இருக்க முடியும்? அல்லது ஒளிக்கும் இருளுக்கும் சம்பந்தமேது? சாத்தானோடு கிறிஸ்து எவ்வாறு இணங்கிப் போக முடியும்? விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையே என்ன பங்கு இருக்க முடியும்? கடவுளுடைய ஆலயம், பொய் கடவுட்களோடு ஒப்புரவாக முடியாது, நாங்கள் ஆலயமாக இருக்கிறோம்—ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம் . . . ‘அவர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள், உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கர்த்தர் சொல்கிறார். ‘அசுத்தமான எதையும் தொடதிருங்கள்’” என்று பைபிள் 2 கொரிந்தியர் 6:14-18-ல் தெளிவாக கூறுகிறது.—நியு ஜெருசலம் பைபிள், ஒரு கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. (g90 12/22)