ஒரு பண்ணையை காண விரும்பிய ஆஃப்கான் அனாதைகள்
நவீன சமுதாயம் அதிகமதிகமாக நகரமயமாக்கப்படுவதால், லட்சக்கணக்கான பிள்ளைகள் ஒரு பண்ணையையும் அதன் மிருகங்களையும் காணவே முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆஃப்கானிஸ்தானில் உள்ள பிள்ளைகள் நிச்சயமாக ஓர் அமெரிக்க பண்ணையை காணவே முடியாது. போரினால் சூறையாடப்பட்டு, ஊனமாக்கப்பட்ட அனாதை பிள்ளைகள் அடங்கிய ஒரு சிறு தொகுதிக்கு உவாட்ச்டவர் பண்ணைகளை சென்று பார்க்க முடிந்தபோது ஏற்பட்ட கிளர்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். நியு யார்க் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணிநேரம் காரில் செல்லும் தூரத்தில் வால்க்கில் என்ற இடத்தில் உவாட்ச்டவர் பண்ணைகள் அமைந்திருக்கின்றன.
யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த பண்ணை-அச்சாலை வளாகத்தில் செய்யப்படும் எல்லா வேலைகளைப் பற்றியும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்ய அந்தத் தொகுதியோடு ஆஃப்கான் மொழிபெயர்ப்பாளர்கள் வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாலன்டியர் வேலையாட்கள் உவாட்ச்டவர் பண்ணைகள் குடும்பத்தில் அடங்கியுள்ளனர்.
அவர்களுடைய விஜயம் வரவேற்பு உபசரிப்போடு ஆரம்பமானது. தேநீரும் பலகாரமும் சாப்பிட்ட பிறகு, அவர்கள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அச்சடிக்க உபயோகப்படுத்தப்படும் பெரிய நான்கு-வண்ண அச்சியந்திரங்களை காண சென்றனர். “பண்ணை மிருகங்களை காண வேண்டும் என்று அவர்கள் உறுதியாக விரும்பினாலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையின் திறமையையும் அளவையும் அவர்கள் அனுபவித்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது” என்று ஒரு வழிகாட்டி சொன்னார்.
அவர் தொடர்ந்து சொன்னார்: “பிறகு, கன்றுக்குட்டிகளிடம் சென்றோம். அங்கே பிள்ளைகள் மிருகங்களை செல்லமாக கொஞ்சி அவைகளுக்கு தீனி கொடுப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அது பார்க்க வேண்டிய காட்சியாக இருந்தது—இளம் மிருகங்களுக்கு கொடுப்பதற்காக அதிகமதிகமான பச்சை இலைகளை கொண்டுவருவதற்கு பிள்ளைகள் ஓடினார்கள். கோழிக்கூண்டுகளிடம் சென்றபோது, எல்லாரும் சிறு குஞ்சுகளை கையில் பிடித்துக்கொண்டனர். அவர்களுக்கு மிகவும் விருப்பமான அமெரிக்க உணவு என்ன என்று கேட்டபோது, ‘கென்டக்கி கோழிக்கறி வறுவல்’ என்று அவர்கள் பதிலளித்தது வேடிக்கையாயிருந்தது!”
மதிய உணவு வேளை வந்தபோது, பெரிய பண்ணை குடும்பத்தோடு சாப்பாட்டு அறையில் அவர்கள் சோறும் கோழிக்கறியும் சாப்பிட்டனர். அதற்குப் பிறகு, வெகு தூரத்திலிருந்து வந்திருந்த அந்த இளம் பிள்ளைகளை வரவேற்பதற்கு பண்ணை குடும்பத்தினர் ஆர்வத்துடன் கூட்டமாக சென்றனர். அவர்கள் பிள்ளைகளை நேசித்தனர் என்பது தெளிவாக தெரிந்தது.
பிற்பகலில் பிள்ளைகள் டிராக்டர்கள் மீது ஏறி, ஸ்டியரிங் வீல்-ஐ பிடித்துக்கொண்டு விளையாடுவதில் அதிக மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் எல்லாரும் குதிரை மீது ஏறி சவாரி செய்ய விரும்பினர். அதற்கு அனுமதி சீக்கிரம் கிடைத்து விட்டது. அடுத்த பெரிய கிளர்ச்சி என்ன? உவாட்ச்டவர் பண்ணைகளின் தீயணைப்பு நிலையம். அதில் பெரிய பளபளப்பான சிவப்பு நிற தீயணைக்கும் வண்டி இருந்தது! என்னே கிளர்ச்சி! அதில் அவர்கள் வரிசை முறையாக ஏறி, அபாயச் சங்கை ஊதிக்கொண்டு சுற்றி வந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை அவர்களுடைய முகங்களில் நீங்கள் காணலாம். உலகமுழுவதிலும் உள்ள பிள்ளைகள் அடிப்படையாக அதே காரியங்களை தான் விரும்புகின்றனர்—வண்ணம், சப்தம்!
விஜயத்தைக் குறித்து அவர்களுடைய பிரதிபலிப்பு என்ன என்று கேட்டபோது, அஹமத் என்ற ஒரு பெரிய பையன் இவ்வாறு சொன்னான்: “அச்சடிக்கும் இயந்திரங்கள், உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் ஜெபம் செய்வது—சிற்றுண்டிச்சாலையில் இருந்த எல்லாவற்றையும் நான் அனுபவித்து களித்தேன்!” அவர்கள் எல்லாருமே மிருகங்களையும் குதிரை சவாரியையும் அனுபவித்தனர்.
அனாதைகளிடமாவது அல்லது வேறு எவரிடமாவது காட்டப்படும் தயவு, கிறிஸ்தவ விசுவாசத்தையும், அன்பான கடவுளாகிய யெகோவாவையும் பற்றி சிறந்த விதத்தில் சிபாரிசு செய்வதாக சேவிக்கக்கூடும் என்று இந்தச் சுருக்கமான அனுபவம் காட்டுகிறது. பைபிள் சொல்லுகிறபடி: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” (யாக்கோபு 1:27)—அளிக்கப்பட்டது. (g91 7⁄8)