உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 9/8 பக். 13-19
  • ஆபாசம் ஏன் ஆபத்தானது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆபாசம் ஏன் ஆபத்தானது
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆசைகளைத் தூண்டிவிடுதல் தவறா?
  • அதன் பிடியிலிருந்து விடுபடுவது எப்படி
  • ஆபாசத்தால் வரும் தீமை
    விழித்தெழு!—2003
  • ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • ஆபாசம்
    விழித்தெழு!—2013
  • ஆபாசம்​—விளையாட்டா விஷமா?
    ஆபாசம்—விளையாட்டா விஷமா?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 9/8 பக். 13-19

பைபிளின் கருத்து

ஆபாசம் ஏன் ஆபத்தானது

ஆபாசம் என்பது இலக்கியம் ஆபாசப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் மற்றும் ஆபாசக் காட்சிகளுக்கும் மாத்திரம் இனியும் கட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. அது வெளிப்படையாகச் சென்றிருக்கிறது. அது ஒவ்வொரு நாட்டிலும், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், புத்தகங்கள், தொலக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் போன்றவைகளில், சராசரி பிரஜைகளின் கண்களுக்கு முன் தள்ளப்படுகிறது. இவ்வளவு அதிகமாகப் பரவியுள்ள எதுவும் உண்மையிலேயே அவ்வளவு ஆபத்தானதாக இருக்கக்கூடுமா?

ஆபாசம் என்றால் என்ன? ஆபாசம் என்பது “பாலுணர்ச்சியைக் கிளரச்செய்யும் நோக்கத்தோடு, காமச்செயலை (படங்களில் அல்லது எழுத்துக்களில் உள்ளது போல) விவரித்துக்காட்டுவது” என விளக்கப்படுகிறது. அந்த விளக்கம் தெளிவாக உள்ளது. எது பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் எது தூண்டுவதில்லை என்பதைத் தீர்மானிப்பது வரும்போது தர்க்கங்கள் எழுகின்றன. எது ஆபாசமாக அமைகிறது என்பது ஓரளவு காண்பவரைச்சார்ந்தது என்பது உண்மையே. அதாவது, ஒரு நபருக்கு பாலுணர்ச்சியைக் கிளறிவிடுவது எதோ, அது மற்றொருவருக்கு அவ்வாறு இல்லாமலிருக்கலாம். இருப்பினும், ஒரு நிலையில், ஆபாசப் பொருட்கள், ஆண்கள் பெண்கள் ஆகிய ஏறக்குறைய ஒவ்வொருவரையும் பாதிப்பதாக சமீபத்தில் ஜெர்மனியில் 5,000 பேர்களை உட்படுத்திய ஒரு சுற்றாய்வு காட்டுகிறது.

ஆசைகளைத் தூண்டிவிடுதல் தவறா?

தகுதியான முறையில் திருப்திப்படுத்த வழியில்லையென்றால், சரியான ஓர் ஆசையை—எவ்வகையாயிருந்தாலும்—தூண்டிவிடுவது ஞானமற்றதாகும். உதாரணமாக, உங்களுடைய விருப்பப்பட்ட உணவுகளில் ஒன்று கிடைக்காதிருக்குமானால், பத்திரிகைகளிலோ அல்லது புத்தகங்களிலோ அதனுடைய படங்களை தொடர்ந்து உற்றுநோக்கிக் கொண்டிருப்பதால், ஒருவேளை நீங்கள் திருப்தியடையமாட்டீர்கள். மறுபட்சத்தில், நீங்கள்—ஒருவேளை ஆரோக்கியத்தின் காரணமாக—அதை உண்பதற்கு அனுமதிக்கப்படவில்லையென்றால், தொடர்ந்து அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் உங்களை ஆபத்தான மீறுதல்களுக்கு வழிநடத்தக்கூடும். அதேபோல, புகைபிடிக்கும் பழக்கத்தை உதறித்தள்ள முயற்சிசெய்யும் ஒருவர், மற்றவர்கள் புகைபிடிப்பதை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்க நேரத்தை செலவழிப்பதன்மூலம் அவர் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பை அதிகரிக்க முடியாது.

பாலின ஆசைகளைப் பொருத்த வரையில், பைபிளின் நோக்குநிலையில், ஓர் அன்பான திருமண வரம்பிற்குள் அவற்றை தகுந்த முறையில் திருப்திப்படுத்துவதிலிருந்தே சந்தோஷம் விளைவடைகிறது. (1 கொரிந்தியர் 7:2-5; எபிரெயர் 13:4) ஆதலால் திருப்திப்படுத்த முடியாத தன்னுடைய ஆசைகளைத் தூண்டிவிடுவது திருமணமாகாத ஒருவருக்கு எவ்வளவு ஞானமற்றதாய் இருக்கும்! இது ஏமாற்றத்திற்கு மாத்திரமே வழிநடத்தும் அல்லது, அதைவிட மோசமாக, தற்புணர்ச்சி அல்லது வேசித்தனம் போன்றவற்றை நாடிச்சென்று அவற்றை திருப்திப்படுத்தி, அதனால் தெய்வீகச் சட்டங்களையும் மற்றும் நியமங்களையும் மீறுவதற்கு வழிநடத்துகிறது.—1 தெசலோனிக்கேயர் 4:3-7.

நீங்கள் திருமணமானவராயிருந்தால் ஆபாசம் ஆபத்தானவையல்ல என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, நடத்தையைப் பற்றிய அந்த வேதப்பூர்வமான சட்டங்கள் திருமணமானவர்களுக்கும் கூட பொருந்துகின்றன. மேலும், ஆபாசம் சுயநல உணர்ச்சிகளுக்குக் கவர்ச்சியாய் தோன்றி, சொந்த இச்சைகளை திருப்தி செய்துகொள்ளும் இழிந்த உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கிறது, ஆனால் அன்போ ஒருவருடைய துணையின் தேவையைப் பூர்த்திச் செய்வதைச் சுற்றியிருக்கிறது. ஆபாச காரியங்கள் விட்டுக்கொடுக்கும் பண்பில்லாத மற்றும் தன்னலமுள்ள பாலுறவிற்கு வழிநடத்துகிறது, இது திருமண உறவினுள்ளும்கூட மரியாதையைக் குறைக்கக்கூடியதாயும் மற்றும் அன்பற்றதாயும் ஆகிவிடுகிறது.—1 கொரிந்தியர் 13:5.

திருமண அன்பை பலப்படுத்துவதற்கு பதிலாக, ஆபாசம் அதைக் குலைத்து, அதன் மதிப்பைக் குறைத்து அதைக் கொல்லுகிறது. ஆபாச சித்திரங்களில் விளக்கியுள்ளவற்றைப் போன்ற பாலின உறவுகள், மிக மோசமான வகையைச் சேர்ந்த கற்பனையாகும், ஏனென்றால் அது திருமணமானவரின் நெருங்கிய உறவைப் பற்றிய தவறான மற்றும் கெடுதலான செய்திகளைத் தெரிவிக்கிறது. மேலும், உண்மை-வாழ்க்கை உறவுகள் பாலின உறவுகளைவிட மிக உயர்ந்ததாகும்; அவை இரக்கம், மனமகிழ்ச்சி, பேச்சுத்தொடர்பு, மற்றும் அக்கறை ஆகியவற்றின் மீது கட்டப்பட்டவையாகும். எதிர்மாறாக, ஆபாசம் திருமணமான ஒரு தம்பதிக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கும் ஏதுவாகவும்கூட ஆகலாம்.

ஆபாசம் மனிதர்களை இயல்புணர்ச்சியினால் மாத்திரம் செயல்படும் விலங்குகளின் நிலைக்குத் தாழ்த்துகிறது. அது தேவ ஆவியின் கனியாகிய இச்சையடக்கத்தை உற்சாகப்படுத்துவதில்லை. (கலாத்தியர் 5:22, 23) அது முறைகேடான பாலின பழக்கங்களுக்குச் சுலபமாக வழிவகுக்கும். இவையெல்லாம் கிறிஸ்தவர்கள் ஏன் ஆபாசத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு சில காரணங்களே.

எனவே, பைபிளின் ஞானமான புத்திமதி: “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு . . . என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பை [நேரடியான பொருளில் அல்லது அதற்குப் பதிலாக ஆபாச காரியங்கள் மூலமோ] தழுவவேண்டியதென்ன?”—நீதிமொழிகள் 5:15-20.

எப்படி ஒரு நபர், ஆபாசத்தின் பிடியைத் தவிர்க்க மற்றும் அதிலிருந்து விடுபட முடியும்?

அதன் பிடியிலிருந்து விடுபடுவது எப்படி

ஆபாசத்தின் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து நிற்க பைபிள் இவ்விதம் புத்திமதி கூறுகிறது: “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம் (காமப் பசியை, NW) ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” (கொலோசெயர் 3:5) இங்கு, “அழித்துப்போடுங்கள்” என்ற வார்த்தை ஒழுக்கங்கெட்டச் செயல்களைச் செய்ய உபயோகிக்கும் எந்த ஓர் உடல் அங்கத்தையும்—வெறுமென கட்டுப்படுத்துவதையல்ல—கொன்றுபோடுவது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது.

எனினும், இது உடலை உட்படுத்தும் பொருளில் அல்ல, ஆனால் உருவக பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கிறிஸ்தவர்கள் தங்கள் உடலை முடமாக்க வேண்டியதில்லை. நாம் தகுதியற்ற பாலின எண்ணங்களைத் தீர்மானமாய்க் “கொன்றால்,” கண்கள் போன்ற, நமது உடலுறுப்புக்களை தவறான வழியில் பயன்படுத்தி, ஆபாசக் கவர்ச்சிக்கு நாம் இணங்காதிருப்போம். (மத்தேயு 5:29, 30-ஐ ஒப்பிடவும்.) இதன் காரணமாக, தகுதியற்ற ஆசைகளை “நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ” அவற்றைக்கொண்டு மாற்றீடு செய்து, மேலும் “அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்,” என்று பைபிள் அறிவுரை கூறுகிறது.—பிலிப்பியர் 4:8.

வேறு எதுவும்கூட உதவி செய்யக்கூடும்? கீழ்க்கண்டவற்றைப் போன்ற பைபிள் வசனங்களை மனதில் வைத்திருப்பது—ஒருவேளை மனப்பாடம் செய்வதும்கூட:

‘மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கியருளும்.’—சங்கீதம் 119:37.

“மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையு . . . மாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.”—1 யோவான் 2:16.

“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15.

ஒரு செயல் விளைவுத் தொடரைத் தொடக்கி மரணத்தில் முடிவடைகிற எதுவும் சரியாகவே ஆபத்தானது என்று சொல்லப்படலாம். ஆபாசம் அந்த விவரிப்பிற்குள் பொருந்துகிறது! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” ஆபாசம் நீங்கள் நித்திய ஜீவன் பெறுவதற்குத் தடையாயிருக்க அனுமதிக்காதீர்கள்!—கலாத்தியர் 6:8. (g91 9/8)

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

திருமண அன்பை பலப்படுத்துவதற்குப் பதிலாக, ஆபாசம் அதைக் குலைத்து, அதன் மதிப்பைக் குறைத்துவிடுவதன் மூலம் அதைக் கொல்லுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்